புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்
Putrajaya International Convention Centre
Pusat Konvensyen Antarabangsa Putrajaya
புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம்
Map
பொதுவான தகவல்கள்
நிலைமைமுழுமையானது
வகைபன்னாட்டு மாநாட்டு மையம்
கட்டிடக்கலை பாணிமலாய் சமகால கட்டிடக்கலை
நகரம்Putrajaya
நாடுMalaysia
ஆள்கூற்று02°53′01″N 101°40′01″E / 2.88361°N 101.66694°E / 2.88361; 101.66694
அடிக்கல் நாட்டுதல்2001
கட்டுமான ஆரம்பம்2001
நிறைவுற்றது2003
துவக்கம்2004
வலைதளம்
www.picc.com.my

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் (மலாய்: Pusat Konvensyen Antarabangsa Putrajaya; ஆங்கிலம்: Putrajaya International Convention Centre) (PICC) என்பது மத்திய கூட்டரசு அரசாங்கத்தின் புத்ராஜெயா நிர்வாகப் பகுதியில் உள்ள முக்கிய மாநாட்டு மையம் ஆகும்.

புத்ராஜெயா 5-ஆவது வளாகத்தில் (Precinct 5 Putrajaya) உயர்ந்த குன்றுப் பகுதியில் அமைந்து இருகும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் 135,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு தொடங்கிய கட்டுமானம் செப்டம்பர் 2003-ஆம் ஆண்டு முடிவுற்றது.[1]

பொது[தொகு]

இந்த மாநாட்டு மையத்திற்கு வடிவம் கொடுத்தவர் மலேசியாவின் நான்காவது பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) ஆகும். அக்டோபர் 2004-இல் புத்ராஜெயா மாநாட்டு மையம் (Putrajaya Convention Centre) எனப் பெயரிடப்பட்டது.[2]

பின்னர் பன்னாட்டு நிலையைப் பிரதிபலிக்கும் வகையில் பெயரிட வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. அந்த வகையில் லண்டன், தோக்கியோ, பாரிஸ் போன்ற நகரங்களில் உள்ள உலகத் தரம் வாய்ந்த மாநாட்டு மையங்களுக்கு இணையாக புத்ராஜெயா மாநாட்டு மையத்தின் பெயரும் புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையம் என மாற்றம் செய்யப்பட்டது.[3]

முக்கிய நிகழ்வுகள்[தொகு]

புத்ராஜெயா பன்னாட்டு மாநாட்டு மையத்தில் சில குறிப்பிடத்தக்க நிகழ்வுகள் நடைபெற்று உள்ளன.

  • 2003-ஆம் ஆண்டு இசுலாமிய ஒத்துழைப்பு அமைப்பு (Organisation of Islamic Cooperation) ஏற்பாடு செய்த 10-ஆவது இசுலாமிய உச்சிநிலை மாநாடு (10th Islamic Summit)
  • 2007-ஆம் 2008-ஆம் ஆண்டுகளில் மலேசிய பன்னாட்டு வாணவெடி போட்டி (Malaysian International Fireworks Competition)
  • 2010-ஆம் ஆண்டில் எந்திரன் திரைப்படத்தின் ஒலிப்பதிவு வெளியீடு
  • 2015-ஆம் ஆண்டு கானோ எக்சல் பன்னாட்டு மாநாடு (20th Gano Excel Internacional - Convención Global)

மேற்கோள்கள்[தொகு]

  1. "Top 10 highlights in Putrajaya". The Star Online. பார்க்கப்பட்ட நாள் 2017-10-09.
  2. "Putrajaya International Convention Centre (PICC)". Putrajaya International Convention Centre (PICC). Archived from the original on 2016-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.
  3. "Putrajaya International Convention Centre (PICC)". Putrajaya International Convention Centre (PICC). Archived from the original on 2016-10-06. பார்க்கப்பட்ட நாள் 2016-10-05.

வெளி இணைப்புகள்[தொகு]