அங்காசாபுரி கொமுட்டர் நிலையம்
அங்காசாபுரி Angkasapuri | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
KD02 ![]() ![]() | |||||||||||
![]() அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் | |||||||||||
பொது தகவல்கள் | |||||||||||
அமைவிடம் | அங்காசாபுரி, 59200 கோலாலம்பூர், மலேசியா | ||||||||||
ஆள்கூறுகள் | 3°06′47″N 101°40′24″E / 3.11306°N 101.67333°E | ||||||||||
உரிமம் | ![]() ![]() | ||||||||||
தடங்கள் | ![]() | ||||||||||
நடைமேடை | 2 பக்க நடைமேடைகள் | ||||||||||
இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||
கட்டமைப்பு | |||||||||||
தரிப்பிடம் | KTMB நிறுத்துமிடம் | ||||||||||
மாற்றுத்திறனாளி அணுகல் | ![]() | ||||||||||
மற்ற தகவல்கள் | |||||||||||
நிலையக் குறியீடு | KD02 | ||||||||||
வரலாறு | |||||||||||
திறக்கப்பட்டது | 1995 | ||||||||||
சேவைகள் | |||||||||||
| |||||||||||
|
அங்காசாபுரி கொமுட்டர் நிலையம் (ஆங்கிலம்: Angkasapuri Komuter Station; மலாய்: Stesen Komuter Angkasapuri); சீனம்: 安卡萨普里通勤站) என்பது மலேசியா, கோலாலம்பூர், மாநகரில் அங்காசாபுரிக்கு அருகில் அமைந்துள்ள ஒரு கொமுட்டர் தொடருந்து நிலையம் ஆகும்.[1]
இந்த நிலையம் தஞ்சோங் மாலிம்–கிள்ளான் துறைமுக வழித்தடம் மூலமாகச் சேவை செய்யப்படுகிறது. இந்த நிலையம் அங்காசாபுரிக்கு முதன்மையாகச் சேவை செய்கிறது.
மலேசிய வானொலி தொலைக்காட்சியின் தலைமையகமான அங்காசாபுரியின் பெயரால் இந்த நிலையம் அழைக்கப்படுகிறது.
பொது
[தொகு]இந்த நிலையத்திற்கு அருகில் பந்தாய் டாலாம் மற்றும் கம்போங் கெரிஞ்சியின் சுற்றுப்புறங்கள் உள்ளன. கெரிஞ்சி இலகு தொடருந்து நிலையம் (Kerinchi LRT Station) மற்றும் அப்துல்லா உக்கும் நிலையம் ஆகிய இலகு தொடருந்து நிலையங்களும் அருகிலேயே உள்ளன.[2]
இந்த நிலையத்தில் பாதசாரி அணுகல் என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
அங்காசாபுரி
[தொகு]அங்காசாபுரி (Angkasapuri) என்பது மலேசிய தகவல் துறை அமைச்சின் முக்கிய அரசாங்கக் கட்டிடம் ஆகும். இது மலேசிய வானொலி தொலைக்காட்சியின் (RTM) தலைமையகமாகவும் உள்ளது. அங்காசாபுரி கட்டிடம் லெம்பா பந்தாய் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.[3][4]
மலேசியாவின் ஒலிபரப்பு மையத்திற்கு, "அங்காசாபுரி" என்று பெயரிடப்பட்டுள்ளது.1966-இல் கட்டுமானம் தொடங்கி பிப்ரவரி 1968-இல் நிறைவடைந்தது. அங்காசாபுரியை மலேசியாவின் முதல் பிரதமர் துங்கு அப்துல் ரகுமான் 17 பிப்ரவரி 1968 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.[5]
அங்காசாபுரி வளாகம்
[தொகு]அங்காசாபுரி ஒலிபரப்பு மையம் கோலாலம்பூர் மாநகராட்சியின் அதிகார வரம்பிற்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது. ஏறக்குறைய 33 ஏக்கர் நிலப்பரப்பில் 10 மாடிகள் கொண்ட கட்டிடமாக உள்ளது.
அங்காசாபுரியில் இருந்து முதல் ஒலிபரப்பு 6 அக்டோபர் 1969 அன்று தொடங்கியது. விசுமா டெலிவிசன் (Wisma Televisyen) அல்லது விசுமா டிவி (Wisma TV) எனும் தொலைக்காட்சி வளாகம் 6 நவம்பர் 1969-இல் தொடக்கப்பட்டது.[6]
பேருந்துகள் சேவை
[தொகு]பாதை எண். | நடத்துநர் | தொடக்கம் | இலக்கு | வழி | நிமிடங்கள் | இயக்க நேரம் |
---|---|---|---|---|---|---|
கோ கேஎல் இளஞ்சிவப்பு பாதை | கோ கேஎல் (பேருந்துகள் ரேபிட் கேஎல்) | KD02 கேடிஎம் அங்காசாபுரி |
KJ19 யுனிவர்சிட்டி எல்ஆர்டி நிலையம் | கெரிஞ்சி சாலை தெற்கு பங்சார் KJ18 |
0.5 - 1 hour | 06:00 - 22:00 |
காட்சியகம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Angkasapuri KTM Komuter Station - mrt.com.my". mrt.com.my. Retrieved 23 October 2024.
- ↑ "Angkasapuri KTM station is a KTM Komuter train station located near Angkasapuri, Kuala Lumpur". klia2.info. 30 October 2017. Retrieved 23 October 2024.
- ↑ Suleiman Ali (1 January 1969). "ANGKASAPURI city of the sky". The Straits Times Annual. p. 74–75. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/stannual19690101-1.2.31. பார்த்த நாள்: 21 January 2018.
- ↑ "ANGKASAPURI 'SIMBOL KEBOROSAN'". Berita Harian. 12 June 1968. p. 5. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/beritaharian19680612-1.2.59. பார்த்த நாள்: 22 January 2018.
- ↑ "Tengku Buka Angkasapuri 17 February". Berita Harian. 20 January 1968. https://eresources.nlb.gov.sg/newspapers/Digitised/Article/beritaharian19680120-1.2.37.
- ↑ "Idea of Angkasapuri mooted". The Straits Times. 17 November 1969. p. 4. https://eresources.nlb.gov.sg/newspapers/digitised/article/straitstimes19691117-1.2.144.11. பார்த்த நாள்: 21 January 2018.