தென் செபராங் பிறை மாவட்டம்
தென் செபராங் பிறை மாவட்டம் South Seberang Perai District | |
---|---|
பினாங்கு | |
தென் செபராங் பிறை மாவட்டம் | |
ஆள்கூறுகள்: 5°14′N 100°28′E / 5.233°N 100.467°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென் செபராங் பிறை |
உள்ளாட்சி மன்றம் | செபராங் பிறை நகராட்சி |
பெரிய நகரம் | நிபோங் திபால் |
பரப்பளவு | |
• மொத்தம் | 242 km2 (93 sq mi) |
மக்கள்தொகை (2020) | |
• மொத்தம் | 1,84,007 |
• மதிப்பீடு (2025) | 2,04,400 |
• அடர்த்தி | 1,600/km2 (4,000/sq mi) |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
மலேசிய அஞ்சல் குறியீடு | 14100-14300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-045 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
தென் செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: South Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Selatan (SPS); சீனம்: 威南县; ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தில் ஐந்து மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
242 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்த மாவட்டத்தின் மக்கள் தொகை 162,905.
பொது
[தொகு]தென் செபராங் பிறை மாவட்டத்திற்கு வடக்கே இருக்கும் மத்திய செபராங் பிறை மாவட்டத்தை, சுஞ்சோங் ஆறு (Sungai Junjong) பிரிக்கிறது. கிழக்கில் கெடாவின் மாநில எல்லை பிரிக்கிறது. தெற்கில் பினாங்கு தீவில் இருந்து, பினாங்கு நீரிணை பிரிக்கிறது. இதே தெற்குப் பகுதியில் பேராக் மாநிலத்தின் எல்லையும், தென் செபராங் பிறை மாவட்டத்தைப் பிரிக்கிறது.
இந்த மாவட்டத்தின் தலைநகரம் சுங்கை ஜாவி. மாவட்டத்தின் பெரிய நகரம் நிபோங் திபால். தென் செபராங் மாவட்டத்தில் அமைந்துள்ள பிற இடங்கள்:
பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.
தென் செபராங் பிறை மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் முக்கியமான தொழில். தவிர மற்றும் விவசாயத் துறையும் முக்கியமானது. இந்த மாவட்டத்தில் எண்ணெய் பனை தோட்டங்கள் மிகுதியாக உள்ளன.
மாவட்ட எல்லைகள்
[தொகு]- மத்திய செபராங் பிறை மாவட்டம் - (வடக்கில்)
- கெடா மாநிலம் - (கிழக்கில்)
- பேராக் மாநிலம் - (தெற்கில்)
- மலாக்கா நீரிணை - (மேற்கில்)
மக்கள் தொகையியல்
[தொகு]கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]
இனக்குழுக்கள் | ||
---|---|---|
இனம் | மக்கள் தொகை | விழுக்காடு |
மலாய்க்காரர்கள் | 67,743 | 41.6% |
சீனர்கள் | 64,212 | 39.4% |
இந்தியர்கள் | 30,479 | 18.7% |
மற்றவர்கள் | 471 | 0.3% |
மொத்தம் | 162,905 | 100% |
நாடாளுமன்றத் தொகுதிகள்
[தொகு]மலேசிய நாடாளுமன்றத்தில் மத்திய செபராங் பிறை மாவட்டத்தின் பிரதிநிதிகள் (டேவான் ராக்யாட்)
நாடாளுமன்றம் | தொகுதி | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
P46 | பத்து காவான் | கஸ்தூரி பட்டு | பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
P47 | நிபோங் திபால் | மன்சுர் ஒசுமான் | பெரிக்காத்தான் நேசனல் (பாக்காத்தான் ராக்யாட்) |
சட்டமன்றத் தொகுதிகள்
[தொகு]
பினாங்கு மாநிலச் சட்டமன்றத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல்
நாடாளுமன்றம் | தொகுதி | பெயர் | உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
P46 | N18 | புக்கிட் தம்புன் | கோ சூன் ஐக் | பாக்காத்தான் அரப்பான் (பாக்காத்தான் ராக்யாட்) |
P46 | N19 | ஜாவி | இங் முய் லாய் | பாக்காத்தான் அரப்பான்பாக்காத்தான் அரப்பான் (ஜனநாயக செயல் கட்சி) |
