உள்ளடக்கத்துக்குச் செல்

தாப்பா ரோடு

ஆள்கூறுகள்: 4°10′N 101°12′E / 4.167°N 101.200°E / 4.167; 101.200
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாப்பா ரோடு
Tapah Road
பேராக்
தாப்பா ரோடு தொடருந்து நிலையம்
Map
தாப்பா ரோடு is located in மலேசியா
தாப்பா ரோடு
      தாப்பா ரோடு
ஆள்கூறுகள்: 4°10′N 101°12′E / 4.167°N 101.200°E / 4.167; 101.200
நாடு மலேசியா
மாநிலம் பேராக்
மாவட்டம்பத்தாங் பாடாங்
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
அஞ்சல் குறியீடு
35000
தொலைபேசி எண்+60-05-406 7000
போக்குவரத்துப் பதிவெண்கள்P

தாப்பா ரோடு (ஆங்கிலம்: Tapah Road; மலாய்: Tapah Road; சீனம்: 打巴路) என்பது மலேசியா, பேராக் மாநிலம், பத்தாங் பாடாங் மாவட்டத்தில் (Batang Padang District) அமைந்துள்ள ஒரு வரலாற்று நகரம் ஆகும். இந்தச் சிறு நகரத்திற்கு அருகில், பத்தாங் பாடாங் மாவட்டத்தின் நிர்வாக மைய நகரமான தாப்பா நகரம் உள்ளது.

தாப்பா தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Tapah Road Railway Station மலாய்: Stesen Keretapi Tapah Road) என்று அழைக்கப்படும் தாப்பா ரோடு தொடருந்து நிலையம் இந்தச் சிறுநகரத்தில்தான் அமைந்துள்ளது. தாப்பா ரோடு, தாப்பா, லங்காப், ஆயர் கூனிங் நகரங்களுக்கும் மற்றும் அதன் அருகிலுள்ள கிராமங்களுக்கும் இந்த நிலையம் சேவை செய்கிறது.[1]

இந்த நிலையம் மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தாப்பா பெரு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[2]

வரலாறு

[தொகு]

தாப்பா ரோடு தொடருந்து நிலையம் மலேசியாவின் இரண்டாவது பழமையான தொடருந்து நிலையம் ஆகும். அதன் காரணமாக 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் நடுப்பகுதி வரை தாப்பா ரோடு நகரம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது. 1880-ஆம் ஆண்டுகளில் தாப்பா ரோடு நகரத்தில் இருந்து தெலுக் இந்தான் நகரம் வரையில் 30 km (19 mi) நீளத்திற்கு ஒரு தொடருந்து வழித்தடம் உருவாக்கப்பட்டது.

இந்த நிலையம் 1880 மற்றும் 1885-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கட்டப்பட்டது. மலேசியாவில் உள்ள பழைமையான தொடருந்து நிலையங்களில் ஒன்றாகும். மே 18, 1893-இல், சர் சிசில் கிளெமென்டி இசுமித் (Sir Cecil Clementi Smith) எனும் பிரித்தானிய அதிகாரி, தாப்பா ரோடு தொடருந்து நிலையத்தை திறந்து வைத்தார்.[3]

கேமரன் மலை நுழைவாயில்

[தொகு]

இந்த நிலையம் முக்கியமாக, தாப்பா மாவட்டத்தில் இருந்த ஈயச் சுரங்கங்களின் போக்குவரத்திற்காக உருவாக்கப்பட்டது. அதன் பின்னர் மலாயா கூட்டமைப்பு மாநிலங்களின் தொடருந்து சேவையில் (Federated Malay States Railways) ஒருங்கிணைக்கப்பட்டது.

பின்னர் இந்த தாப்பா ரோடு தொடருந்து நிலையம், பட்டர்வொர்த் நகரில் இருந்து சிங்கப்பூர் வரையிலான பிரதான தொடருந்து வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது. அந்தக் கட்டத்தில் தாப்பா ரோடு ஒரு முக்கிய நிறுத்தமாகவும் விளங்கியது, ஏனெனில் இந்த தாப்பா ரோடு நகரம் தான், அப்போதைய பிரித்தானிய காலனி அதிகாரிகளிடையே பிரபலமாக விளங்கிய கேமரன் மலை (Cameron Highlands) சுகவாச குளிர் பிரதேசத்திற்கான நுழைவாயிலாக இருந்தது.

