செபராங் ஜெயா
செபராங் ஜெயா | |
---|---|
Seberang Jaya | |
மலேசியத் தீபகற்பத்தில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°23′49.2″N 100°23′54.204″E / 5.397000°N 100.39839000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | மத்திய செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்றத் தொகுதி | நூருல் இசா அன்வார் மக்கள் நீதிக் கட்சி |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13700 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6043 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | www |
செபராங் ஜெயா (ஆங்கிலம்: Seberang Jaya; மலாய் Seberang Jaya; சீனம்: 诗不朗再也; ஜாவி: سبرڠ جاي) என்பது மலேசியா, பினாங்கு, மத்திய செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
இந்தச் செபராங் ஜெயா, பிறை ஆற்றின் தென் கரையிலும்; பிறை பெருநகரின் கிழக்குப் பகுதியிலும் அமைந்து உள்ளது. 1970-ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட நகர்ப் பகுதி.[1][2] அதில் இருந்து, செபராங் ஜெயா பல்வேறு வணிக வளர்ச்சிகளுடன் வளர்ந்து வரும் பகுதியாக உருவெடுத்து உள்ளது.
வரலாறு
[தொகு]1970-ஆம் ஆண்டில், பினாங்கு வளர்ச்சிக் கழகத்தால் (Penang Development Corporation - PDC) பிறை தொழிற்பேட்டை (Perai Industrial Estate) உருவாக்கப்படும் போது செபராங் ஜெயா நகரமும், இணைந்து உருவாக்கப்பட்டது.[1][2]
பிறை தொழிற்பேட்டையில் புதிதாக கட்டப்பட்ட தொழிற்சாலைகளுக்கு அருகில் ஒரு வீட்டுமனைப் பகுதியை உருவாக்குவது முதல் நோக்கமாக இருந்தது.
அடுத்து, நகர்ப்புற கிராமப்புற மக்கள் இடையே நிலவியச் சமூகப் பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்குவதும் மற்றுமொரு நோக்கமாக இருந்தது.
போக்குவரத்து
[தொகு]செபராங் ஜெயாவின் மையப் பகுதி வழியாக இரண்டு பெரிய நெடுஞ்சாலைகள் செல்கின்றன. அவை:
- வடக்கு-தெற்கு விரைவுச்சாலை (North–South Expressway (Malaysia);
- பட்டர்வொர்த்-கூலிம் விரைவுச்சாலை (Butterworth–Kulim Expressway).
இந்த இரண்டு அதிவேக நெடுஞ்சாலைகளும், செபராங் ஜெயா நகரத்தின் மையத்தில் இருந்த சாலைச் சந்திப்பு 163 (Interchange 163)-இல் குறுக்காக வெட்டிச் சென்றன. சாலைப் போக்குவரத்து நவீன மயமாக்கலில் அந்தச் சாலைச் சந்திப்பு சில ஆண்டுகளுக்கு முன்னர் அகற்றப்பட்டு விட்டது.
ரேபிட் பினாங்கு பேருந்துச் சேவை
[தொகு]ரேபிட் பினாங்கு (Rapid Penang 703) பேருந்து 703; மற்றும் ரேபிட் பினாங்கு (Rapid Penang 709) பேருந்து 709 ஆகியவை பட்டர்வொர்த் நகரத்தையும் புக்கிட் மெர்தாஜாம் நகரத்தையும் இணைக்கின்றன.[3][4]
செபராங் ஜெயா நகரத்திற்குள் கட்டணமில்லா போக்குவரத்து சேவையான ராபிட் பினாங்கின் நெரிசல் குறைப்பு போக்குவரத்து (Rapid Penang's Congestion Alleviation Transport) திட்டத்தின் மூலமாக நிவர்த்தி செய்யப் படுகிறது.[5]
ரேபிட் பினாங்கு பேருந்து நிறுவனம், பினாங்குத் தீவில் உள்ள பாயான் லெப்பாஸ் தொழில்பேட்டை பகுதிக்கும் பேருந்துச் சேவைகளை வழங்குகிறது. அத்துடன் அண்டை மாநிலமான கெடாவில் உள்ள சுங்கை பட்டாணி நகரத்திற்கும் மாநிலங்களுக்கு இடையிலான பேருந்து சேவையையும் வழங்கி வருகிறது.[6][7]
சுற்றுலா இடங்கள்
[தொகு]1988-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட பினாங்கு பறவை பூங்கா (Penang Bird Park), மலேசியாவின் முதல் பறவைக் கூடமாகும்.[8] கடல் கழுகுகள், பூநாரைகள் மற்றும் இருவாய்ச்சி பறவைகள் உட்பட 300-க்கும் மேற்பட்ட வகையான பறவைகள் இந்தப் பூங்காவில் உள்ளன.
