பத்து உபான்

ஆள்கூறுகள்: 5°21′25.5522″N 100°18′37.5906″E / 5.357097833°N 100.310441833°E / 5.357097833; 100.310441833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பத்து உபான்
புறநகர்
ஜார்ஜ் டவுன்
Batu Uban
பத்து உபான் is located in மலேசியா
பத்து உபான்
பத்து உபான்
      பத்து உபான்
ஆள்கூறுகள்: 5°21′25.5522″N 100°18′37.5906″E / 5.357097833°N 100.310441833°E / 5.357097833; 100.310441833
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட கிழக்கு பினாங்கு தீவு
மாநகரம் ஜார்ஜ் டவுன்
அரசு
 • உள்ளாட்சி மன்றம்பினாங்கு தீவு மாநகராட்சி
 • பாயான் பாரு நாடாளுமன்றத் தொகுதிசிம் சு சின் (கெஅடிலான்)
 • பத்து உபான் சட்டமன்றத் தொகுதிகுமரேசன் ஆறுமுகம் (கெஅடிலான்)
 • பினாங்கு தீவு மேயர்இயூ துங் சியாங்
நேர வலயம்மலேசிய நேரம் (ஒசநே+8)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை (ஒசநே)
மலேசிய அஞ்சல் குறியீடு11700
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-09
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள்P
இணையதளம்mbpp.gov.my
Map
பத்து உபான் அமைவிடம்

பத்து உபான் (ஆங்கிலம்: Batu Uban; மலாய் மொழி: Batu Uban; சீனம்: 峇都蛮; ஜாவி: باتو اوبن) என்பது மலேசியா, பினாங்கு, பட்டர்வொர்த் நகரின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.

பினாங்கு மாநிலத்தின் தலைநகரான ஜார்ஜ் டவுன் நகர் மையத்தில் இருந்து தெற்கே சுமார் 6.7 கிமீ (4.2 மைல்) தொலைவில், குளுகோர் புறநகர்ப் பகுதிக்கு அருகில் உள்ளது.

பொது[தொகு]

18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் இந்தோனேசியா. சுமத்திரா தீவ்ல் இருந்து வந்த மினாங்கபாவ் (Minangkabau) இன மக்களால் நிறுவப்பட்ட இந்தப் பத்து உபான் குடியேற்றப் பகுதி, பினாங்கு தீவில் மிகப் பழமையான மலாய் குடியேற்றமாகக் கருதப்படுகிறது.[1][2]

20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து, பத்து உபான் குறிப்பிடத்தக்க வகையில் நகரமயமானது. தற்போது இந்தக் குடியிருப்புப் பகுதியின் சுற்றுப் புறங்களில், மிக உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டு உள்ளன.[1][3][4][5]

சொல் பிறப்பியல்[தொகு]

பத்து உபான் என்றால் மலாய் மொழியில் நரைத்த பாறை (Grey Hair Rock) என்று பொருள். பத்து உபான் கடற்கரையில் காய்ந்த புல்லால் மூடப்பட்டு இருந்த கடல் பாறையின் பெயரால் இந்தப் பகுதிக்குப் பெயரிடப் பட்டதாக கூறப் படுகிறது. இந்தப் புல்வெளிப் பாறையைத் தொலைவில் இருந்து பார்க்கும் போது வெள்ளை முடியைப் போல் இருந்து உள்ளது.[1]

வரலாறு[தொகு]

முன்பு காலத்தில், பத்து உபான் கிராமப் பகுதி, சுமத்திராவைச் சேர்ந்த அஜி முகம்மது சாலே (Haji Muhammad Salleh) மற்றும் செனாதான் ரகா லாபு (Jenaton Raha Labu) எனும் இரண்டு மினாங்கபாவ் தlஐவர்களால் உருவானது என அறியப் படுகிறது.[1]