P46 | N20 | சுங்கை பாக்காப் | அமர் பிரித்பால் பின் அப்துல்லா | பாக்காத்தான் அரப்பான் (பாக்காத்தான் ராக்யாட்) |
P47 | N21 | சுங்கை அச்சே | சுல்கிப்லி பின் இப்ராகிம் | பெரிக்காத்தான் நேசனல் (பெர்சத்து) |
தென் செபராங் பிறை மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]மலேசியா; பினாங்கு; தென் செபராங் பிறை மாவட்டத்தில் (South Seberang Perai District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1529 மாணவர்கள் பயில்கிறார்கள். 178 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD4022 | பத்து காவான் தோட்டம் | SJK(T) Ladang Batu Kawan | பத்து காவான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14110 | சிம்பாங் அம்பாட் | 116 | 13 |
PBD4023 | பைராம் தோட்டம் | SJK(T) Ldg Byram | பைராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14300 | நிபோங் திபால் | 26 | 8 |
PBD4024 | நிபோங் திபால் | SJK(T) Nibong Tebal | நிபோங் திபால் தமிழ்ப்பள்ளி | 14300 | நிபோங் திபால் | 302 | 28 |
PBD4025 | சங்காட் தோட்டம் | SJK(T) Ldg Changkat | சங்காட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14300 | நிபோங் திபால் | 41 | 10 |
PBD4026 | சுங்கை ஜாவி | SJK(T) Ladang Jawi | சுங்கை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை பாக்காப் | 162 | 22 |
PBD4028 | புக்கிட் பஞ்சூர் | SJK(T) Ldg Krian | கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14300 | நிபோங் திபால் | 241 | 23 |
PBD4029 | சுங்கை பாக்காப் | SJK(T) Ldg Sempah | செம்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை ஜாவி | 82 | 10 |
PBD4030 | சிம்பாங் அம்பாட் | SJK(T) Tasek Permai | தாசேக் பெர்மாய் தமிழ்ப்பள்ளி (தொலை நோக்குப் பள்ளி) |
14120 | சிம்பாங் அம்பாட் | 184 | 22 |
PBD4031 | டிரான்ஸ் கிரியான் தோட்டம் | SJK(T) Ldg Transkrian | டிரான்ஸ் கிரியான் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14300 | நிபோங் திபால் | 65 | 10 |
PBD4032 | சுங்கை பாக்காப் | SJK(T) Ladang Valdor | வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை பாக்காப் | 189 | 17 |
PBD4034 | சுங்கை பாக்காப் | SJK(T) Sungai Bakap | சுங்கை பாக்காப் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை ஜாவி | 121 | 15 |
பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்
[தொகு]- ☆ வட செபராங் பிறை மாவட்டம் - (North Seberang Perai District)
- ☆ மத்திய செபராங் பிறை மாவட்டம் - (Central Seberang Perai District)
- ☆ தென் செபராங் பிறை மாவட்டம் - (South Seberang Perai District)
- ☆ வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Northeast Penang Island District )
- ☆ தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம் - (Southwest Penang Island District)
புள்ளி விவரங்கள்
[தொகு]- "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014.
- "2017 Q2 statistics" (PDF). Penang Institute. Archived from the original (PDF) on 2017-12-01.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "2017 Q2 statistics" (PDF). Penang Institute (in ஆங்கிலம்). Archived from the original (PDF) on 2017-12-01. பார்க்கப்பட்ட நாள் 2022-04-24.
- ↑ "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-05-30.
வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் South Seberang Perai தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.