ஓராங் ஊத்தான் தீவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஓராங் ஊத்தான் தீவு
Pulau Orang Utan
Tasik Bukit Merah.jpg
புக்கிட் மேரா ஏரியில் ஓராங் ஊத்தான் தீவு
ஓராங் ஊத்தான் தீவு Pulau Orang Utan is located in மலேசியா
ஓராங் ஊத்தான் தீவு Pulau Orang Utan
ஓராங் ஊத்தான் தீவு
Pulau Orang Utan
புவியியல்
அமைவிடம்புக்கிட் மேரா (கிரியான்); பேராக்
ஆள்கூறுகள்5°02′N 100°39′E / 5.033°N 100.650°E / 5.033; 100.650
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா
நிர்வாகம்
1. மலேசிய அரசாங்கம்
2. புக்கிட் மேரா ஒராங் ஊத்தான் தீவு அறக்கட்டளை
இந்தோனேசியா தஞ்சோங் புத்திங் சரணாலயத்தில் ஓராங் ஊத்தான் மனிதக் குரங்கு

ஓராங் ஊத்தான் தீவு (மலாய்: Pulau Orang Utan; ஆங்கிலம்:Orang Utan Island) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில், கிரியான் மாவட்டத்தின் புக்கிட் மேரா ஏரியில் அமைந்து உள்ள ஒரு சிறிய தீவாகும். மலாய் மொழியில் ஓராங் ஊத்தான் என்றால் மனிதக் குரங்கு என்று பொருள்.

இந்தத் தீவில் புக்கிட் மேரா மனிதக் குரங்குகள் சரணாலயம் (Bukit Merah Orang Utan Rehabilitation Center) உள்ளது. போர்னியோ காடுகளில் தனித்து விடப்பட்ட மனிதக் குரங்குகள் இந்தத் தீவிற்குக் கொண்டு வரப்பட்டு பாதுகாக்கப் படுகின்றன. 35 ஏக்கர் நிலப்பரப்பில் இந்தத் தீவு அமைந்து உள்ளது.[1]

வரலாறு[தொகு]

2000-ஆம் ஆண்டில் இந்த மனிதக் குரங்குகள் சரணாலயம் தொடங்கப்பட்டது. முதலில் மூன்று மனிதக் குரங்குகள் போர்னியோவில் இருந்து கொண்டு வரப்பட்டன. இப்போது 20 மனிதக் குரங்குகள் உள்ளன.[2]

மனிதக் குரங்குகள் பற்றிய விழிப்புணர்வு[தொகு]

போர்னியோ காடுகளில் உள்ள மனிதக் குரங்குகள் அழிந்து போகும் ஆபத்தான நிலையில் உள்ளன. இந்தச் சரணாலயத்திற்கு வருகை தரும் பார்வையாளர்கள், மனிதக் குரங்குகள் பற்றிய விழிப்புணர்வைப் பெறுகிறார்கள். சரவாக் மாநிலத்தில் மட்டும் அல்ல தீபகற்ப மலேசியாவிலும் ஒராங் ஊத்தான்கள் சட்டவிரோதமாக விற்பனை செய்யப் படுகின்றன.

தீபகற்ப மலேசியாவில் மீட்கப்படும் ஒராங் ஊத்தான்கள் அவற்றின் இயற்கை வாழ்விடங்களுக்குத் திரும்புவதற்கு முன்னர் தற்காலிகமாகப் புகலிடம் வழங்கும் சரணாலயமாக ஒராங் ஊத்தான் தீவு விளங்குகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓராங்_ஊத்தான்_தீவு&oldid=3322041" இருந்து மீள்விக்கப்பட்டது