கோலா சிலாங்கூர் நகராட்சி
கோலா சிலாங்கூர் நகராட்சி Kuala Selangor Municipal Council Majlis Perbandaran Kuala Selangor | |
---|---|
கோலா சிலாங்கூர் நகராட்சி சின்னம் | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 6 பிப்ரவரி 1978 |
தலைமை | |
நகர முதல்வர் | |
கட்டமைப்பு | |
உறுப்பினர்கள் | 24 |
அரசியல் குழுக்கள் | நகராட்சி மன்ற உறுப்பினர்கள்:
|
கூடும் இடம் | |
கோலா சிலாங்கூர் நகராட்சி தலைமையகம் Jalan Majlis, 45000 Kuala Selangor சிலாங்கூர் | |
வலைத்தளம் | |
www | |
அரசியலமைப்புச் சட்டம் | |
உள்ளாட்சி சட்டம் 1976 (மலேசியா) Local Government Act 1976 |
கோலா சிலாங்கூர் நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Kuala Selangor; ஆங்கிலம்: Kuala Selangor Municipal Council); (சுருக்கம்: MPHS) என்பது மலேசியா, சிலாங்கூர், கோலா சிலாங்கூர் மாவட்டம் (Kuala Selangor District); மற்றும் அதைச் சுற்றியுள்ள இடங்களை நிர்வகிக்கும் நகராட்சி ஆகும். இந்த நகராட்சி மலேசியாவின் சிலாங்கூர் மாநில அரசாங்கத்தின் கீழ் இயங்குகிறது.[3]
கோலா சிலாங்கூர் நகராட்சி, சிலாங்கூர் மாநிலச் சட்டக் கையேடு 18/78 (Selangor State Law Handbill 18/78) மூலம், 1978 பிப்ரவரி 6-ஆம் தேதி உருவாக்கப்பட்டது; 119,452 எக்டேர் பரப்பளவைக் கொண்டது.[3]
மாவட்ட ஊராட்சிகள்
[தொகு]கோலா சிலாங்கூர் நகராட்சி ஐந்து கிராமப்புற மாவட்ட ஊராட்சிகளை (Local Council) கொண்டது.
- கோலா சிலாங்கூர் ஊராட்சி (Kuala Selangor Local Council)
- தஞ்சோங் காராங் ஊராட்சி (Tanjong Karang Local Council)
- பத்தாங் பெர்ஜுந்தை ஊராட்சி (Batang Berjuntai Local Council)
- ஈஜோக் ஊராட்சி (Ijok Local Council)
- ஜெராம் ஊராட்சி (Jeram Local Council')
பொது
[தொகு]பொறுப்புகள்
[தொகு]- பொதுச் சுகாதாரம் (Public Health)
- கழிவு மேலாண்மை (Waste Removal)
- நகர மேலாண்மை (Town Management)
- நகரத் திட்டமிடல் (Town Planning)
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு (Environmental Protection)
- கட்டடக் கட்டுப்பாடு (Building Control)
- சமூகப் பொருளாதார மேம்பாடு (Social Economic Development);
- நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு (General Maintenance of Urban Infrastructure)
கோலா சிலாங்கூர் மாவட்டம்
[தொகு]கோலா சிலாங்கூர் மாவட்டத்திற்கு (Kuala Selangor District) வடக்கில் சபாக் பெர்ணம் மாவட்டம்; மேற்கில் உலு சிலாங்கூர் மாவட்டம்; & கோம்பாக் மாவட்டம்; தென் மேற்கில் பெட்டாலிங் மாவட்டம்; தெற்கில் கிள்ளான் மாவட்டம்; ஆகிய மாவட்டங்கள் உள்ளன
கோலா சிலாங்கூர் மாவட்டத்தின் முக்கிய நகரங்கள்: தஞ்சோங் காராங்; கோலா சிலாங்கூர். இந்த மாவட்டத்தின் முக்கிய நகரம் கோலா சிலாங்கூர்.[4]
இந்த மாவட்டத்தைக் கோலா சிலாங்கூர் பிரிவு; தஞ்சோங் காராங் பிரிவு; என இரு பிரிவுகளாக சிலாங்கூர் ஆறு பிரிக்கின்றது. சிலாங்கூர் ஆறு இந்த மாவட்டத்தை ஊடுருவிச் செல்வதால் அந்த ஆற்றின் பெயரே கோலா சிலாங்கூர் நகரத்திற்கும் மாவட்டத்திற்கும் வைக்கப்பட்டு உள்ளது.
நிர்வாகப் பகுதிகள்
[தொகு]கோலா சிலாங்கூர் மாவட்டம், கோலா சிலாங்கூர் நகராட்சி மன்றத்தால் நிர்வாகம் செய்யப் படுகிறது.
