ஜெலாப்பாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஜெலாப்பாங்
Jelapang
ஜெலாப்பாங் சாலை
ஜெலாப்பாங் சாலை
ஜெலாப்பாங் is located in மலேசியா மேற்கு
ஜெலாப்பாங்
ஜெலாப்பாங்
ஜெலாப்பாங் அமைவிடம்
ஆள்கூறுகள்: 4°38′0″N 101°4′0″E / 4.63333°N 101.06667°E / 4.63333; 101.06667ஆள்கூறுகள்: 4°38′0″N 101°4′0″E / 4.63333°N 101.06667°E / 4.63333; 101.06667
நாடு மலேசியா
மாநிலம்Flag of Perak.svg பேராக்
நகரம்ஜெலாப்பாங்
மக்கள்தொகை (2010)
 • மொத்தம்32,810
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே+8)
மலேசியஅஞ்சல் குறியீடு70xxx
மலேசியத் தொலைபேசி எண்+6-05
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்A

ஜெலாப்பாங் என்பது (மலாய்: Jelapang; ஆங்கிலம்: Jelapang; சீனம்: 九洞); மலேசியா, பேராக், கிந்தா மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். அத்துடன் ஈப்போ மாநகரின் துணைநகரமும் ஆகும்.[1]

ஈப்போ மாநகரம் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்று வருவதால், அதன் தாக்கம் இந்தத் துணைநகரத்தையும் பாதித்து உள்ளது.

ஜெலாப்பாங் நகருக்கு அருகில் மெரு, சுங்கை ரோக்காம், பெக்கான் ரசாக்கி, தாசேக், கம்போங் தாவாஸ் போன்ற இடங்கள் உள்ளன.

அமைவு[தொகு]

ஜெலாப்பாங் நகருக்கு அருகாமையில் பல தொழில்சாலைகள் உள்ளன. இங்கு ஜெலாப்பாங் தொழில்துறை வளாகமும் அமைந்துள்ளது. மலேசிய வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் பாதைவரிச் சாவடியும் இங்குதான் இருக்கின்றது.

இந்தச் சாவடியில் அடிக்கடி விபத்துகள் நடைபெற்று வந்தன. அதனால், அந்தச் சாவடி இப்போது வேறு ஓர் இடத்திற்கு மாற்றம் கண்டுள்ளது.

பொது[தொகு]

ஜெலாப்பாங் எனும் மலாய்ச் சொல்லுக்கு ’நெல் களஞ்சியம்’ என பொருள்படும். ஆனால், இங்கு நெல் விவசாயம் எதுவும் நடைபெறவில்லை. இந்த இடத்தைச் சுற்றிலும் முன்பு பல ரப்பர் தோட்டங்கள் இருந்தன. ஓரளவுக்கு ஈயமும் தோண்டி எடுக்கப் பட்டது. இப்போது பெரும்பாலான ரப்பர் தோட்டங்கள் மூடப்பட்டு விட்டன.

பன்னாட்டுத் தொழில்சாலைகள்[தொகு]

அந்த இடங்களில் பன்னாட்டுத் தொழில்சாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. முன்பு, ரப்பர் தோட்டங்களில் வேலை செய்து வந்த இந்தியர்கள், பின்னர் தொழில்சாலைகளில் வேலை செய்தனர். இப்போது உள்நாட்டவர்கள் தொழில்சாலைகளில் வேலை செய்ய சுணக்கம் காட்டுகின்றனர்.

அதனால், வெளிநாட்டில் இருந்து வங்காளதேசிகள், வியட்நாமியர்கள், மியன்மார்காரர்கள், இந்தோனேசியர்கள், நேபாளிகள், பாகிஸ்தானியர்கள், பிலிப்பைன்ஸ் நாட்டுக்காரர்கள், கம்போடியர்கள் போன்றவர்கள் வரவழைக்கப் பட்டு வேலைகளில் அமர்த்தப் படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kinta District, Perak, Malaysia". www.mindat.org. 12 March 2022 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜெலாப்பாங்&oldid=3401738" இருந்து மீள்விக்கப்பட்டது