ஆங் துவா ஜெயா நகராட்சி
ஆங் துவா ஜெயா நகராட்சி Hang Tuah Jaya Municipal Council Majlis Perbandaran Hang Tuah Jaya | |
---|---|
வகை | |
வகை | |
வரலாறு | |
தோற்றுவிப்பு | 1 சனவரி 2010 |
முன்பு | மலாக்கா வரலாற்று நகர நகராட்சி (Historical City of Malacca Municipal Council) |
தலைமை | |
மாநகர முதல்வர் | சாபியா அருண் Sapiah Haron |
மாநகரச் செயலாளர் | ரொகாயா அப்துல்லா Rohaya Abdullah |
கூடும் இடம் | |
ஆங் துவா ஜெயா நகராட்சி தலைமையகம் SF-01, Aras 2, Kompleks Melaka Mall, துன் ரசாக் சாலை - லெபோ ஆயர் குரோ, ஆங் துவா ஜெயா, 75450, ஆயர் குரோ, மலாக்கா | |
வலைத்தளம் | |
www |
ஆங் துவா ஜெயா நகராட்சி (மலாய்: Majlis Perbandaran Hang Tuah Jaya; ஆங்கிலம்: Hang Tuah Jaya Municipal Council); (சுருக்கம்: MPHTJ) என்பது மலேசியா, மலாக்கா மாநிலத்தில் ஆங் துவா ஜெயா நகரம்; மத்திய மலாக்கா மாவட்டத்தின் வடக்குப் பகுதி; ஜாசின் மாவட்டத்தின் மேற்குப் பகுதி; அலோர் காஜா மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதி; ஆகிய பகுதிகளை நிர்வகிக்கும் உள்ளூர் நகராட்சி ஆகும். மலாக்கா மாநில அரசாங்கத்தின் கீழ் இந்த நகராட்சி செயல்படுகிறது.[1]
ஆங் துவா ஜெயா நகராட்சியின் பிரதான தலைமையகம், ஆங் துவா ஜெயா, ஆயர் குரோவில், கோத்தாமாஸ் என முன்னர் அறியப்பட்ட மலாக்கா மால் பேரங்காடியில், மலாக்கா மாநகராட்சி தலைமையகத்திற்கு எதிரே அமைந்துள்ளது.
உள்ளூராட்சிச் சட்டம் 1976, (சட்டம் 171)-இன் பிரிவு 3-இன் கீழ்; ஆங் துவா ஜெயா நகரின் உள்ளூர் நகராட்சியாக ஆங் துவா ஜெயா நகராட்சி நிறுவப்பட்டது; மற்றும் 1 ஜனவரி 2010-இல் ஆங் துவா ஜெயா நகராட்சி செயல்படத் தொடங்கியது.[2]
செயல்பாடுகள்
[தொகு]ஆங் துவா ஜெயா நகராட்சியின் செயல்பாடுகள்:
- ஆங் துவா ஜெயாநகர மேலாண்மை;
- ஆங் துவா ஜெயாநகர நகரத் திட்டமிடல்;
- ஆங் துவா ஜெயாநகரத்தின் கட்டடங்கள் கட்டுப்பாடு;
- பொதுச் சுகாதாரம்; கழிவு மேலாண்மை;
- சுற்றுச்சூழல் பாதுகாப்பு;
- நகர்ப்புற உள்கட்டமைப்பின் பொது பராமரிப்பு;
- சமூகப் பொருளாதார மேம்பாடு.
ஆங் துவா ஜெயா நகராட்சி முதல்வர்கள்
[தொகு]# | முதல்வர் | பதவியில் |
---|---|---|
1 | கமருதீன் சா | 2010–2011 |
2 | சாபியா அருண்[3] | 2011–2014 |
3 | சாலி மாட் யாசின் | 2014–2015 |
4 | மன்சூர் சுடின்[4] | 2015–2017 |
5 | மூராட் உசேன் | 2017–2018 |
6 | மகானி மசுபான் | 2018–2019 |
7 | முகமது ரபி இப்ராகிம் | 2019 – 31 மார்ச் 2020 |
8 | சாடான் ஒசுமான்[5] | 1 ஏப்ரல் 2020 - 31 சனவரி |
9 | சாபியா அருண் | பிப்ரவரி 1, 2023–தற்போது வரையில் |
துறைகள் மற்றும் பிரிவுகள்
[தொகு]12 துறைகள் மற்றும் 5 பிரிவுகள்
- உள் தணிக்கை பிரிவு
- சட்ட பிரிவு
- ஒரு நிறுத்த மைய பிரிவு
- நிலுவைத் தொகை மேலாண்மை பிரிவு
- ஒருமைப்பாடு பிரிவு
- மேலாண்மை சேவை துறை
- நிதித்துறை
- அமலாக்கத் துறை
- சொத்து மதிப்பீடு மற்றும் மேலாண்மை துறை
- நகர்ப்புற திட்டமிடல் துறை
- பொறியியல் துறை
- உரிமத் துறை
- கார்ப்பரேட் மற்றும் சமூக சேவை துறை
- உயிரியல் பூங்கா துறை
- தகவல் தொழில்நுட்பத் துறை
- இயற்கை மற்றும் சுற்றுச்சூழல் சுகாதாரத் துறை
- கட்டிடக் கட்டுப்பாட்டுத் துறை
மேற்கோள்கள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் Hang Tuah Jaya தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்