நகர்ப்புற வடிவமைப்பு
Jump to navigation
Jump to search
நகர்ப்புற வடிவமைப்பு (Urban design) என்பது, நகரங்கள், பெருநகரங்கள் ஆகியவற்றின் ஒழுங்கமைப்பு, தோற்றம், செயற்பாடு என்பவற்றைத் தழுவிய ஒரு வடிவமைப்புத் துறையாகும். குறிப்பாக இது, நகப்புறப் பொது இடங்களின் வடிவமைப்பில் கவனம் செலுத்துகின்றது. முன்னர், இத்துறை, நகர்ப்புறத் திட்டமிடல், நிலத்தோற்றக்கலை, கட்டிடக்கலை ஆகிய துறைகளின் துணைத்துறையாகக் கருதப்பட்டது. ஆனால், நகர்ப்புற வடிவமைப்பானது, முற்கூறிய மூன்று துறைகளின் செயற்பாடுகளிலும் முக்கியத்துவம் பெற்றுவருவதால், இத் துறை, மேற்சொன்ன மூன்று துறைகளும் சந்திக்கும் இடத்தில் செயற்படுகின்றது என்று கூறலாம். அத்துடன் இவ்வடிவமைப்புத் துறையில், நகர்ப்புறப் பொருளியல், அரசியற் பொருளியல், சமூகக் கோட்பாடு ஆகியவை பற்றிய விளக்கமும் தேவைப்படுகின்றது.