அருள்மிகு கருமாரியம்மன் கோயில்
[தொகு]செபராங் ஜெயா நகரின், ஜாலான் தோடாக் சாலையில் அருள்மிகு கருமாரியம்மன் கோயில் உள்ளது. மலேசியாவில் மிகப்பெரிய ராஜ கோபுரத்தைக் கொண்ட கோயில். ராஜ கோபுரத்தின் உயரம் 72 அடிகள் (22 m). ராஜகோபுரத்தின் நுழைவாயிலின் உயரம் 21 ft (6.4 m); அகலம் 11 ft (3.4 m).[9]
1920-ஆம் ஆண்டுகளில் பிறை பத்துமா தோட்டத்தில் வசித்த தோட்டத் தொழிலாளர்களுக்காக இந்தக் கோயில் கட்டப்பட்டது. 1970-ஆம் ஆண்டுகளில் செபராங் ஜெயா புதிய நகரமாக மாற்றப்பட்டது.
அதன் விளைவாக அந்தப் பகுதியில் இருந்த இரு கோயில்கள் அகற்றப் பட்டன. இருப்பினும், ஒரு புதிய கோயிலைக் கட்டுவதற்கு பினாங்கு மாநில அரசாங்கம் நிலம் வழங்கியது.[10]
1996 பெப்ரவரி 16-ஆம் தேதி அப்போதைய பொதுப் பணித்துறை அமைச்சர், துன் ச. சாமிவேலு அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டு, ரிங்கிட் RM2.3 மில்லியன் செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 Peter Nijkamp, Amitrajeet A. Batabyal (2016). Regional Growth and Sustainable Development in Asia. Springer. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783319275895.
- ↑ 2.0 2.1 2.2 Sue-Ching Jou, Hsin-Huang Michael Hsiao, Natacha Aveline-Dubach (2014). Globalization and New Intra-Urban Dynamics in Asian Cities. Taipei: National Taiwan University. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789863500216.
- ↑ http://www.rapidpg.com.my/journey-planner/route-maps/details/703.gif
- ↑ http://www.rapidpg.com.my/journey-planner/route-maps/details/709.gif
- ↑ "More free bus rides from April 1 – Nation: The Star Online". www.thestar.com.my.
- ↑ "Best step forward for public transport". Best step forward for public transport. Archived from the original on 2018-02-04. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22.
- ↑ http://www.rapidpg.com.my/journey-planner/route-maps/details/sp.gif
- ↑ "A boyhood passion that became the Penang Bird Park.". http://www.themalaymailonline.com/malaysia/article/a-boyhood-passion-that-became-the-penang-bird-park#zhy4e1ZlTyE3wrAk.97.
- ↑ "The Arulmigu Karumariamman Temple is a South Indian Hindu temple in Seberang Jaya, Penang. It is noted for having the largest rajagopuram, or main sculpture tower, in Malaysia. It stands at a height of 72 ft. The entrance of the rajagopuram, at 21 ft tall and 11 ft wide, is also the biggest in Malaysia". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 22 April 2022.
- ↑ "Devi Karumariamman Temple தேவி கருமாரியம்மன்". temple.dinamalar.com.