உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ரா கொமுட்டர் நிலையம்

ஆள்கூறுகள்: 3°9′55″N 101°41′27″E / 3.16528°N 101.69083°E / 3.16528; 101.69083
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ரா
 KA04  | Seremban Line கொமுட்டர்

Putra Komuter Station
புத்ரா கொமுட்டர் நிலையம் (2022)
பொது தகவல்கள்
அமைவிடம்துன் இசுமாயில் சாலை, கோலாலம்பூர்  மலேசியா
ஆள்கூறுகள்3°9′55″N 101°41′27″E / 3.16528°N 101.69083°E / 3.16528; 101.69083
உரிமம் தொடருந்து சொத்துரிமை
இயக்குபவர் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள் பத்துமலை–புலாவ் செபாங்
தஞ்சோங் மாலிம்–கிள்ளான்
நடைமேடை2 நடை மேடை
இருப்புப் பாதைகள்2
இணைப்புக்கள் AG4   SP4  பாதசாரி நடைபாதை வழியாக புத்ரா எல்ஆர்டி நிலையம்
கட்டமைப்பு
தரிப்பிடம்Parking KTMB நிறுத்துமிடம்
துவிச்சக்கர வண்டி வசதிகள் உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்ஊனமுற்றவர் அணுகல் உண்டு
மற்ற தகவல்கள்
நிலையக் குறியீடு KA04 
வரலாறு
திறக்கப்பட்டது1932
மறுநிர்மாணம்1995
மின்சாரமயம்1995
சேவைகள்
முந்தைய நிலையம்   கேடிஎம் கொமுட்டர்   அடுத்த நிலையம்
   
சிகாம்புட்
தஞ்சோங் மாலிம்
 
கிள்ளான் துறைமுக வழித்தடம்
 
பேங்க் நெகாரா
கிள்ளான்
செந்தூல் கொமுட்டர்
பத்துமலை கொமுட்டர்
 
பத்துமலை புலாவ் செபாங்
 
பேங்க் நெகாரா
புலாவ் செபாங்
அமைவிடம்
Map
புத்ரா கொமுட்டர் நிலையம்

புத்ரா கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Putra Commuter Station மலாய்: Stesen Komuter Putra); சீனம்: 布特拉) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும். கிள்ளான் துறைமுக வழித்தடத்தில் அமைந்துள்ள இந்த நிலையம் 1995-ஆம் ஆண்டில் இருந்து செயல்படுகிறது. நவம்பர் 1995-ஆம் ஆண்டில் மின்மயமாக்கப்பட்டது.[1]

தீபகற்ப மலேசியாவின் மற்றொரு தொடருந்து வழித்தடமான சிரம்பான் வழித்தடத்தை பயன்படுத்தும் கொமுட்டர் தொடருந்துகளும் இந்த புத்ரா நிலையத்தைப் பயன்படுத்திக் கொள்கின்றன.

பொது

[தொகு]

இந்த நிலையத்திற்கு அருகில் புத்ரா உலக வர்த்தக மையம் (Putra World Trade Centre) அமைந்துள்ளது. அந்த வகையில் அந்த மையத்தின் பெயரும் இந்த நிலையத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது. மலேசியாவில் பிரபலமான புத்ரா உலக வர்த்தக மையம் தற்போது கோலாலம்பூர் உலக வர்த்தக மையம் (World Trade Centre Kuala Lumpur) என்று அழைக்கப்படுகிறது.

புத்ராஜெயாவில் உள்ள புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 2003-ஆம் ஆண்டில் கட்டப்பட்ட பின்னர், கோலாலம்பூரில் இருந்த மாநாட்டு மையம், கோலாலம்பூர் உலக வர்த்தக மையம் என பெயர் மாற்றம் கண்டது. கோலாலம்பூரில் நடைபெறும் பெரிய அளவிலான மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் கோலாலம்பூர் உலக வர்த்தக மையத்தில் நடைபெறுகின்றன.

வரலாறு

[தொகு]

பிரித்தானிய காலனித்துவ ஆட்சியின் போது, தற்போதைய புத்ரா கொமுட்டர் நிலைய தளத்தில் மெக்சுவெல் தொடருந்து நிறுத்தம் என்று அழைக்கப்படும் ஒரு நிறுத்தம் இருந்தது. அந்த நிறுத்தத்திற்கு அங்கு அருகில் இருந்த மெக்சுவெல் சாலையின் பெயர் வைக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்தச் சாலை துன் இசுமாயில் சாலை என பெயர் மாற்றம் கண்டுள்ளது.[2]

1990-ஆம் ஆண்டு மற்றும் 1994-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் கோலாலம்பூர், சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களில் தொடருந்து மின்மயமாக்கல் மற்றும் இரட்டைத் தண்டவாளக் கட்டுமானத்தின் போது இந்த நிறுத்தம் மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டது.

1995-இல் கேடிஎம் கொமுட்டர் சேவை தொடங்கப் பட்டதில் இருந்து, இந்த நிறுத்தத்தில் தொடருந்து அமைப்பு மற்றும் தொடருந்து நிலைய வடிவமைப்பு ஆகிய இரண்டிலும் மாற்றங்கள் செய்யப்படாமல் இருந்தது. 2007-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இந்த நிறுத்தமானது குறிப்பிடத்தக்க அளவிற்கு புனரமைப்பு கண்டது.

அடிப்படை வசதிகள்

[தொகு]

1995-ஆம் ஆண்டில் இருந்து, கிள்ளான் துறைமுக நிலையத்திற்கு கிள்ளான் துறைமுக வழித்தடத்தின் வழியாக, கேடிஎம் கொமுட்டர் தொடருந்துகள் சேவைகள் செய்து வருகின்றன. 2016-ஆம் ஆண்டில், ரவாங் - கிள்ளான் துறைமுக வழித்தடம்; ரவாங் - தஞ்சோங் மாலிம் வழித்தடத்துடன் இணைக்கப்பட்டது.[3]

கிள்ளான் துறைமுக கொமுட்டர் நிலையத்தில் அடிப்படை வசதிகளுடன் பயணச்சீட்டு வசதிகளும் (Ticketing Facilities) உள்ளன. மற்றும் கூடுதலாக, நிலைய நிர்வாக பயன்பாட்டிற்க்கான இடங்கள்; பானங்களை விற்பனை செய்யும் பெட்டிகள் (Kiosks); போன்றவற்றுடன் இந்த நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. அத்துடன் இந்த நிலையம், ஊனமுற்ற பயணிகளுக்கான குறைந்தபட்ச தொழில்நுட்பப் பயன்பாடுகளையும் கொண்டுள்ளது.[4]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Putra is a KTM Commuter station in Kuala Lumpur, Malaysia named after the nearby Putra World Trade Center". profilpelajar.com. பார்க்கப்பட்ட நாள் 4 August 2023.
  2. "Map of the Federated Malay States Railways 1932 and their connections". பார்க்கப்பட்ட நாள் 19 August 2019.
  3. "On April 21, 2007, a shuttle service between Rawang and Rasa was launched. The service, which extends the KTM Komuter network by 22 km, covers three new stations, namely Serendah, Batang Kali and Rasa". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 29 July 2023.
  4. "KTM Komuter - Kuang Train Station Facilities, Counter Operating Hours". MALAYSIA CENTRAL (ID). 21 December 2010. பார்க்கப்பட்ட நாள் 30 July 2023.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]