பகாங்கோலா லிப்பிஸ் நகரத் தொடருந்து நிலையத்தில்.கே.டி.எம். நிறுவனத்தின் நகரிடை தொடருந்து
மலாயா தொடருந்து நிறுவனம், (மலாய்: Keretapi Tanah Melayu Berhadஆங்கிலம்: Malayan Railways Limited; ஜாவி: كريتاڤي تانه ملايو برحد; சீனம்: 馬來亞铁道公司); என்பது மலேசியத் தீபகற்பத்தில் தொடருந்து சேவைகளை வழங்கும் முதன்மைத் தொடருந்து நிறுவனம் ஆகும்.
கிரேத்தாப்பி தானா மெலாயு (Keretapi Tanah Melayu Berhad) என்று அழைக்கப்படுவதும் உண்டு. பரவலாக கே.டி.எம். (KTM) என்றே அழைக்கிறார்கள்.
இந்தத் தொடருந்து அமைப்பு பிரித்தானிய குடியேற்றக் காலத்திலேயே வெள்ளீயப் போக்குவரத்திற்காகக் கட்டமைக்கப்பட்டது.
முன்னதாக இது மலாய் இராச்சியங்களின் கூட்டமைப்பு தொடருந்து(Federated Malay States Railways) எனவும் மலாயா தொடருந்து நிர்வாகம்(Malayan Railway Administration) எனவும் அழைக்கப்பட்டது.
1962-ஆம் ஆண்டு முதல் தற்போதைய பெயரான கிரேத்தாப்பி தானா மெலாயு என்று (சுருக்கமாக கே.டி.எம்.) அழைக்கப் படுகின்றது. 1992-ஆம் ஆண்டில் இந்த அமைப்பு முழுமையும் மலேசிய அரசாங்கத்தின் அரசுடைமைத் தனிநிறுவனமாக வரையறுக்கப்பட்டது.[1]