ஜெலி மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°42′N 101°50′E / 5.700°N 101.833°E / 5.700; 101.833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜெலி
Jeli District
மாவட்டம்
Location of ஜெலி
ஜெலி is located in மலேசியா
ஜெலி
ஜெலி
      ஜெலி மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°42′N 101°50′E / 5.700°N 101.833°E / 5.700; 101.833
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான்
மாவட்டம் ஜெலி மாவட்டம்
தொகுதிபாசீர் பூத்தே
உள்ளூராட்சிபாசீர் பூத்தே மாவட்ட மன்றம்
அரசு
 • மாவட்ட அதிகாரிஅப்துல் பத்தா அசுபுல்லா[1]
பரப்பளவு[2]
 • மொத்தம்1,280.21 km2 (494.29 sq mi)
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்40,637
மலேசிய அஞ்சல் குறியீடு176xx
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்D

ஜெலி மாவட்டம் (மலாய் மொழி: Jajahan Jeli; ஆங்கிலம்: Jeli District; சீனம்: 日里县; ஜாவி: جلي‎‎ ) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு மாவட்டம். ஜெலி மாவட்ட மன்றத்தால் ஜெலி மாவட்டம் (Jeli District Council) நிர்வகிக்கப் படுகிறது.

ஜெலி மாவட்டத்திற்கு மேற்கில் பேராக் மாநிலம்; வடக்கே தாய்லாந்து வாங் மாவட்டம் (Waeng District); வடகிழக்கில் கிளாந்தான், தானா மேரா மாவட்டம்; மற்றும் கோலா கிராய் மாவட்டம் ஆகியவை எல்லைகளாக உள்ளன.[3]

பொது[தொகு]

ஜெலியில் உள்ள பெரும்பாலான மக்கள் இரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள். பெரும்பாலானவர்களுக்கு சொந்தமான இரப்பர் தோட்டங்கள் உள்ளன. வெளியூர் மக்களும் இங்கு வந்து இரப்பர் தோட்டங்களில் வேலை செய்கிறார்கள்.

பொதுவாக இங்குள்ள குடும்பங்கள், 6 ஏக்கர்கள் (24,000 m2) - 50 ஏக்கர்கள் (200,000 m2) அளவிலான சிறிய பெரிய தோட்டங்களை வைத்து இருக்கிறார்கள். இவர்கள் ஜெலி மாவட்டத்தில் குடியேறிய முதல் தலைமுறையினராகும்; சொந்தமாகக் காடுகளை அழித்து விவசாயத் தோட்டங்களை உருவாக்கியவர்கள்.[4]

ஜெலி மறுமலர்ச்சி வரலாறு[தொகு]

1970-ஆம் ஆண்டுகளில், கிளாந்தான் அரசாங்கம் விவசாயப் பகுதிகளை உருவாக்குவதில் ஊக்குவிப்புச் செய்தது. அதில் இருந்து ஜெலியின் வரலாற்றில் புதியதொரு மறுமலர்ச்சிக் கட்டமும் தொடங்கியது.[3]

குன்றுப் பகுதிகளின் அடிவாரத்தில் உள்ள காட்டு நிலங்களைச் சுத்தப் படுத்துதல் அல்லது சிறிய அளவில் காடுகளை அழித்தல் போன்ற செயல்பாடுகளுடன் நில மேம்பாட்டுத் திட்டங்கள் தொடங்கப் பட்டன. சின்னச் சின்னப் பலகைப் பாலங்களும் கட்டப்பட்டன.

பல நூறு இரப்பர்த் தோட்டங்கள்; பல நூறு எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்; பல்லாயிரம் மீன் வளர்ப்புக் குளங்கள் உருவாக்கப் பட்டன. அந்த வகையில் ஜெலி மாவட்டமும் பொருளாதாரத் துறையில் வளர்ச்சி பெறத் தொடங்கியது.[4]

வரலாறு[தொகு]

ஜெலி மாவட்டம், முதலில் ஒரு தன்னாட்சித் துணை மாவட்டமாக இருந்தது. 1982 சூலை 1-ஆம் தேதி, தானா மேரா மாவட்டம் மற்றும் கோலா கிராய் மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சில பகுதிகள் பிரித்து எடுக்கப்பட்டன.

அந்தப் பகுதிகளைக் கொண்டு ஒரு துணை மாவட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் ஜெலி துணை மாவட்டம். அதன் பின்னர் 1986 சனவரி 1-ஆம் தேதி, ஜெலி மாவட்டம் முழு மாவட்டமாகத் தகுதி உயர்ந்தது.

ஜெலி மாவட்டம் ஒரு புகலிடம்[தொகு]

முற்றிலும் புதிய குடியிருப்புப் பகுதி என்பதால், தொடக்கத்தில் கிளாந்தானின் பிற பகுதிகளில் இருந்து ஜெலிக்கு குடியிருப்பாளர்கள் வந்தனர். 1970-களின் பிற்பகுதியிலும், 1980-களின் முற்பகுதியிலும் கிளாந்தான் முழுவதிலும் இருந்து ஆயிரக் கணக்கான மக்களுக்கு ஜெலி மாவட்டம் ஒரு புகலிடமாக மாறியது.[3]

ஜெலி குடியிருப்பாளர்களின் முதல் தலைமுறையினர் பெரும்பாலும் இரப்பர் தோட்டத் தொழில்கள் மற்றும் பிற வகையான தோட்ட வேலைகளில் ஈடுபட்டனர். இரண்டாம் தலைமுறையினர் கிராமப்புறங்களில் இருந்து வெளியேறி, நகர்ப் புறங்களில் ஐக்கியமாகி விட்டனர்.

