உள்ளடக்கத்துக்குச் செல்

செபராங் பிறை மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செபராங் பிறை மாநகராட்சி
Seberang Perai City Council
Majlis Bandaraya Seberang Perai
மரபு சின்னம் அல்லது சின்னம்
செபராங் பிறை மாநகராட்சியின் சின்னம்
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்பு1976
முன்புசெபராங் பிறை நகராட்சி
(Seberang Perai Municipal Council)
தலைமை
மாநகர முதல்வர்
அசார் அர்சாட்
(Azhar Arshad)
தலைமை செயலாளர்
ரொசானி மாமுட்
(Rosnani Mahmod) (2017 – )
கட்டமைப்பு
உறுப்பினர்கள்24
அரசியல் குழுக்கள்
உறுப்பினர்கள்:
குறிக்கோளுரை
(நாம் ஆசைப்படும் நகரம் நமக்கு எதிரில்
(Seberang Perai Aspiring City of Tomorrow)
(Seberang Perai Aspirasi Bandar Masa Hadapan)
கூடும் இடம்
செபராங் பிறை மாநகராட்சி தலைமையகம், பண்டார் பெர்டா, புக்கிட் மெர்தாஜாம்
வலைத்தளம்
www.mbsp.gov.my/index.php/en/
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

செபராங் பிறை மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Seberang Perai (MBSP); ஆங்கிலம்: Seberang Perai City Council) (SPCC); என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் செபராங் பிறை மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். அத்துடன் பினாங்கு, செபராங் பிறை பகுதியையும் முழுமையாக இந்த மாநகராட்சி நிர்வாகம் செய்கிறது[1].

1976-இல் நிறுவப்பட்ட, இந்த செபராங் பிறை மாநகராட்சியின் அதிகார வரம்பில் பட்டர்வொர்த், புக்கிட் மெர்தாஜாம், பத்து காவான், நிபோங் திபால் போன்ற பல முக்கிய நகரங்கள் உள்ளன. செபராங் பிறை மாநகராட்சி வரம்பின் மொத்த பரப்பளவு 738 சதுர கிலோ மீட்டர்.

மலேசியாவில் உள்ள மற்ற மாநகராட்சிகளைப் போலவே இந்த செபராங் பிறை மாநகராட்சியும் நகர மேலாண்மை; நகரத் திட்டமிடல்; செபராங் பிறை மாநகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு; பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை; சுற்றுச்சூழல் பாதுகாப்பு; மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு; சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுத்திக் கொள்கிறது.[2]

வரலாறு[தொகு]

19-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வெல்லசுலி மாநிலம் (இப்போது செபராங் பிறை) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் மூலம் படிப்படியாகக் கையகப்படுத்தப்பட்டது. 1850-களில் பட்டர்வொர்த் நகரம் 'புரோவின்ஸ் வெல்லசுலி' மாநிலத்திற்குள் ஒரு முக்கிய நகரமாக வளர்ச்சியடையத் தொடங்கியது.[3][4]

இன்றைய செபராங் பிறை மாநகரத்தைக் கொண்ட நிலப்பகுதி, முன்னர் காலத்தில் கெடாவின் ஒரு பகுதியாக இருந்தது. 1800-ஆம் ஆண்டில் அந்த நிலப்பகுதி பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரித்தானியர் அந்த நிலப்பகுதியை வெல்லசுலி மாநிலம் (Province Wellesley) என்று பெயரிட்டனர். 1867-ஆம் ஆண்டில் செபராங் பிறை மாநகரம் பிரித்தானிய முடியாட்சியின் காலனியாக மாற்றப்பட்டது.

ரிச்சர்டு வெல்லசுலி[தொகு]

1797-ஆம் ஆண்டில் இருந்து 1805-ஆம் ஆண்டு வரை ரிச்சர்டு வெல்லசுலி (Richard Wellesley) என்பவர் மெட்ராஸ் மாநில ஆளுநராகவும்; வங்காளத்தின் தலைமை ஆளுநகராகவும் பணியாற்றியவர். அவரின் நினைவாக, செபராங் பிறைக்கு புரோவின்ஸ் வெல்லசுலி என்று பெயரிடப்பட்டது. செபராங் பிறையின் பழைய பெயர் புரோவின்ஸ் வெல்லசுலி.[5][6]

