நிபோங் திபால் தொடருந்து நிலையம்

ஆள்கூறுகள்: 5°21′52″N 100°25′17″E / 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நிபோங் திபால் தொடருந்து நிலையம்
Nibong Tebal Railway Station
நிபோங் திபால் விரைவுச்சாலை
பொது தகவல்கள்
அமைவிடம்நிபோங் திபால், பினாங்கு
ஆள்கூறுகள்5°21′52″N 100°25′17″E / 5.3645°N 100.4215°E / 5.3645; 100.4215
உரிமம் மலாயா தொடருந்து நிறுவனம்
தடங்கள்மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம்
 1  பாடாங் ரெங்காஸ் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி)
 2  பாடாங் பெசார் வழித்தடம் (கேடிஎம் கொமுட்டர் வடக்கு பகுதி)
நடைமேடை2 தீவு மேடைகள்
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
தரிப்பிடம்உண்டு
மாற்றுத்திறனாளி அணுகல்Handicapped/disabled access
மின்சாரமயம்2015
சேவைகள்
முந்தைய நிலையம்   நிபோங் திபால்   அடுத்த நிலையம்
சிம்பாங் அம்பாட்
 
பாடாங் ரெங்காஸ் வழித்தடம்
  பாரிட் புந்தார்
தாசேக் குளுகோர்
 
  Gold  
  பாரிட் புந்தார்
புக்கிட் மெர்தாஜாம்
 
  Gold  
  பாரிட் புந்தார்
அமைவிடம்
Map
நிபோங் திபால் தொடருந்து நிலையம்

நிபோங் திபால் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Nibong Tebal Railway Station மலாய்: Stesen Keretapi Nibong Tebal); சீனம்: 武吉登雅火车站) என்பது தீபகற்ப மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டம், நிபோங் திபால் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் நிபோங் திபால் நகரத்திற்கும்; மற்றும் தென் செபராங் பிறை மாவட்டத்தின் சுற்றுப் புறங்களுக்கும் சேவை செய்கிறது.[1]

மலாயா மேற்கு கடற்கரை தொடருந்து வழித்தடம் எனும் தீபகற்ப மலேசிய மேற்கு கரை வழித்தடத்தில் (KTM Wast Coast Railway Line), பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் நகரில் இந்த நிலையம் உள்ளது.[2]

பொது[தொகு]

ஈப்போ - பாடாங் பெசார் மின்மயமாக்கல்; மற்றும் இரட்டை தண்டவாளத் திட்டத்தின் ஒரு பகுதியாக 2013-ஆம் ஆண்டில், நிபோங் திபால் நகரில் புதிய தொடருந்து நிலையம் கட்டப்பட்டது. 2015-இல் செயல்படத் தொடங்கிய இந்த நிலையம் கேடிஎம் கொமுட்டர்; கேடிஎம் இடிஎஸ் தொடருந்துகளால் சேவை செய்யப் படுகிறது.

நிபோங் திபால் நகரம்[தொகு]

நிபோங் திபால் நகரம் பினாங்கு, மாநிலத்தில் செபராங் பிறை பகுதியில் வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரம் ஆகும். இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரமும், பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரமும், கெடா மாநிலத்தின் செர்டாங் நகரமும் உள்ளன.[3]

இந்த நகரம் ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு இந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. ஆயிரக் கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர். நில மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக, அங்கு வேலை செய்த தமிழர்கள், வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர்.

தொடருந்து இருப்புப் பாலம்[தொகு]

நிபோங் திபால் நகரின் அருகில் கிரியான் ஆறு செல்கிறது. இந்த ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கிறது. ஆற்றின் முகத்துவாரத்தில் பல மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களும் சீனர்களும் வாழ்கின்றனர்.

நிபோங் திபால் நகருக்கு பழைய சாலையின் வழியாக வருபவர்கள், ஒரு தொடருந்து இருப்புப் பாலத்தைக் கடந்து வரவேண்டும். இந்தப் பாலம் வரலாற்றுப் பின்னணிகளைக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Nibong Tebal Railway Station (GPS: 5.16936, 100.48003) in Nibong Tebal is the southernmost station on Penang State. It is located between the Simpang Ampat Railway Station in the north, and the Parit Buntar Railway Station, a short distance away, to the south. The Nibong Tebal Railway Station is just a minor station". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 July 2023.
  2. "By train the journey from Nibong Tebal to Ipoh is scheduled is take around 80 minutes". Malaysia Trains. 12 July 2022.
  3. "Nibong Tebal is situated in Seberang Perai on the mainland side of Penang, Malaysia, bordered by Parit Buntar in Perak and Bandar Baharu in Kedah. This small tranquil town is surrounded by oil palm plantations and fishing villages dotting along the Krian River". mrt.com.my. பார்க்கப்பட்ட நாள் 20 July 2023.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]