மலேசியாவின் மனித உரிமை ஆணையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலேசியாவின் மனித உரிமை ஆணையம்
துறை மேலோட்டம்
வலைத்தளம்
www.suhakam.org.my

மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் ( மலாய்: Suruhanjaya Hak Asasi Manusia Malaysia ) அதன் சுருக்கெழுத்தால் நன்கு அறியப்பட்ட சுஹகம் மலேசியா ஒரு தேசிய மனித உரிமை நிறுவனம் (என்.எச்.ஆர்.ஐ) ஆகும். இது மலேசியாவின் மனித உரிமைகள் ஆணையம் சட்டம் 1999, சட்டம் 597,[1] இன் கீழ் மலேசிய நாடாளுமன்றத்தால் நிறுவப்பட்டது. மேலும், ஏப்ரல் 2000 இல் அதன் பணிகளைத் தொடங்கியது.[2] மனித உரிமைக் கல்வியை ஊக்குவித்தல், சட்டம் மற்றும் கொள்கை குறித்து ஆலோசனை வழங்குதல் மற்றும் விசாரணைகளை நடத்துவதே இதன் ஆணை ஆகும்.

அன்வர் இப்ராஹிம் சர்ச்சையின் வீழ்ச்சிக்குப் பின்னர் நிறுவப்பட்ட பின்னர், அப்போதைய பிரதமர் துன் முனைவர் மகாதீர் முஹம்மதுவின் அரசாங்கத்திடமிருந்து இந்த அமைப்பின் சுதந்திரம் குறித்து சிலருக்கு நம்பிக்கை இல்லாமலிருந்தது. இருப்பினும், டான் ஸ்ரீ டத்தோ' மூசா ஹிதாமை (ஆரம்பத்தில், 13 உறுப்பினர்கள்) ஆணையத்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டபோது, இந்த அச்சங்கள் தளர்த்தப்பட்டன ஏனெனில் அவர் மகாதீரை பல வழிகளில் விமர்சிப்பார் என்று நம்பப்பட்டது.[3] எவ்வாறாயினும், மூசாவின் கீழ் ஆணையத்தின் பரிந்துரைகள் பெரும்பாலும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை. அவரது இரண்டு ஆண்டு பதவிக்காலம் முடிந்ததும், அவர் மீண்டும் நியமனம் செய்யப்படவில்லை.

2002 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் டான் ஸ்ரீ அபு தலிப் ஓத்மானைக் கொண்டு மூசா மாற்றப்பட்டார். அபு தலிப் மகாதீரின் கீழ் மலேசிய அரசுத் தலைமை வழக்கறிஞராகப் பணியாற்றினார், மேலும் அன்வர் இப்ராஹிம் சர்ச்சையிலும் சிக்கினார். மலேசியாகினியில் தெரிவிக்கப்பட்டபடி, அவர் மகாதீருடன் நெருக்கமாகக் காணப்பட்டார், ஆனால் அபு தாலிப்பின் கீழ் சுஹாகம் தொடர்ந்து பல மனித உரிமை பரிந்துரைகளை முன்வைத்தார். இந்த பரிந்துரைகள் பல இன்னும் அரசாங்கத்தால் செயல்படுத்தப்படவில்லை.

தற்பொழுது தான் ஸ்ரீ ஒத்மான் அசிம் இதன் தலைவராக உள்ளார்.[4]

சர்வதேச நிலைப்பாடு[தொகு]

தேசிய மனித உரிமை ஆணைய நிறுவனங்களின் பிராந்திய வலையமைப்பான ஆசிய பசிபிக் மன்றத்தின் (ஏபிஎஃப்) முழுத்தகுதி வாய்ந்த உறுப்பினராக சுஹாகம் அங்கீகாரம் பெற்றது. மேலும், தேசிய மனித உரிமைகள் நிறுவனங்களின் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவால் (ஐ.சி.சி) மறு அங்கீகாரம் பெற்றது. இப்போது ஆசிய பசிபிக் மன்றம் இந்த அங்கீகாரத்தை எதிர்க்கிறது.

2008 ஆம் ஆண்டில் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவின் அங்கீகார துணைக்குழுவால் சுஹாகாம் அமைப்பின் தகுதிநிலையை ஏ நிலையிலிருந்து பி நிலைக்கு ஏன் தரமிறக்கப்படக்கூடாது என்பதற்கான தனது எழுத்துப்பூர்வமான விளக்கத்தை ஒரு வருடத்திற்குள் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த தரமிறக்கமானது ஐக்கிய நாடுகள் அமைப்பில் இந்த அமைப்பிற்கான சில அணுகல் முன்னுரிமைகளை இழக்கச் செய்யும்.[5] இந்த அமைப்பின் நிறுவன சட்டங்களில் திருத்தம் செய்து அதை மேலும் தன்னாட்சியானதாக்க மலேசிய அரசாங்கத்தை ஊக்குவிக்க சர்வதேச ஒருங்கிணைப்புக் குழு முயன்றது. எவ்வாறாயினும், நவம்பர் 2009 இல் சர்வதேச ஒருங்கிணைப்புக் குழுவால் சுஹாகாம் மதிப்பாய்வு செய்யப்பட்டபோது, ஆணையத்தின் உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான செயல்முறை தொடர்பாக குறிப்பாக கவனம் செலுத்தி, 2010 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்படவுள்ள மேலதிக மறுஆய்வை நிலுவையில் வைத்தது.[6]

மலேசியாவில் நடக்கும் குழந்தைத் திருமணங்கள் தொடர்பான கவலை[தொகு]

சுஹகாம் தலைவர் ரசாலி இசுமாயில் மலேசியாவில் மீண்டும் மீண்டும் நடக்கும் குழந்தைத் திருமணங்களை "வறுமைக்கான தீர்வல்ல - இது மனித உரிமை மீறல்" என்று கண்டனம் தெரிவிக்கிறார்.[7] சுஹகாமானது குறிப்பாக வறுமையில் வாடும் குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைத் திருமணங்களுக்கு எதிரானது. இந்த நடைமுறையானது, தொடர்புடைய குழந்தைகளுக்கு நியாயமற்றதும், பெற்றோருக்கு தங்கள் குழந்தைகளை திருமணம் என்ற பெயரில் விற்பதற்கான முறையை வழங்குவதாயும் இருக்கிறது. 2018 ஆம் ஆண்டு வரையிலான நிலையின்படி, வறுமையில் இருந்து விடுபடுவதற்கான விளைபொருளாக குழந்தைகளைக் கருதுவதன் காரணமாக, மலேசியாவில் இன்னும் குழந்தைத் திருமணமானது நடைமுறையில் உள்ளது. ரசாலி மலேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தை அழைத்து வறுமையில் வாடும் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து சமூக மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. SUHAKAM Act பரணிடப்பட்டது 23 மே 2012 at the வந்தவழி இயந்திரம்
  2. "Suruhanjaya Hak Asasi Manusia Malaysia (SUHAKAM)".
  3. "Suruhanjaya Hak Asasi Manusia Malaysia (SUHAKAM) – Commissioners".
  4. "https://www.suhakam.org.my/biodata/". பார்த்த நாள் 18 February 2020.
  5. http://thestar.com.my/news/story.asp?file=/2008/7/27/nation/21926861&sec=nation[தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2 June 2010 அன்று பரணிடப்பட்டது.
  7. "Suhakam warns of child trade if underage marriage allowed" (in en-US). Free Malaysia Today. 2018-09-19. https://www.freemalaysiatoday.com/category/nation/2018/09/19/ssuhakam-warns-of-child-trade-if-underage-marriage-allowed/.