குவாந்தான் மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குவாந்தான் மாநகராட்சி
Kuantan City Council
Majlis Bandaraya Kuantan
வகை
வகை
மாநகர் மன்றம்
வரலாறு
தோற்றுவிப்பு21 பிப்ரவரி 2021
முன்புகுவாந்தான் நகராட்சி
தலைமை
நகர முதல்வர்
அம்டான் உசேன்
Hamdan Hussin
21 பிப்வரி 2021
தலைமைச் செயலாளர்
யூசோப் உசேன்
Yusoff Husain
21 பிப்வரி 2021
கூடும் இடம்
குவாந்தான் மாநகராட்சி தலைமையகம்
Kompleks Bandaraya Kuantan, Jalan Tanah Putih, 25100 Kuantan, Pahang Darul Makmur, குவாந்தான், பகாங்
வலைத்தளம்
mbk.gov.my
அரசியலமைப்புச் சட்டம்
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா)
Local Government Act 1976

குவாந்தான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuantan; ஆங்கிலம்: Kuantan City Council); (சுருக்கம்: MBK) என்பது மலேசியா, பகாங் மாநிலத்தில்; குவாந்தான் மாநகரத்தை நிர்வகிக்கும் மாநகராட்சி ஆகும். இந்த மாநகராட்சி மலேசியாவின் பகாங் மாநில அரசாங்க அதிகார வரம்பின் கீழ் செயல்படுகிறது.

குவாந்தான் மாநகராட்சியின் அதிகார வரம்பு 324 சதுர கி.மீ. பரப்பளவைக் கொண்டது. இந்த மாநகராட்சி, குவாந்தான் மாநகரில உள்ள கோலா குவாந்தான் (Kuala Kuantan), உலு குவாந்தான் (Ulu Kuantan), பெசேரா (Beserah) மற்றும் சுங்கை காராங் (Sungai Karang) ஆகிய நான்கு முக்கிம்களை நிர்வகிக்கிறது.

1955-ஆம் ஆண்டில், பகாங் மாநில அரசாங்கம், தன் நிர்வாக மையத்தை கோலா லிப்பிஸ் (Kuala Lipis) நகரில் இருந்து குவாந்தான் நகருக்கு மாற்றியது.

வரலாறு[தொகு]

வளர்ச்சிப் படிகள்[தொகு]

  • குவாந்தான் பொதுத் தூய்மைக் கழகம் (மலாய்: Lembaga Kesihatan Kuantan; ஆங்கிலம்: Kuantan Sanitary Board); 1913 முதல் 1937 வரை;
  • குவாந்தான் நகரக் கழகம் (மலாய்: Lembaga Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Board); 1937 முதல் 1953 வரை;
  • குவாந்தான் நகராண்மைக் கழகம் (மலாய்: Majlis Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Council); 1953 முதல் 31 ஆகஸ்ட் 1979 வரை;
  • குவாந்தான் நகராட்சி (மலாய்: Majlis Bandaran Kuantan; ஆங்கிலம்: Kuantan Town Council); 1 செப்டம்பர் 1979 முதல் 20 பிப்ரவரி 2021 வரை;
  • குவாந்தான் மாநகராட்சி (மலாய்: Majlis Bandaraya Kuantan; ஆங்கிலம்: Kuantan City Council); 20 பிப்ரவரி 2021 தொடக்கம்;

2021 பிப்ரவரி 21-ஆம் தேதி பகாங் சுலதான் அல்-சுல்தான் அப்துல்லா அல்-ஹாஜ் (Al-Sultan Abdullah Al-Haj), குவாந்தான் நகராட்சியை ஒரு மாநகராட்சியாக அறிவித்தார்.[1]

பொது[தொகு]

மாநகராட்சி முதல்வரும்; மாநகராட்சி மன்ற உறுப்பினர்களும் ஓராண்டு காலம் பணியாற்ற பகாங் மாநில அரசாங்கத்தால் நியமிக்கப்படுகின்றனர்.