மக்கள் தொகையியல்[தொகு]

மக்கள்தொகை வளர்ச்சி
ஆண்டும.தொ.±%
1991 32,720—    
2000 35,988+10.0%
2010 39,170+8.8%
2020 54,656+39.5%
ஆதாரம்: [5]

2010-ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி ஜெலி மக்கள்தொகை 46,700. பெரும்பான்மையினர் கிளாந்தான் மலாய் மக்கள்.

ஜெலி மாவட்டத்தின் மக்கள் தொகை தரவரிசை[தொகு]

நிலை மாவட்டம்/முக்கிம் மக்கள்தொகை 2010
1 ஜெலி நகரம் 17,734
2 கோலா பாலா 10,198
3 பெலிம்பிங் 8,056

சுற்றுலா[தொகு]

இந்த மாவட்டத்தின் முக்கிய ஈர்ப்பு சுதோங் நீர்வீழ்ச்சி (Stong Waterfalls) ஆகும். 305 மீ உயரத்தில், இயற்கை எழில் கொஞ்சும் இந்த நீர்வீழ்ச்சி தென்கிழக்கு ஆசியப் பகுதியில் உள்ள மிக உயரமான நீர்வீழ்ச்சியாகும்.

ஜெலியின் மற்றொரு ஈர்ப்பு மலேசியாவின் சிறந்த வெப்ப நீரூற்றுகளில் ஒன்றான ஜெலி வெந்நீர் ஊற்று (Jeli Hot Spring) ஆகும். ஜெலி நகரத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

ஜெலி வெந்நீர் ஊற்று அதிகக் கந்தகத் தன்மை கொண்டது. அதிக ஆரோக்கிய மதிப்பைக் கொண்டுள்ளது என்றும் சொல்லப் படுகிறது. லதா ஜங்குட் (Lata Janggut), லதா ரென்யோக் (Lata Renyok) மற்றும் லதா செனாங் (Lata Chenang) ஆகியவை மற்ற இடங்களாகும்.[6]

போக்குவரத்து[தொகு]

மலேசியக் கூட்டரசு சாலை 4, ஜெலி மாவட்டத்திற்கு ஒரு முக்கியச் சாலையாகும். மேற்கில் கிரிக், பேராக், கெடா, பினாங்கு வரை இந்தச் சாலை செல்கிறது. கிழக்கே பாசீர் பூத்தே வரை தொடர்கிறது.

எனவே, பினாங்கு, கெடா மற்றும் பெர்லிஸ் ஆகிய இடங்களில் இருந்து கிழக்குக் கடற்கரைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகள், இந்த ஜெலி நகரத்தை, 'மேற்கு நுழைவாயில்' (Western Gateway) என்று அழைக்கிறார்கள்.

கூட்டரசு சாலை 4 (மலேசியா) மற்றும் கூட்டரசு சாலை 66 (மலேசியா), இரு சாலைகளின் சந்திப்பு ஜெலி நகருக்கு அருகில் அமைந்துள்ளது. அதன் பின்னர் இந்த கூட்டரசு சாலை 66 (மலேசியா), ஜெலி தொகுதியின் தெற்குப் பகுதியில் உள்ள கோலா பாலாவுக்குச் செல்கிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Perutusan Ketua Jajahan - Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Puteh". ptjpp.kelantan.gov.my. Archived from the original on November 30, 2018.
  2. "Latar Belakang - Laman Web Rasmi Pejabat Tanah Dan Jajahan Pasir Puteh". ptjpp.kelantan.gov.my. Archived from the original on November 30, 2018.
  3. 3.0 3.1 3.2 NW, Super User. "Jeli District is bordered by Sukhirin District, Thailand to the north, while the South is bordered by the Gua Musang District, the East is bordered by the Tanah Merah District (Jedok and Ulu Kusial) and the West is bordered by with the Grik District, Perak". ptjj.kelantan.gov.my. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022. {{cite web}}: |first1= has generic name (help)
  4. 4.0 4.1 "Most people in Jeli work as rubber tappers. The rubber plantations which belong to the local people also attract people from outside to come and work. Commonly families own a small plantation of up to in size". placeandsee.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
  5. "TABURAN PENDUDUK MENGIKUT PBT & MUKIM 2010". Department of Statistics, Malaysia. பார்க்கப்பட்ட நாள் 15 December 2017.
  6. 6.0 6.1 "The district of Jeli is often considered Peninsular Malaysia's West Coast gateway into the state of Kelantan. It has become a strategic resting area for travellers who are making their journey from the East Coast to the West Coast, through the East-West highway system". www.heritagemalaysia.my. பார்க்கப்பட்ட நாள் 24 June 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெலி_மாவட்டம்&oldid=3450456" இலிருந்து மீள்விக்கப்பட்டது