உள்ளடக்கத்துக்குச் செல்

புருவாஸ் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புருவாஸ் (P068)
மலேசிய மக்களவைத் தொகுதி
பேராக்
Beruas (P068)
Federal Constituency in Perak
பேராக் மாநிலத்தில்
புருவாஸ் மக்களவைத் தொகுதி

(P68 Beruas)
மாவட்டம்மஞ்சோங் மாவட்டம்
பேராக்
வாக்காளர்களின் எண்ணிக்கை108,249 (2022)[1]
வாக்காளர் தொகுதிபுருவாஸ் தொகுதி[2]
முக்கிய நகரங்கள்புருவாஸ், பந்தாய் ரெமிஸ், பாரிட், கம்போங் கோத்தா, புருவாஸ் அருங்காட்சியகம்
பரப்பளவு754 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1958
கட்சி பாக்காத்தான் அரப்பான்
மக்களவை உறுப்பினர்நிகே கூ காம்
(Ngeh Koo Ham)
மக்கள் தொகை119,756 (2020) [4]
முதல் தேர்தல்மலாயா பொதுத் தேர்தல், 1959
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5]
2022-இல் புருவாஸ் மக்களவைத் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்:[6]

  சீனர் (56.7%)
  மலாயர் (27.2%)
  இதர இனத்தவர் (0.9%)

புருவாஸ் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Beruas; ஆங்கிலம்: Beruas Federal Constituency; சீனம்: 瓜拉江沙 联邦选) என்பது மலேசியா, பேராக், மஞ்சோங் மாவட்டத்தில் (Manjung District) அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P068) ஆகும்.[7]

புருவாஸ் மக்களவைத் தொகுதி 1958-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1959-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1959-ஆம் ஆண்டில் இருந்து புருவாஸ் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.

புருவாஸ்[தொகு]

புருவாஸ் நகரம் பேராக் மாநிலத்தில், மஞ்சோங் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். ஈப்போ மாநகரத்தில் இருந்து 73 கி.மீ. தொலைவில் உள்ளது.

முன்பு காலத்தில் தமிழர்கள் இந்த நகரைப் புருவாஸ் என்று அழைத்தார்கள். மலேசியா சுதந்திரம் அடைந்த பின்னர் புருவாஸ் எனும் சொல்லுக்கு மாறாகப் பெருவாஸ் எனும் சொல் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.

புருவாஸ் அருங்காட்சியகம்[தொகு]

புருவாஸ் நகரம் மலேசிய வரலாற்றில் மிகப் பழைமை வாய்ந்த நகரங்களில் ஒன்றாகும். இங்கு வாழ்ந்த கிராமவாசிகளும் வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் கங்கா நகரம் தொடர்பான பல அரிய கலைப் பொருட்களைக் கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த நகரில் 5-ஆம்; 6-ஆம் நூற்றாண்டுகளுக்கு முந்தைய கலைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. அவற்றில் பல பொருட்கள் புருவாஸ் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளன.

புருவாஸ் மக்களவைத் தொகுதி[தொகு]

புருவாஸ் மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1959 - 2022)
மக்களவை தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
1959-ஆம் ஆண்டில் டிண்டிங்ஸ் தொகுதியில் இருந்து புருவாஸ் தொகுதி உருவாக்கப்பட்டது
புருவாஸ்
மலாயா கூட்டரசின் மக்களவை
1-ஆவது மலாயா மக்களவை P044 1959–1963 இயோ தாட் பெங்
(Yeoh Tat Beng)
சுயேச்சை
மலேசிய மக்களவை
1-ஆவது மக்களவை P044 1963–1964 இயோ தாட் பெங்
(Yeoh Tat Beng)
சுயேச்சை
2-ஆவது மக்களவை 1964–1966 மலேசிய கூட்டணி
(மலேசிய சீனர் சங்கம்)
1966–1969 சியூ பியோ சுவான்
(Chew Biow Chuon)
1969–1971 நாடாளுமன்ற இடைநிறுத்தம்[8]
3-ஆவது மக்களவை P044 1971–1973 சூ லியாங் யூ
(Su Liang Yu)
மக்கள் முற்போக்கு கட்சி
1973–1974 பாரிசான் நேசனல்
(மக்கள் முற்போக்கு கட்சி)
4-ஆவது மக்களவை P056 1974–1978
5-ஆவது மக்களவை 1978–1982 திங் செக் மிங்
(Ting Chek Ming)
ஜனநாயக செயல் கட்சி
6-ஆவது மக்களவை 1982–1986 மைக்கல் சென் விங்
(Michael Chen Wing)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
புருவாஸ்
7-ஆவது மக்களவை P062 1986–1990 லிம் கெங் யெக்
(Lim Keng Yaik)
பாரிசான் நேசனல்
(கெராக்கான்)
8-ஆவது மக்களவை 1990–1995
9-ஆவது மக்களவை P065 1995–1999
10-ஆவது மக்களவை 1999–2004
11-ஆவது மக்களவை P068 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 நிகே கூ காம்
(Ngeh Koo Ham)
பாக்காத்தான் ராக்யாட்
(ஜனநாயக செயல் கட்சி)
13-ஆவது மக்களவை 2013–2018
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான் அரப்பான்
(ஜனநாயக செயல் கட்சி)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

புருவாஸ் மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் % ∆%
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
108,249
வாக்களித்தவர்கள்
(Turnout)
73,483 66.17% - 11.05%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
72,173 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
186
செல்லாத வாக்குகள்
(Total Rejected Ballots)
1,124
பெரும்பான்மை
(Majority)
33,971 47.07% + 0.69
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்
[9]

புருவாஸ் மக்களவை வேட்பாளர் விவரங்கள்[தொகு]

மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி செல்லுபடி
வாக்குகள்
பெற்ற
வாக்குகள்
% ∆%
நிகே கூ காம்
(Ngeh Koo Ham)
பாக்காத்தான் 72,173 46,710 64.72% - 3.75%
ஓங் கியான் சிங்
(Ong Kean Sing)
பெரிக்காத்தான் - 12,739 17.65% + 17.65%
திங் சியூ சி
(Ding Siew Chee)
பாரிசான் - 12,724 17.63% - 4.40 %

மேற்கோள்கள்[தொகு]

  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. p. 26. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
  7. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  8. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-14.
  9. "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]