1970-களில், தாப்பா ரோடு நகரம், இந்தப் பிராந்தியத்தில் பொருளாதார நடவடிக்கைகளின் அடிப்படையில் குறைவான முக்கியத்துவம் பெற்றது; சாலை வாகனங்கள் பிரபலமடைந்ததால். தாப்பா ரோடு மற்றும் தெலுக் இந்தான் நகரங்களுக்கு இடையே தொடருந்து சேவை 1991-இல் நிறுத்தப்பட்டது. பெரும்பாலான தொடருந்து தண்டவாளங்கள் இப்போது இல்லை.

மலாயா தொடருந்து நிறுவனம்

[தொகு]

தாப்பா ரோடு தொடருந்து நிலையம், மலாயா தொடருந்து நிறுவனத்தின் (Keretapi Tanah Melayu Berhad) கீழ் கேடிஎம் இடிஎஸ் (KTM ETS) தொடருந்து சேவைகளை வழங்குகிறது. அத்துடன் தாப்பா பெரு நகரத்திற்கான முக்கிய தொடருந்து முனையமாகவும் செயல்படுகிறது.[2]

கேடிஎம் இடிஎஸ் மற்றும் கேடிஎம் கொமுட்டர் இரண்டு சேவைகளும் கிம்மாஸ் - பாடாங் பெசார் மற்றும் ஈப்போ - பாடாங் பெசார் நிலையங்களுக்கு இடையே சேவையாற்றுகின்றன. கிம்மாஸ் - பாடாங் பெசார் சேவை 11 சூலை 2015 அன்று தொடங்கியது. ஈப்போ - பாடாங் பெசார் சேவை 10சூலை 2015 அன்று தொடங்கியது. [4][5]

பொருளாதார நடவடிக்கைகள்

[தொகு]

2001-ஆம் ஆண்டில் நகரத்திலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் ஒரு பெரிய சிறைச்சாலை கட்டப்பட்டது. அதனால், இந்த நகரம் அண்மைய காலங்களில் முக்கியத்துவம் பெற்றது. இங்கு கட்டப்பட்ட சிறைச்சாலை, பேராக் மாநிலத்தில் உள்ள சிறைச்சாலைகளில் மிகப்பெரியது. சிறை ஊழியர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு இந்த சிறிய நகரம் சேவைகளை வழங்கி வருகிறது.

தாப்பா ரோடு தொடருந்து நிலையத்திற்கு அருகில் இரண்டு வரிசை கடைகள் உள்ளன. இங்கு 2005-இல் ஒரு மேல்நிலைப் பாலம் கட்டப்பட்டது. தாப்பா ரோடு நகருக்கு அருகில் பெரிய எண்ணெய் பனை தோட்டங்கள் உள்ளன. தோட்டத்தில் இரண்டு பெரிய இந்தியர் ஆலயம்; ஆறு சிறிய காளியம்மன் ஆலயங்களும் உள்ளன. தாப்பா நகருக்குச் செல்லும் சாலையில் காய்கறி பண்ணைகள் மற்றும் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. 30 ஆண்டுகளுக்கு முன்பு நிறைய ஈயச் சுரங்கங்கள் இருந்தன ஆனால் இப்போது ஒன்று கூட இயங்கவில்லை. இந்தப் பகுதியில் ஒரு பல்கலைக்கழகம் அமைக்கப்படும் திட்டம் உள்ளது.

பழைய தாப்பா ரோடு நிலையம்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Tapah Road Railway Station • RailTravel Station". RailTravel Station. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  2. 2.0 2.1 "Train services to Tapah Road Station are by the new high-speed Electric Train Services (ETS) as all the older, slower diesel Intercity Services have now been replaced by these newer, faster trains". Train36.com. பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  3. "Tapah Road Railway Station (GPS: 4.17278, 101.18918) is a railway station in Tapah Road, Perak. It was first built in 1893, but was rebuilt in 2007 in preparation to receive the Electric Train Service". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 26 July 2023.
  4. "The KTM Electric Train Service serves this station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.
  5. "Trains from Padang Rengas to Ipoh". 5 January 2023. பார்க்கப்பட்ட நாள் 22 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாப்பா_ரோடு&oldid=3995815" இலிருந்து மீள்விக்கப்பட்டது