உள்ளடக்கத்துக்குச் செல்

கிரியான் மாவட்டம்

ஆள்கூறுகள்: 5°0′N 100°30′E / 5.000°N 100.500°E / 5.000; 100.500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரியான் மாவட்டம்
Daerah Kerian
கிரியான் மாவட்டம் அமைவிடம் பேராக்
கிரியான் மாவட்டம் அமைவிடம் பேராக்
ஆள்கூறுகள்: 5°0′N 100°30′E / 5.000°N 100.500°E / 5.000; 100.500
தொகுதிபாரிட் புந்தார்
நகராட்சிகிரியான் மாவட்ட மன்றம்
தைப்பிங் மாவட்ட மன்றம்
(தென்கிழக்குப் பகுதி
அரசு
 • மாவட்ட அதிகாரிசாப்லி பாக்ரி (Sabli Bakri)
பரப்பளவு
 • மொத்தம்921.47 km2 (355.78 sq mi)
மக்கள்தொகை
 (2010)
 • மொத்தம்1,23,600
 • மதிப்பீடு 
(2015)
1,90,700
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)ஒசநே+8 (பயன்பாடு இல்லை)
இடக் குறியீடு+6-05
வாகனப் பதிவுA

கிரியான் (மலாய்: Daerah Kerian); (ஆங்கில மொழி: Kerian District) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில் ஒரு நிர்வாக மாவட்டம் ஆகும். பேராக் மாநிலத்தின் வடமேற்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் வடக்கே பினாங்கு; கெடா மாநிலங்கள் உள்ளன. முக்கிய நகரம் பாரிட் புந்தார்.

பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகருக்குத் தென்கிழக்கில் 37 கி.மீ (23 மைல்) தொலைவில் இந்த மாவட்டம் அமைந்து உள்ளது.[1]

கிரியான் மாவட்டம் பினாங்கு மாநிலத்திற்கு மிக அருகாமையில் இருக்கிறது. அதனால் மலேசியாவின் இரண்டாவது பெரிய நகரமான பினாங்கின் ஒரு பகுதியாகவே இந்த மாவட்டம் கருதப் படுகிறது. பேராக் மாநிலத்தில் மிகுதியாக நெல் பயிராகும் இடங்களில்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

1850-ஆம் ஆண்டுகளில் இந்த மாவட்டத்தின் சுற்றுப் பகுதிகளில் காபி; கரும்பு தோட்டங்கள் திறக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்கு தமிழ்நாட்டில் இருந்து ஆயிரக்கணக்கான தமிழர்கள் அழைத்து வரப்பட்டார்கள். தீபகற்ப மலேசியாவில் அதிகமாகத் தமிழர்கள் வாழும் மாவட்டங்களில் கிரியான் மாவட்டமும் ஒன்றாகும். பாகன் செராய் நகரத்தில் இந்தியர்கள் கிராமம் (Kampung India) எனும் பெயரில் ஒரு கிராமமே உள்ளது.[2]

நிர்வாகப் பிரிவுகள்

[தொகு]
கிரியான் மாவட்ட வரைப்படம்

கிரியான் மாவட்டம் 8 துணை மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளன. அவையாவன:

மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

[தொகு]

பின்வரும் புள்ளிவிவரங்கள் மலேசியா 2010 மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. [1]

கிரியான் மாவட்டத்தில் உள்ள இனக்குழுக்கள்: 2010-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு[3]
இனம் மக்கள் தொகை விழுக்காடு
மலாய்க்காரர்கள் 130,903 74.8%
சீனர்கள் 30,517 17.3%
இந்தியர்கள் 13,893 8.1%
மற்றவர்கள் 1,395 0.2%
மொத்தம் 176,683 100%

மலேசிய நாடாளுமன்றம்

[தொகு]

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) கிரியான் தொகுதிகளின் பட்டியல். நாடாளுமன்றத்தின் மக்களவை, டேவான் ராக்யாட் என்று அழைக்கப் படுகிறது. கோலாலம்பூரில் நாடாளுமன்ற மாளிகை உள்ளது. நாடாளுமன்றக் கூட்டங்கள் அங்கு நடைபெறுகின்றன.

நாடாளுமன்றம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் கட்சி
P72 பாரிட் புந்தார் முஜாகிட் யூசோப் ராவா பாக்காத்தான் ஹராப்பான் (அமானா)
P77 பாகன் செராய் நூர் அஸ்மி கசாலி பெரிக்காத்தான் நேசனல் (PPBM)

பேராக் மாநிலச் சட்டமன்றம்

[தொகு]

பேராக் மாநிலச் சட்டமன்றத்தில் கிரியான் மாவட்டப் பிரதிநிதிகள்:

நாடாளுமன்றம் மாநிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கட்சி
P72 N47 தித்தி செரோங் அஸ்னுல் சுல்கர்னைன் அப்துல் முனையிம் சுயேட்சை
P72 N48 கோலா குராவ் அப்துல் யூனோஸ் சாம்ஹரி பெரிக்காத்தான் நேசனல் (PPBM)
P77 N57 அலோர் பொங்சு சாம் மாட் சகாட் பாரிசான் நேசனல் (அம்னோ)
P77 N58 குனோங் செமாங்கோல் ராஸ்மான் சக்காரியா பெரிக்காத்தான் நேசனல் (பாஸ்)
P77 N59 செலின்சிங் முகமட் நூர் டாவூ பாரிசான் நேசனல் (அம்னோ)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Laman Web Pejabat Daerah Dan Tanah Kerian - கிரியான் மாவட்டத்தின் அமைவிடம்". pdtkerian.perak.gov.my.
  2. Kampung India, Bagan Serai
  3. மலேசியா 2010 மக்கள் தொகை புள்ளிவிவரங்கள்

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kerian District
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியான்_மாவட்டம்&oldid=3869162" இலிருந்து மீள்விக்கப்பட்டது