1734-இல், அஜி முகம்மது சாலேயும் மற்றும் அவரின் சீடர்களும் அந்தப் பகுதியில் கரை இறங்கி மஸ்ஜித் ஜமேக் (Masjid Jamek) என்ற பெயரில் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். இன்று அந்தப் பள்ளிவாசல் பினாங்கில் மிகப் பழமையான பள்ளிவாசலாகக் கருதப்படுகிறது. அவர்கள் நிறுவிய மீனவக் கிராமமும் அந்தப் பள்ளிவாசலை மையமாகக் கொண்டதாகும்.[2]

அயூத்தியா இராச்சியப் படையெடுப்பு[தொகு]

1749-ஆம் ஆண்டில், கெடாவின் மீது அயூத்தியா இராச்சியப் படையெடுப்பு நடந்த போது அதை முறியடிப்பதில் செனாதான் ரகா லாபு, கெடா சுல்தானுக்கு உதவியாக இருந்தார்.[1]

அந்த உதவிக்கு வெகுமதியாக, பத்து உபானில் 100-ஏக்கர் (40 எக்டேர்) இடம் கெடாவின் சுல்தானால் செனாதான் ரகா லாபுவிற்கு வழங்கப்பட்டது. அந்த நேரத்தில் பினாங்கு தீவு கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது.

மிகப் பழமையான மலாய்k குடியேற்றம்[தொகு]

பின்னர் செனாதான் ரகா லாபுவும் அவரின் 90 உதவியாளர்களும் பத்து உபானுக்குச் சென்றனர். அவர்களுக்கு வழங்கப்பட்ட அந்த நிலத்தில் தென்னை மற்றும் கரும்பு தோட்டங்களை உருவாக்கினர்.[2]

1734 - 1749-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பத்து உபான் நிறுவப்பட்டது. அந்த வகையில் பினாங்குத் தீவில் மிகப் பழமையான மலாய் குடியேற்றமாக மாறியுள்ளது. 1786-இல் பிரான்சிஸ் லைட் (Captain Francis Light) பினாங்குத் தீவிற்கு வருவதற்கு முன்னதாகவே பத்து உபான் குடியிருப்புப் பகுதி உருவாக்கப்பட்டு விட்டது.

துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை[தொகு]

இருப்பினும், 20-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பத்து உபான் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காணத் தொடங்கியது. 1980-களில் பத்து உபானுக்கு வடக்கே பினாங்கு பாலம் கட்டி முடிக்கப்பட்டது. அதன்பின், பத்து உபான் கடற்கரையோரத்தில் துன் டாக்டர் லிம் சோங் யூ விரைவுச்சாலை (Tun Dr Lim Chong Eu Expressway) அமைக்கப்பட்டது. அவையே இந்தப் பகுதியின் விரைவான வளர்ச்சிக்கு முத்தாய்ப்புகளாக அமைகின்றன.[1][5]

பினாங்கு தீவின் ஒரே பொதுப் பல்கலைக்கழகம், மலேசிய அறிவியல் பல்கலைக்கழகம் (Universiti Sains Malaysia); பத்து உபான் பகுதியின் வடமேற்கே அமைந்துள்ளது. 2016 புள்ளிவிவரங்களின்படி உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் (QS World University Rankings), மலேசியாவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றது.[6]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Earliest Malay settlement in Penang – Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  2. 2.0 2.1 2.2 "USM News Portal – BATU UBAN PETEMPATAN AWAL ORANG PULAU PINANG". news.usm.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  3. "www.propertyguru.com.my/condo/condo-718". www.propertyguru.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  4. "www.propertyguru.com.my/condo/e-park-condominium-717". www.propertyguru.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  5. 5.0 5.1 "Specially crafted for serene living – Community | The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-23.
  6. "QS World University Rankings 2016". Top Universities. 2016-08-25. https://www.topuniversities.com/university-rankings/world-university-rankings/2016. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பத்து_உபான்&oldid=3530304" இலிருந்து மீள்விக்கப்பட்டது