பயணிகள் தொடருந்து சேவை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடமிருந்து வலதுபுறமாக:
  • நியூ ஜெர்சி - நியூயார்க் நகரபயணிகள் தொடருந்து;
  • கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையத்தில் Class 83 EMU ரக பயணிகள் தொடருந்து;
  • அமெரிக்கா கொலராடோ பயணிகள் தொடருந்து;
  • செக் குடியரசு பிரேக் நகரில் பயணிகள் தொடருந்து;
  • நியூசிலாந்து நட்டில் அக்லாந்து பயணிகள் தொடருந்து;
  • கலிபோர்னியா சாந்தியாகோ பயணிகள் தொடருந்து

பயணிகள் தொடருந்து சேவை (Commuter Rail அல்லது suburban rail) என்பது ஒரு பெருநகரப் பகுதி; அல்லது புறநகர்ப் பகுதிக்குள் சேவையில் ஈடுபட்டுள்ள தொடருந்து சேவைகளைக் குறிப்பதாகும். இந்தச் சேவை தொடக்கப்படும் போது பெருநகரப் பகுதிகளை முதன்மை இலக்காகக் கொண்டு செயல்பட்டது.[1]

நவீன பெருநகர் மேம்பாட்டுத் திட்டங்கள்; மற்றும் வீடுமனைக் கட்டுமானங்கள் அதிகரிப்பு; மக்கள் தொகை அதிகரிப்பு போன்றவற்றினால், பயணிகள் தொடருந்துகளின் சேவை புறநகர்ப் பகுதிகளிலும் விரிவு அடைந்தன. பின்னர் காலத்தில் அந்தச் சேவை தொலைதூர நகரங்கள் வரை பரவிச் சென்றன.[2]

பொது[தொகு]

மின்மயமாக்கல் அல்லது டீசல் எரிவாயு மூலமாக பயணிகள் தொடருந்துகள் இயங்குகின்றன. சில வேளைகளில் கனரக தொடருந்துகளாகவும் இயங்குகின்றன. அண்மைய காலங்களில் இந்தக் பயணிகள் தொடருந்து சேவை; போக்குவரத்து நெரிசல்கள்; எரிபொருள் பாதிப்புகள் மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சினைகள் பற்றிய பொது விழிப்புணர்வுகளினால் பிரபலமாகியுள்ளது.[3]

அத்துடன், சிற்றுந்துகள் வாங்குவதற்கான செலவு; அவற்றைப் பராமரிப்பதற்கான; ஆகியவை செலவு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்களின் பார்வை பயணிகள் தொடருந்து சேவையின் மீது திரும்பியுள்ளது.[4]

சிறப்பியல்புகள்[தொகு]

இந்த வகை பயணிகள் தொடருந்துகளின் பொதுவான பயண தூரம் 15 முதல் 180 கி.மீ. வரை இருக்கும்; வேகம் மணிக்கு 55 முதல் 175 கி.மீ. வரை இருக்கும். பயணிகள் வண்டிகள் ஒற்றை அடுக்கு அல்லது இரட்டை அடுக்குகளாக இருக்கலாம்.[5]

ஒற்றை அடுக்கு வண்டியில் 80 – 110 வரை பயணிகள் பயணிக்கலாம். மற்றும் இரட்டை அடுக்கு வண்டியில் 145 – 170 பேர் வரை பயணிக்கலாம்.

உலக நாடுகளில் பயணிகள் தொடருந்து சேவைகள்[தொகு]

தென்கிழக்காசியா[தொகு]

மலேசியாவில், மலாயா தொடருந்து நிறுவனத்தால் இயக்கப்படும் இரண்டு பயணிகள் தொடருந்து சேவைகள் உள்ளன. அவை கோலாலம்பூரிலும் அதைச் சுற்றியுள்ள கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிக்கு சேவை செய்யும் கேடிஎம் கொமுட்டர், மற்றையது தீபகற்ப மலேசியாவின் வடக்குப் பகுதியில் உள்ள பினாங்கு பெருநகரப் பகுதி, பேராக், கெடா, பெர்லிசு ஆகிய இடங்களுக்குச் சேவை செய்யும் கேடிஎம் கொமுட்டர் வடக்குத் துறை ஆகியவை ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Transportation Research Board (1989). "Urban Public Transportation Glossary" (PDF). Archived (PDF) from the original on 2019-10-12.
  2. American Public Transit Association (1994). "Glossary of Transit Terminology" (PDF). Archived (PDF) from the original on 2019-10-12.
  3. "National Transit Database Glossary". 2013-11-13. Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2019-10-12.
  4. McGeehan, Patrick (31 May 2005). "For Train Riders, Middle Seat Isn't the Center of Attention". The New York Times. https://www.nytimes.com/2005/05/31/nyregion/for-train-riders-middle-seat-isnt-the-center-of-attention.html. 
  5. "On the 8:02 Express, Three's a Crowd". The New York Times. 6 June 2005. https://www.nytimes.com/2005/06/06/opinion/on-the-802-express-threes-a-crowd-139947.html. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயணிகள்_தொடருந்து_சேவை&oldid=3923006" இலிருந்து மீள்விக்கப்பட்டது