புக்கிட் மேரா ஏரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புக்கிட் மேரா ஏரி
Tasik Bukit Merah.jpg
புக்கிட் மேரா ஏரி
புக்கிட் மேரா ஏரி is located in மலேசியா
புக்கிட் மேரா ஏரி
புக்கிட் மேரா ஏரி
அமைவிடம்புக்கிட் மேரா (கிரியான்), பேராக், மலேசியா
ஆள்கூறுகள்5°01′N 100°23′E / 5.02°N 100.39°E / 5.02; 100.39ஆள்கூறுகள்: 5°01′N 100°23′E / 5.02°N 100.39°E / 5.02; 100.39
வகைமனிதர்கள் உருவாக்கிய ஏரி
முதன்மை வரத்துபுக்கிட் மேரா ஆறு
வடிநில நாடுகள்மலேசியா
அதிகபட்ச நீளம்8 km (5.0 mi)
அதிகபட்ச அகலம்5 km (3.1 mi)
மேற்பரப்பளவு40 km2 (15 sq mi)
சராசரி ஆழம்105 m (344 ft)
அதிகபட்ச ஆழம்200 m (660 ft)
நீர்க் கனவளவு70 m (230 ft)
கடல்மட்டத்திலிருந்து உயரம்28 m (92 ft)

புக்கிட் மேரா ஏரி (மலாய்: Tasik Bukit Merah; ஆங்கிலம்: Bukit Merah Lake), மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள புக்கிட் மேரா (கிரியான்) பகுதியில் உள்ள ஓர் ஏரி. மலேசியாவில் மனிதர்களால் உருவாக்கப்பட்ட முதல் செயற்கை ஏரி. 1906-ஆம் ஆண்டில் பேராக் மாநிலத்தின் 28-ஆவது மன்னரான சுல்தான் இட்ரிஸ் (I) காலத்தில் உருவாக்கப் பட்டது.

கிரியான் பகுதியில் உள்ள நெல் வயல்களுக்கு நீர்ப் பாசன வசதிக்காக ஒரு நீர்த்தேக்கம் தேவைப் பட்டது. அந்த நீர்த் தேக்கக் கட்டுமானத்தின் போது, புக்கிட் மேரா ஏரியைச் சுற்றியுள்ள பகுதிகள் நீரில் மூழ்கின. அதைத் தொடர்ந்து அந்த இடம் ஒரு நன்னீர் ஏரியாக மாறியது.[1]

இந்த ஏரிக்கு ஓர் அணை உள்ளது. அதன் பெயர் புக்கிட் மேரா அணை. இந்த இரண்டு மாவட்டங்களுக்கு இடையில் அமைந்துள்ளது. அதாவது கிரியான் மாவட்டம் மற்றும் லாருட் மாத்தாங் செலமா மாவட்டம். புக்கிட் மேரா ஏரியின் நீர்ப்பிடிப்பு அளவு 40 சதுர கி.மீ.

புக்கிட் மேரா பாலம்[தொகு]

மலேசியாவில் உள்ள ஒரே நன்னீர் ஏரியான புக்கிட் மேரா ஏரியைக் கடக்க ஓர் இரயில் பாதையும் உள்ளது. அதன் பெயர் புக்கிட் மேரா நீர்நிலைப் பாதைப் பாலம் (Bukit Merah Marine Viaduct). முன்பு பழைய இரயில் பாதை இருந்தது. அதற்குப் பதிலாக 2013-ஆம் ஆண்டில் புதிதாக 3.5 கி.மீ நீளமுள்ள இரட்டை இரயில் பாதை போடப் பட்டது.[2]

இந்த ஏரியில் அரோவானா (Arowana) எனும் அழகு வளர்ப்பு மீன் அதிகமாகக் கிடைக்கிறது. தங்க நிறத்திலான இந்த வகை மீனுக்கு விலை அதிகம். பல்லாயிரம் ரிங்கி வரை விலை போகிறது.

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புக்கிட்_மேரா_ஏரி&oldid=3481737" இருந்து மீள்விக்கப்பட்டது