கிரியான் ஆறு

ஆள்கூறுகள்: 5°10′N 100°25′E / 5.167°N 100.417°E / 5.167; 100.417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிரியான் ஆறு
Kerian River
கிரியான் ஆறு is located in மலேசியா
கிரியான் ஆறு
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுபிந்தாங் மலைத்தொடர்
கெடா  மலேசியா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
நிபோங் திபால், மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
நீளம்90 km (56 mi)
வடிநில அளவு1,420 km2 (550 sq mi)[1]
வடிநில சிறப்புக்கூறுகள்
அடையாளங்கள்பாரிட் புந்தார்
நிபோங் திபால்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுசமகாகா ஆறு; உலு மெங்குவாங் ஆறு
 ⁃ வலதுசெலாமா ஆறு; ஈஜோக் ஆறு

கிரியான் ஆறு (மலாய்: Sungai Kerian; ஆங்கிலம்: Kerian River) என்பது மலேசியாவின் பேராக் மாநிலத்தில் உள்ள ஆறு. ஏறக்குறைய 90 கி.மீ. நீளம் கொண்ட இந்த ஆறு, மலாக்கா நீரிணையை அடைவதற்கு முன், பாரிட் புந்தார் (Parit Buntar); நிபோங் திபால் (Nibong Tebal), பண்டார் பாரு ஆகிய நகரங்களைக் கடந்து செல்கிறது.

பிந்தாங் மலைத்தொடரில் (Bintang Range) தோன்றும் இந்த ஆறு மலேசியாவின் கெடா, பேராக், பினாங்கு மாநிலங்களைக் கடந்து செல்கிறது. அத்துடன் இந்த ஆறு கெடா, பேராக் மாநிலங்களுக்கு எல்லையாகவும் அமைந்து இருக்கிறது.[2]

பொது[தொகு]

சுங்கை ஊடாங் (Sungai Udang) என்ற மீன்பிடி கிராமம், கிரியான் ஆற்றின் கழிமுகத்திற்கு அருகில் அமைந்துள்ளது. கிரியான் ஆற்றின் முக்கிய துணை ஆறுகள்:

  • சமகாகா ஆறு (Samagagah River)
  • உலு மெங்குவாங் ஆறு (Ulu Mengkuang River)
  • செலாமா ஆறு (Selama River)
  • ஈஜோக் ஆறு (Ijok River)

தாமான் விக்டோரியா பாலம்[தொகு]

கிரியான் ஆற்றுப் படுகையில் (Kerian River Basin) வனப்பகுதிகள், நெல் வயல்கள், செம்பனைத் தோட்டங்கள், பழத்தோட்டங்கள் மற்றும் குடியேற்றப் பகுதிகள் நிறையவே உள்ளன.[3]

2017-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தின் நிபோங் திபால் பகுதியில் உள்ள தாமான் விக்டோரியா - தஞ்சோங் பெரெம்பாங் கிராமங்களை இணைக்க கிரியான் ஆற்றின் குறுக்கே ஒரு பாலம் கட்டப்பட்டது. 360 மீட்டர் நீளம் கொண்ட அந்தப் பாலத்தைக் கட்டி முடிக்க மலேசிய ரிங்கிட் RM 25.8 மில்லியன் செலவானது; மற்றும் 2019 சனவரி 17-ஆம் தேதி கட்டி முடிக்கப் பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிரியான்_ஆறு&oldid=3737692" இருந்து மீள்விக்கப்பட்டது