ருங்குப்
ஆள்கூறுகள்: 3°57′N 100°43′E / 3.950°N 100.717°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பேராக் |
உருவாக்கம் | கி.பி.1890 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
ருங்குப் (மலாய்:Rungkup; ஆங்கிலம்:Rungkup; சீனம்:隆古) என்பது மலேசியா, பேராக், பாகன் டத்தோ மாவட்டத்தில், சிம்பாங் அம்பாட் நகருக்கு அருகில் உள்ள ஒரு முக்கிம் ஆகும். மலேசியாவில் ஒரு துணை மாவட்டத்தை முக்கிம் என அழைப்பது வழக்கம். ருங்குப் துணை மாவட்டத்தின் தலைப் பட்டணத்திற்கும் ருங்குப் என பெயர்.
ருங்குப் பட்டணம் ஒரு சிறு கிராமப்புறப் பட்டணம் ஆகும். இந்தப் பட்டணத்தின் அசல் பெயர் ருங்குப் கெச்சில் (Rungkup Kecil). சட்டமன்றத் தொகுதியையும் ருங்குப் என்றே அழைக்கிறார்கள்.
ருங்குப் கிராமப் பகுதி 4 துணைப் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. அதாவது சிம்பாங் அம்பாட் ருங்குப், ருங்குப் கெச்சில், சுங்கை பூரோங் மற்றும் சுங்கை லாஞ்சாங்.
வரலாறு
[தொகு]பேராக் மாநிலத்தின் பாகன் டத்தோ மாவட்டம் தனித்துவம் வாய்ந்த மாவட்டமாகக் கருதப் படுகிறது. அங்கு பெரும்பாலான கிராமப் பெயர்கள் சுங்கை, பாரிட் மற்றும் தெபுக் எனும் சொற்களுடன் தொடங்குவது வழக்கம்.
எடுத்துக்காட்டு: சுங்கை லாஞ்சாங், சுங்கை நிப்பா, பாரிட் 8 தீமோர், பாரிட் ஹாஜி அலி, தெபுக் சே மஜா, தெபுக் சே அகஸ். இவை அனைத்தும் ருங்குப் பகுதியில் காணப்படும் பெயர்கள்.[1]
பொது
[தொகு]ருங்குப் பகுதியின் ஆறுகளில் குறுக்கே காணப்படும் மரங்களின் அமைப்பால் ஈர்க்கப்பட்டு அந்த இடத்திற்கு ருங்குப் என்று பெயர் வைக்கப்பட்டதாகப் பழைய உள்ளூர்வாசிகள் சொல்கின்றார்கள். 19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ருங்குப் கிராமப்புறம்; தேங்காய்களின் சொர்க்கம் என்று புகழப்பட்டது.[2]