உள்ளடக்கத்துக்குச் செல்

தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெலுக் இந்தான் (P076)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Teluk Intan (P076)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி

(P76 Teluk Intan)
மாவட்டம்ஈலிர் பேராக் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை87,222 (2022)[1]
வாக்காளர் தொகுதிதெலுக் இந்தான் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்பாகன் டத்தோ, தெலுக் இந்தான், ஊத்தான் மெலிந்தாங், பாசீர் சாலாக், சங்காட் ஜோங், பாசீர் பெடாமார், கம்போங் காஜா, சுங்கை மானிக்
பரப்பளவு774 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
மக்கள் தொகை103,065 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1986
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]




2022-இல் பாகன் டத்தோ மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (38.3%)
  இதர இனத்தவர் (1%)

தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Teluk Intan; ஆங்கிலம்: Teluk Intan Federal Constituency; சீனம்: 安顺国会议席) என்பது மலேசியா, பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் (Hilir Perak District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P076) ஆகும்.[7]

தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1986-ஆம் ஆண்டில் இருந்து தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

தெலுக் இந்தான்

[தொகு]

தெலுக் இந்தான் நகரம், பேராக், ஈலிர் பேராக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கடற்கரை நகரம். ஈலிர் பேராக் மாவட்டத்தின் பெரிய நகரம்; மற்றும் மாவட்டத்தின்தலைப் பட்டணமும் ஆகும்.[8]

2020-ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இதன் மக்கள் தொகை 103,065. தெலுக் மாக் இந்தான் எனும் ஒரு பெண்மணியின் பெயரில் இருந்து தெலுக் இந்தான் நகரத்திற்குப் பெயர் வந்தது.[9]

பெயர் மாற்றம்

[தொகு]

1882-ஆம் ஆண்டு, நீரிணை குடியேற்றங்களின் பிரித்தானிய ஆளுநராக இருந்த சர் ஆர்ச்சிபால்ட் எட்வர்ட் ஆர்பர்ட் ஆன்சன் (Sir Archibald Edward Harbord Anson) என்பவர் தெலுக் இந்தான் நகரத்திற்கு பதிய நகர வடிவத்தை வரைந்து கொடுத்தார். தெலுக் இந்தான் நகரம் புதிய தோற்றம் பெற்றது. அதன் பின்னர் அவருடைய நினைவாக அந்த நகரத்திற்கு தெலுக்கான்சன் என்று பெயர் வைக்கப் பட்டது.

1982-ஆம் ஆண்டு இந்த நகரத்தின் நூறாம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப் பட்டது. அப்போது பேராக் சுல்தான், தெலுக்கான்சன் எனும் பெயரை தெலுக் இந்தான் என்று மாற்றம் செய்தார்.

தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதி

[தொகு]
தெலுக் இந்தான் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1984-ஆம் ஆண்டில் தெலுக்கான்சன் தொகுதியில் இருந்து
தெலுக் இந்தான் தொகுதி உருவாக்கப்பட்டது
தெலுக் இந்தான்
7-ஆவது மக்களவை P070 1986–1990 ஓங் தின் கிம்
(Ong Tin Kim)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P073 1995–1997
1997–1999 எம். குலசேகரன்
(Kulasegaran)
காகாசான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
10-ஆவது மக்களவை 1999–2004 மா சியூ கியோங்
(Mah Siew Keong)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
11-ஆவது மக்களவை P076 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 மனோகரன் மாரிமுத்து
(Manogaran Marimuthu)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2014 சியா லியோங் பெங்
(Seah Leong Peng)
2014–2018 மா சியூ கியோங்
(Mah Siew Keong)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
தெலுக் இந்தான்
14-ஆவது மக்களவை P076 2018–2022 நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தெலுக் இந்தான் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
87,222
வாக்களித்தவர்கள்
(Turnout)
65,128 73.60% - 7.52%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
64,194 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
218
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
716
பெரும்பான்மை
(Majority)
15,169 23.63% Increase + 2.80
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[10]

தெலுக் இந்தான் மக்களவை வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
நிகா கோர் மிங்
(Nga Kor Ming)
பாக்காத்தான் 64,194 33,133 51.61% - 2.76%
சைனல் பாட்சி பகாருடின்
(Zainol Fadzi Paharudin)
பெரிக்காத்தான் - 17,964 27.98% + 27.98% Increase
முருகையா தோப்புசாமி
(Murugiah Thopasamy)
பாரிசான் - 12,304 19.17% - 14.36 %
அகமட் குசாயிரி தனுசி
(Ahmad Khusyairi Tanusi)
தாயக இயக்கம் - 793 1.24% + 1.24% Increase

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. Teluk Intan is the largest town in the district of Hilir Perak and the third largest town in Perak.
  9. Name Intan Teluk Mak taken from a widow who is said to have a beautiful appearance of Mak Intan, she was a merchant who came from Mandahiling, Sumatra.
  10. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]