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள முக்கிம்கள்
[தொகு]- அப்பி அப்பி (Api-Api)
- பெஸ்தாரி ஜெயா (Bestari Jaya)
- உஜோங் பெர்மாத்தாங் (Hujong Permatang)
- உலு திங்கி (Hulu Tinggi)
- ஈஜோக் (Ijok)
- ஜெராம் (Jeram)
- கோலா சிலாங்கூர் (Kuala Selangor)
- பாசாங்கான் (Pasangan)
- தஞ்சோங் காராங் (Tanjung Karang)
கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்
[தொகு]கோலா சிலாங்கூர் நகராட்சிக்கு உடபட்ட கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் 17 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 1,676 மாணவர்கள் பயில்கிறார்கள். 221 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியாவில் அதிகமான தமிழ்ப்பள்ளிகள் உள்ள மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.[5][6]
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
BBD3048 | பெஸ்தாரி ஜெயா (பத்தாங் பெர்ஜுந்தை) |
SJK(T) Bestari Jaya[7] | பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 495 | 39 |
BBD3049 | ஜெராம் | SJK(T) Ldg Braunston[8] | பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | 90 | 14 |
BBD3051 | புக்கிட் செராக்கா தோட்டம் | SJK(T) Ldg Bukit Cheraka[9] | புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | 119 | 15 |
BBD3052 | புக்கிட் ஈஜோக் தோட்டம் | SJK(T) Ldg Bkt Ijok (மூடப்பட்டு விட்டது. 2021-க்குள் சுங்கை பீலேக், சிப்பாங் பகுதிக்கு இடம் பெயர்கிறது)[10] |
புக்கிட் ஈஜோக் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45800 | ஜெராம் | * | * |
BBD3055 | சுங்கை பூலோ Bandar Seri Coalfields |
SJK(T) Ldg Coalfields | கோல்பீல்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47000 | சுங்கை பூலோ | 100 | 11 |
BBD3056 | சுங்கை பூரோங் செகிஞ்சான் Sekinchan |
SJK(T) Ghandiji Sekinchan | காந்திஜி தமிழ்ப்பள்ளி செகிஞ்சான் | 45400 | பந்திங் | 22 | 7 |
BBD3057 | ஹோப்புள் தோட்டம் | SJK(T) Ldg Hopeful | ஹோப்புள் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 17 | 7 |
BBD3058 | கம்போங் பாரு தோட்டம் | SJK(T) Ldg Kg Baru | கம்போங் பாரு தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 19 | 7 |
BBD3060 | சுங்கை தெராப் தோட்டம் | SJK(T) Ladang Sungai Terap | சுங்கை தெராப் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 46 | 10 |
BBD3061 | கோலா சிலாங்கூர் தோட்டம் | SJK(T) Ldg Kuala Selangor | கோலா சிலாங்கூர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 62 | 11 |
BBD3064 | கோலா சிலாங்கூர் | SJK(T) Ldg Raja Musa | ராஜா மூசா தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 36 | 10 |
BBD3065 | புக்கிட் ரோத்தான் | SJK(T) Bukit Rotan Baru | புக்கிட் ரோத்தான் பாரு தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 40 | 10 |
BBD3066 | புக்கிட் பெலிம்பிங் Bukit Belimbing |
SJK(T) Ldg Riverside | ரீவர்சைட் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 50 | 10 |
BBD3068 | சிலாங்கூர் ரீவர் தோட்டம் | SJK(T) Ldg Selangor River | சிலாங்கூர் ரீவர் தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | புக்கிட் ரோத்தான் | 87 | 13 |
BBD3069 | சுங்கை பூலோ தோட்டம் | SJK(T) Ldg Sg Buloh | சுங்கை பூலோ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45700 | கோலா சிலாங்கூர் | 29 | 7 |
BBD3071 | சுங்குரும்பை தோட்டம் | SJK(T) Ldg Sg Rambai | சுங்குரும்பை தோட்டத் தமிழ்ப்பள்ளி | 45600 | பெஸ்தாரி ஜெயா | 46 | 11 |
BBD3072 | துவான் மீ தோட்டம் | SJK(T) Ladang Tuan Mee | துவான் மீ தோட்டத் தமிழ்ப்பள்ளி | 47000 | சுங்கை பூலோ | 57 | 11 |
BBD3073 | கோலா சிலாங்கூர் | SJK(T) Vageesar | வகீசர் தமிழ்ப்பள்ளி | 45000 | கோலா சிலாங்கூர் | 361 | 28 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "YDP's Profile". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Portal Kerajaan Negeri Selangor Darul Ehsan". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
- ↑ 3.0 3.1 "In the 25 years since its establishment, MPKS has gone through a series of expansion of its area starting with the gazetting of the area as shown in gazetted plan PW 459 which was gazetted on 6 February 1978,". பார்க்கப்பட்ட நாள் 10 May 2023.
- ↑ "SEMPADAN DUN BAGI DAERAH HULU SELANGOR - Portal Rasmi PDT Hulu Selangor Peta Daerah". www.selangor.gov.my. பார்க்கப்பட்ட நாள் 6 December 2021.
- ↑ "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. பார்க்கப்பட்ட நாள் 2021-12-06.
- ↑ "கோலா சிலாங்கூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள் - Schools". Official Portal of Kuala Selangor Municipal Council (MPKS). 6 January 2016. Archived from the original on 7 டிசம்பர் 2021. பார்க்கப்பட்ட நாள் 7 December 2021.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Razak, Najib (28 April 2013). "பெஸ்தாரி ஜெயா தமிழ்ப்பள்ளி - Majlis Perasmian SJKT Bestari Jaya". பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "பிராவுண்ஸ்டன் தோட்டத் தமிழ்ப்பள்ளி - GO English! 2018-19 Project Video (SJKT Ladang Braunston #1)" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "புக்கிட் செராக்கா தோட்டத் தமிழ்ப்பள்ளி - SJK(T) Ladang Bukit Cheraka Menyambut Hari Merdeka" (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 December 2021.
- ↑ "Teo Nie Ching (张念群)". www.facebook.com.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Kuala Selangor தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- உலு சிலாங்கூர் நகராட்சி இணையத்தளம்