உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிக்காத்தான் நேசனல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிக்காத்தான் நேசனல்
Perikatan Nasional
National Alliance
சுருக்கக்குறிPN
தலைவர்முகிதீன் யாசின்
செயலாளர் நாயகம்அம்சா சைனுடின்
நிறுவனர்முகிதீன் யாசின்
துணைத் தலைவர்
  • அடி அவாங்
  • டொமினிக் லாவ்
  • புனிதன் பரமசிவன்
  • அகமட் பைசல் அசுமு
குறிக்கோளுரைஒற்றுமையை வலுப்படுத்துவோம்
Mengeratkan perpaduan"
("Strengthen unity")
தொடக்கம்23 பெப்ரவரி 2020 (2020-02-23)[1]
சட்ட அனுமதி14 செப்டம்பர் 2020[2]
பிரிவு
தலைமையகம்B4-3-1 Urbane Tower
1 Jalan Solaris Dutamas 1
Solaris Dutamas
50490 கோலாலம்பூர்
அரசியல் நிலைப்பாடுவலதுசாரி
நிறங்கள்          கருநீலம்; வெள்ளை
மலேசிய மேலவை
10 / 70
மலேசிய மக்களவை
68 / 222
மாநில சட்டமன்றங்கள்
210 / 611
மந்திரி பெசார்
4 / 13
தேர்தல் சின்னம்

(கிளாந்தான்; திராங்கானு தவிர்த்து)

(கிளாந்தான்; திராங்கானு மட்டும்)
கட்சிக்கொடி
இணையதளம்
Official party website
Campaign website

பெரிக்காத்தான் நேசனல் (மலாய்:Perikatan Nasional (PN); ஆங்கிலம்: National Alliance; சீன மொழி: 国民联盟 / 国盟); என்பது மலேசியாவில் 2020 மார்ச் மாதம் உருவாக்கப்பட்ட ஒரு கூட்டணிக் கட்சியாகும். 2020 மலேசிய அரசியல் நெருக்கடியின் தொடக்கத்தில் பாக்காத்தான் அரப்பான் (PH) அரசாங்கத்தை மாற்றும் நோக்கத்துடன் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி உருவாக்கப்பட்டது.

மலேசியாவின் 16-ஆவது யாங் டி பெர்துவான் அகோங் சுல்தான் அப்துல்லா, முறைசாரா அரசியல் கூட்டணியாக இருந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியின் நடைமுறைத் தலைவர் முகிதீன் யாசினை 2020-ஆம் ஆண்டில், மலேசியாவின் 8-ஆவது பிரதமராக நியமித்தார்.

பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியில்; பாரிசான் நேசனல் (BN), சரவாக் கட்சிகள் கூட்டணி (GPS), சபா மக்கள் கூட்டணி (GRS) மற்றும் பிற அரசியல் கட்சிகளும் மார்ச் 2020 முதல் நவம்பர் 2022 வரை உறுப்புக் கட்சிகளாக இருந்தன.

பொது

[தொகு]

பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி, மார்ச் 2020 முதல் ஆகஸ்டு 2021 வரை, அதன் தலைவர் முகிதீன் யாசின் தலைமையின் கீழ் மலேசிய அரசாங்கத்தை வழிநடத்தின. இருப்பினும் ஒரு கட்டத்தில் பாரிசான் நேசனல் தன் ஆதரவை மீட்டுக் கொண்டது. அதனால் மலேசிய மக்களவையில் பெரும்பான்மை ஆதரவை இழந்த முகிதீன் யாசின் தம் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார்.

முகிதீன் யாசின் பதவி துறப்புக்குப் பின்னர் அம்னோவின் துணைத் தலைவர் இசுமாயில் சப்ரி யாகோப் ஆகஸ்டு 2021 முதல் நவம்பர் 2022 வரை கூட்டணி அரசாங்கத்தின் பிரதமர் பதவியை ஏற்றுக் கொண்டார். மலேசியப் பொதுத் தேர்தல், 2022-க்குப் பின்னர் பிரதமர் பதவியை அன்வார் இப்ராகிம் ஏற்றுக் கொண்டார். இதற்குப் பின்னர் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி, மலேசியாவின் முன்னோடி எதிர்க்கட்சியாக மாறியது.[6][7][8][9][10]

பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அமைப்பு

[தொகு]

மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022

[தொகு]

2020-ஆம் ஆண்டில் இருந்து 2022-ஆம் ஆண்டு வரை மலேசியாவில் ஏற்பட்ட ஓர் அரசியல் நெருக்கடியை மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022 என குறிப்பிடுகிறார்கள்.

மலேசியாவின் 14-ஆவது மக்களவை உறுப்பினர்கள் (Members of the Dewan Rakyat, 14th Malaysian Parliament) தங்களின் கட்சி ஆதரவுகளை மாற்றியதால் இந்த நெருக்கடி ஏற்பட்டது. இதுவே மலேசிய நாடாளுமன்றத்தில் ஆளும் கூட்டணியின் பெரும்பான்மையை இழக்க வழிவகுத்தது; அடுத்தடுத்து இரண்டு கூட்டணி அரசாங்கங்கள் சரிவதற்கும் வழி அமைத்தது.

இந்த 18 மாத நெருக்கடியில், மலேசியப் பிரதமர்கள் இருவர் பதவி துறப்புகள் செய்தனர். அத்துடன் 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் (Snap General Election) நடைபெற்றது. இறுதியில் மலேசியாவில் ஓர் ஒற்றுமை அரசாங்கத்தை (National Unity Government) உருவாக்குவதற்கும் இந்த நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது.

பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கம்

[தொகு]

முகிதீன் யாசின் ஆட்சி 17 மாதங்கள் மட்டுமே நீடித்தது. அதன் பிறகு ஆகத்து 2021-இல் முகிதீன் யாசின் மற்றும் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) பதவி துறப்பு செய்ததன் மூலம் நிலைமை உச்சக்கட்டத்தை அடைந்தது. பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[11]

சில நாட்களுக்குப் பிறகு, முகிதீன் யாசினுக்கு பதிலாக இசுமாயில் சப்ரி யாகோப் ஒன்பதாவது பிரதமராக நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் சில மாநிலத் தேர்தல்களும்; 2022-ஆம் ஆண்டு உடனடிப் பொதுத் தேர்தலும் முன்கூட்டியே நடைபெற்றன. இதன் விளைவாக ஒரு தொங்கு நாடாளுமன்றம் உருவானது. ஓர் ஒற்றுமை அரசாங்கம் (National Unity Government) உருவாகுவதற்கும் அந்த அரசியல் நெருக்கடி வழிவகுத்துக் கொடுத்தது. இறுதியில் அன்வர் இப்ராகீம் பிரதமராக நியமிக்கப்பட்டார்.

உறுப்புக் கட்சிகள்

[தொகு]
சின்னம் பெயர் தலைவர்கள் போட்டியிட்ட
தொகுதிகள்
2022 முடிவு மக்களவை
தொகுதிகள்
சட்டமன்றத் தொகுதிகள்[12]
வாக்குகள் (%) தொகுதிகள் அமைவு
உறுப்பினர் கட்சிகள்
பெர்சத்து
BERSATU
மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி
Parti Pribumi Bersatu Malaysia
முகிதீன் யாசின் 87
13.55%
31 / 222
31 / 74
60 / 611
பாஸ்
PAS
மலேசிய இசுலாமிய கட்சி
Parti Islam Se-Malaysia
அடி அவாங் 61
14.56%
43 / 222
43 / 74
148 / 611
கெராக்கான்
GERAKAN
கெராக்கான்
Parti Gerakan Rakyat Malaysia
டோமினிக் லாவ் 23
1.97%
0 / 222
0 / 74
1 / 611
சபா கட்சி
SAPP
சபா முற்போக்கு கட்சி
Parti Maju Sabah[13]
யோங் தெக் லீ 1
(சபா மக்கள் கூட்டணி)
0.03%
0 / 222
0 / 74
1 / 611
மலேசிய இந்தியர் கட்சி
MIPP
மலேசிய இந்திய மக்கள் கட்சி
Malaysian Indian People's Party
புனிதன் பரமசிவன் புதியது புதியது
0 / 222
0 / 74
0 / 611

மேலும் காண்க

[தொகு]

மேலும் படிக்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Harian, Wartawan Sinar (2020-02-23). "Najib sahkan tandatangan SD sokong gabungan baharu". Sinarharian. பார்க்கப்பட்ட நாள் 2020-03-02.
  2. BERITA HARIAN, Muhammad Yusri Muzamir (2020-09-14). "Perikatan Nasional approved and legalised by ROS". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 2020-09-14.
  3. Ar, Zurairi (17 May 2020). "BN, Bersatu, PAS and three others agree to form Perikatan Nasional". Malay Mail இம் மூலத்தில் இருந்து 17 May 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200517120117/https://www.malaymail.com/news/malaysia/2020/05/17/bn-bersatu-pas-and-three-others-agree-to-form-perikatan-nasional/1867019. 
  4. Minderjeet Kaur (February 11, 2021). "Gerakan joins PN" (in en-GB). Free Malaysia Today. https://www.freemalaysiatoday.com/category/nation/2021/02/11/gerakan-joins-pn/. 
  5. BERITA HARIAN, Muhammad Yusri Muzamir (2020-08-07). "Perikatan Nasional officially registered". Berita Harian. பார்க்கப்பட்ட நாள் 2020-08-07.
  6. Utusan Digital, Zareen Humairah Sejahan (2021-08-16). "All Perikatan Nasional Cabinet resign". Utusan Digital. பார்க்கப்பட்ட நாள் 2021-08-16.
  7. Lim Huey Teng (August 16, 2021). "Malaysia's Muhyiddin resigns after troubled 17 months in power" (in en-GB). Reuters. Al Jazeera. https://www.aljazeera.com/news/2021/8/16/malaysias-muhyiddin-resigns-after-troubled-17-months-in-power. 
  8. "Now, Mohamaddin Ketapi quits Bersatu". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 28 June 2022.
  9. "Battle for Putrajaya". Malaysiakini. 16 August 2021. https://newslab.malaysiakini.com/battle-for-putrajaya/en. 
  10. Muhammad, Anne (22 July 2022). "Edmund Santhara has quit Bersatu, says source". Free Malaysia Today. பார்க்கப்பட்ட நாள் 22 July 2022.
  11. "Ruling pact scrambles for replacement ahead of Malaysia PM Muhyiddin's resignation". The Straits Times (in ஆங்கிலம்). 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
  12. Abdullah, Izwan (2022-12-10). "Pemimpin BERSATU Sabah keluar parti, kekal bawah GRS - Hajiji". BHarian Online. பார்க்கப்பட்ட நாள் 2022-12-11.
  13. "Badan Perhubungan Negeri Perikatan Nasional (BPN PN) Sabah yang dianggotai oleh BERSATU, PAS, GERAKAN dan SAPP mengadakan mesyuarat pertamanya di Kota... | By Dr Ronald Kiandee - Facebook". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-07-21.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிக்காத்தான்_நேசனல்&oldid=4045013" இலிருந்து மீள்விக்கப்பட்டது