இந்த மாநகராட்சியின் நோக்கம்; குவாந்தான் மாநகரத்தின் உள்கட்டமைப்பு, பொது வசதிகளைப் பராமரிப்பதாகும். மேலும், கட்டடங்களை ஒழுங்கான முறையில் கட்டமைப்பது; பொது சுகாதாரத்தைப் பாதுகாப்பது; சுற்றுச் சூழலை அழகுபடுத்துவது; போன்றவை இந்த மாநகராட்சியின் முக்கியச் செயல்பாடுகள் ஆகும்.[2].

நகர்ப்புற வளர்ச்சி[தொகு]

குவாந்தானின் புதிய வளர்ச்சித் திட்டங்கள்:

  • குவாந்தான் 188 (The Kuantan 188) - கிழக்கு கடற்கரையில் 188 மீ. உயரத்தில் உள்ள மிக உயரமான கண்காணிப்பு கோபுரம்;
  • மாநில நிர்வாக மையத்தை பண்டார் இந்திரா மக்கோத்தா (Bandar Indera Mahkota) (Kota SAS) புதுநகருக்கு மாற்றுதல்.
  • குவாந்தான் துறைமுகத்தை விரிவாக்கம் செய்தல்;
  • மலேசியா-சீனா குவாந்தான் தொழில் பூங்கா (Malaysia-China Kuantan Industrial Park); மற்றும் குவாந்தான் இயற்கைப் பூங்கா உருவாக்கம் (Kuantan Integrated Biopark);[3]
  • கோலாலம்பூர் - குவாந்தான் கிழக்கு கடற்கரை தொடருந்து இணைப்புத் திட்டம் (East Coast Rail Link - ECRL);[4]
  • திராங்கானு, கெர்த்தே, நகரில் இருந்து பகாங், பெக்கான், வரையிலான குவாந்தான் பெருநகர வளர்ச்சித் திட்டம் (Greater Kuantan Development);[5]

குவாந்தான் மாநகராட்சியில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்[தொகு]

மலேசியா; பகாங்; குவாந்தான் மாநகராட்சியில் 3 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 365 மாணவர்கள் பயில்கிறார்கள். 46 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
CBD4051 பண்டார் இந்திரா மக்கோத்தா
Bandar Indera Mahkota
SJK(T) Bandar Indera Mahkota பண்டார் இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி குவாந்தான் 287 25
CBD4052 பண்டார் டமான்சாரா
Bandar Damansara
SJK(T) Ladang Jeram ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி (குவாந்தான்)[6] குவாந்தான் 42 11
CBD4053 பஞ்சிங்
Panching
SJK(T) Ladang Kuala Reman கோலா ரேமான் தோட்டத் தமிழ்ப்பள்ளி[7] குவாந்தான் 36 10

இந்திரா மக்கோத்தா தமிழ்ப்பள்ளி செய்திப் படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Status bandar raya kejayaan kepada usaha tingkatkan pembangunan daerah". BERNAMA. 21 Februari 2021 இம் மூலத்தில் இருந்து 22 Februari 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210221174047/https://bernama.com/bm/am/news.php?id=1933671. 
  2. Mohd Yahya, N., The local government system in Peninsular Malaysia: with special reference to the structure, management, finance and planning, 1987
  3. "Kuantan Port expansion to improve economic ties with China". Thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  4. "New KL-East Coast double-track railway link planned". Paultan.org. 16 March 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  5. "About ECER". Ecerdc.com.my. Archived from the original on 2020-09-30. பார்க்கப்பட்ட நாள் 2022-09-05.
  6. "SJK T Ladang Jeram di bandar Kuantan". my.worldorgs.com.
  7. Reman, Ladang Kuala (11 September 2016). "SEJARAH SEKOLAH". SJK(T) LADANG KUALA REMAN (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 6 June 2021.

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குவாந்தான்_மாநகராட்சி&oldid=3537433" இலிருந்து மீள்விக்கப்பட்டது