வால்டோர்

ஆள்கூறுகள்: 5°14′44.6706″N 100°29′8.9304″E / 5.245741833°N 100.485814000°E / 5.245741833; 100.485814000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வால்டோர்
நகரம்
Val d'Or
வால்டோர் is located in மலேசியா
வால்டோர்
வால்டோர்
மலேசியாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 5°14′44.6706″N 100°29′8.9304″E / 5.245741833°N 100.485814000°E / 5.245741833; 100.485814000
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்தென் செபராங் பிறை
அரசு
 • உள்ளூராட்சிசெபராங் பிறை
 • நகராண்மைக் கழகத் தலைவர்மைமுனா முகமது செரீப்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
மலேசிய அஞ்சல் குறியீடு14200
மலேசியத் தொலைபேசி+6045
மலேசியப் போக்குவரத்து எண்P
இணையதளம்http://www.mpsp.gov.my

வால்டோர் (ஆங்கிலம்: Val d'Or, Penang; மலாய்: Val d'Or, Pulau Pinang; சீனம்: 华都村); என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு நகரம். இந்த நகரத்திற்கு தெற்கில் ஜாவி ஆறு (Sungai Jawi) செல்கிறது. வடக்கில் சிம்பாங் அம்பாட் (Simpang Ampat) நகரமும்; சுங்கை பாக்காப் நகரமும் உள்ளன.[1] இது ஒரு விவசாய நகரம் ஆகும்.

நிபோங் திபால் நகரில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இருப்பினும் மிக அருகாமையில் உள்ள பெரிய நகரம் புக்கிட் மெர்தாஜாம்.

சொற்பிறப்பியல்[தொகு]

பிரெஞ்சு மொழியில், Val d'Or எனும் சொல் தங்கப் பள்ளத்தாக்கு என்பதைக் குறிக்கிறது. மலேசியா, பினாங்கு மாநிலத்தில் அமைந்துள்ள வால்டோர் நகரம் 19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் பிரான்சு நாட்டின் தொடர்பைக் கொண்டு இருந்தது.

அந்தக் காலக் கட்டத்தில் இரண்டு பிரெஞ்சுக்காரர்கள் பினாங்கு, செபராங் பிறை பகுதிக்கு வந்து ஒரு விவசாயத் தோட்டத்தை அமைத்தனர்.[2]

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், டோனாடியூ (Donnadieu) என்ற பிரெஞ்சுக்காரர் இப்போது இருக்கும் வால்டோருக்கு வந்து, ஒரு கரும்புத் தோட்டத்தை நிறுவினார். பின்னர் மற்றும் ஒரு பிரெஞ்சுக்காரர் லியோபோல்ட் சாசெரியா (Léopold Chasseriau) என்பவரும் அவருடன் இணைந்து கொண்டார்.[3][4]

இருவரும் இணைந்து நிர்வாகம் செய்து வந்தார்கள். இருப்பினும் 1843-ஆம் ஆண்டு டோனடியூ, கடல் கொள்ளையர்களால் கொலை செய்யப் பட்டார். அதன் பின்னர் அவர்களின் பிள்ளைகள் அந்தத் தோட்டத்தைக் கவனித்துக் கொண்டார்கள்.[3]

வால்டோர் தோட்டத்தின் வளர்ச்சி[தொகு]

1852-ஆம் ஆண்டில், கீ லை உவாட் (Kee Lye Huat) எனும் ஒரு சீன இனத்தவர், இப்போது செபராங் பெராய் என்று அழைக்கப்படும் வெல்லஸ்லி மாநிலத்திற்கு வந்தார். சாதாரணத் தொழிலாளியாகத் தன் வாழ்க்கையைத் தொடங்கினார்.[5]

படிப்படியாக முன்னேறி ஒரு சர்க்கரை ஆலையை உருவாக்கினார். பின்னர் வால்டோர் கரும்பு தோட்டத்தின் உரிமையாளர் ஆனார். இவர் தான் வால்டோர் நகரத்தை உருவாக்கியவர் என்று இப்போது அறியப் படுகிறார்.

கிராமப் பகுதிகள்[தொகு]

வால்டோர் நகர்ப் பகுதியில் சில கிராமங்கள் உள்ளன. அவற்றுள் வால்டோர் கிராமம் இந்த நகரத்திற்கு மிக முக்கியமான இடமாகும். இங்குள்ள கிராமங்கள்:

  • ஜாலான் ஸ்டேசன் கிராமம் (Kampung Jalan Stesen)
  • தித்தி ஈத்தாம் கிராமம் (Kampung Titi Hitam)
  • மஸ்ஜித் பாரு கிராமம் (Kampung Masjid Baru)
  • ஜாவி, சுங்கை பாக்காப் கிராமம் (Kampung Jawi, Sungai Bakap)
  • லீமா கொங்சி கிராமம் (Kampung Lima Kongsi)
  • வால்டர் கிராமம் (Kampung Valdor)

வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி[தொகு]

வால்டோர் பகுதியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் வால்டோர் தமிழ்ப்பள்ளி. 189 மாணவர்கள் பயில்கிறார்கள். 17 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள்.[6][7]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD4032 சுங்கை பாக்காப் SJK(T) Ladang Valdor வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி 14200 சுங்கை பாக்காப் 189 17

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sungai Bakap is a town in Seberang Perai Selatan. It is located immediately to the south of Valdor". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
  2. Maxime Pilon, Danièle Weiler (2011). The French in Singapore: An Illustrated History (1819-today). Editions Didier Millet. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789814260442. 
  3. 3.0 3.1 Courtenay, P. P. (October 1984). The New Malaysian Sugar Plantation Industry (Vol. 69, No. 4 ). பக். pp. 317. 
  4. "மலாயா தமிழர்கள்: வால்டோர் தோட்டம் செபராங் பிறை - 1844" (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
  5. Tan, Kim Hong (2007). 檳榔嶼華人史圖錄. Penang: Areca Books. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789834283476. 
  6. "SJK(T) Ladang Valdor The Community Chest". commchest.org.my. பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.
  7. "SJKT Ladang Valdor - வால்டோர் தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 27 April 2022.

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
வால்டோர்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


"https://ta.wikipedia.org/w/index.php?title=வால்டோர்&oldid=3423086" இலிருந்து மீள்விக்கப்பட்டது