பானீர்

ஆள்கூறுகள்: 4°10′23.33″N 100°11′25.72″E / 4.1731472°N 100.1904778°E / 4.1731472; 100.1904778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பானீர்
Banir
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
உருவாக்கம்1850
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
இணையதளம்http://www.mdtapah.gov.my/en

பானீர் (Banir) என்பது மலேசியா, பேராக் மாநிலத்தில், தாப்பா மாவட்டத்தில் அமைந்து உள்ள ஒரு சிறிய கிராமப்புற நகரம் ஆகும். தாப்பா நகரத்தில் இருந்து 5 கி.மீ.; வடக்கே அமைந்து உள்ளது.

பானீர் என்பது ஒரு மலாய்ச் சொல். மரத்தின் அடிப்பகுதி பிரிக்கப்பட்டு, அந்த மரத்தின் அடிப்பகுதியில் இருந்து வளரும் மர வகையைச் சேர்ந்தது.

இங்கு 1917-ஆம் ஆண்டில் பானீர் எனும் பெயரில் ஒரு ரப்பர் தோட்டம் இருந்து உள்ளது. 400 ஏக்கர் பரப்பளவு. பானீர் தோட்டம் பிரித்தானியர்களுக்குச் சொந்தமான தோட்டமாகும். ஏறக்குறைய 25 தமிழர்க் குடும்பங்கள் தொழில் செய்து உள்ளனர்.[1]

தாப்பாவில் இருந்து மூன்று மைல் வடக்கே இருந்தது. அருகில் பானீர் கிராமம். அந்தக் கிராமத்திற்குச் செல்ல வேண்டும் என்றால் பானீர் கிராமத்தைக் கடந்து செல்ல வேண்டும். இந்தக் கிராமத்தில் சுமத்திராவைச் சேர்ந்த குடியேறிகள் சிலர் சிறிய ரப்பர் தோட்டங்களை வைத்து இருந்தார்கள்.

அந்த இடத்தில் இப்போது கம்போங் பாரு பானீர் என்று ஒரு கிராமம் உருவாகி உள்ளது. தாப்பா நாடாளுமன்றத் தொகுதியிலும் செண்டிரியாங் சட்டமன்றத் தொகுதியிலும் கம்போங் பானீர் என்று பதிவாகி உள்ளது.[2]

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=பானீர்&oldid=3142806" இருந்து மீள்விக்கப்பட்டது