செபராங் பிறையின் உள்ளாட்சி நிர்வாகம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் தொடங்கியது. 1896-இல், பினாங்கு உள்ளூராட்சி அதிகாரிகளின் நேர்த்தியான நிர்வாகத்தை உறுதி செய்வதற்காக முதல் உள்ளாட்சி நிர்வாகம் அறிமுகப்படுத்தப்பட்டது. 1913-இல் மற்றொரு சட்டம் இயற்றப்பட்டது. பினாங்கு வெல்லசுலி மாநிலத்திற்குள் மூன்று கிராமப்புற வாரியங்களுடன் ஒரு நகர வாரியத்தையும் இணைப்பதற்கு அந்தச் சட்டம் வகை செயதது.[3][1]

கிராம நகர உள்ளாட்சி வாரியங்கள்[தொகு]

1913-இல் செபராங் பிறையில் உருவாக்கப்பட்ட உள்ளாட்சி வாரியங்கள்:

 • பட்டர்வொர்த் நகராட்சி மன்றம்
 • வெல்லசுலி மாநில வடக்கு ஊரக மாவட்ட வாரியம்
 • வெல்லசுலி மாநில மத்திய கிராமப்புற மாவட்ட வாரியம்
 • வெல்லசுலி மாநில தெற்கு கிராமப்புற மாவட்ட வாரியம்

வெல்லசுலி மாநிலத்தில் உள்ளாட்சிகளின் மாற்றங்கள் 1952-ஆம் ஆண்டு வரை தொடர்ந்தன. பின்னர் 1913-இல் செபராங் பிறையில் உருவாக்கப்பட்ட நான்கு உள்ளாட்சி வாரியங்களும் உள்ளூராட்சி மன்றங்களாக தரம் உயர்த்தப்பட்டன. இந்த மேம்பாடுகள் 1953-ஆம் ஆண்டில் அமலுக்கு வந்தன. கூடுதலாக, புக்கிட் மெர்தாஜாம் நகராட்சி மன்றம் 1953-இல் உருவாக்கப்பட்டது. இது வெல்லசுலி மாநிலத்தில் அப்போது இருந்த மொத்த உள்ளூர் உள்ளூராட்சிகளின் எண்ணிக்கையை ஐந்தாக அதிகரிக்கச் செய்தது.[7][8]

1953-ஆம் ஆண்டின் உள்ளூராட்சிகள்[தொகு]

 • பட்டர்வொர்த் நகராட்சி மன்றம்
 • புக்கிட் மெர்தாஜாம் நகராட்சி மன்றம்
 • வெல்லசுலி மாநில வடக்கு ஊரக மாவட்ட வாரியம்
 • வெல்லசுலி மாநில மத்திய கிராமப்புற மாவட்ட வாரியம்
 • வெல்லசுலி மாநில தெற்கு கிராமப்புற மாவட்ட வாரியம்

மலேசிய உள்ளாட்சிச் சட்டம் 1976 இயற்றப்பட்டதைத் தொடர்ந்து, உள்ளூர் வாரியம் செபராங் பிறை நகராட்சி எனும் பெயரைப் பெற்றது. அந்தக் கட்டத்தில் செபராங் பிறை நகராட்சியின் அதிகார வரம்பு 738 சதுர கிமீ பரப்பளவைக் கொண்டிருந்தது. அத்துடன் நில அளவைப் பொறுத்தவரை மலேசியாவின் மிகப்பெரிய நகராட்சி மன்றமாகவும் விளங்கியது.[3][7]

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "From 16th September 2019, the Municipal Council of Seberang Perai (MPSP) has been officially declared as Seberang Perai City Council (MBSP), with all the rights of a city". www.mbsp.gov.my. பார்க்கப்பட்ட நாள் 29 April 2024.
 2. Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
 3. 3.0 3.1 3.2 "History". www.mpsp.gov.my (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
 4. "Province Wellesley or Seberang Perai? - anilnetto.com" (in en-GB). anilnetto.com. 2014-11-18. http://anilnetto.com/society/malaysian-history/old-penang/province-wellesley-seberang-perai/. 
 5. Waite, Arthur Edward (2007). A New Encyclopedia of Freemasonry. Vol. vol. I. Cosimo, Inc. p. 400. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-60206-641-0. {{cite book}}: |volume= has extra text (help)
 6. "WELLESLEY, Richard Colley, 2nd Earl of Mornington [I] (1760-1842), of Dangan Castle, co. Meath". History of Parliament. பார்க்கப்பட்ட நாள் 29 Dec 2017.
 7. 7.0 7.1 "Penang". Penang. பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.
 8. "The Penang Island City agenda". www.thesundaily.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2017-04-29.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=செபராங்_பிறை_மாநகராட்சி&oldid=3944349" இலிருந்து மீள்விக்கப்பட்டது