உள்ளடக்கத்துக்குச் செல்

பத்து காவான் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பத்து காவான் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பத்து காவான் (P046)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Batu Kawan (P046)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
பத்து காவான் மக்களவைத் தொகுதி

மாவட்டம்தென் செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிபுக்கிட் மெர்தாஜாம் தொகுதி
முக்கிய நகரங்கள்பத்து காவான்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2003
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்சோவ் கோன் இயோவ்
(Chow Kon Yeow)
வாக்காளர்கள் எண்ணிக்கை88,812[1]
தொகுதி பரப்பளவு129 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் பத்து காவான் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (23.7%)
  சீனர் (54.1%)
  இதர இனத்தவர் (0.3%)

பத்து காவான் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Batu Kawan; ஆங்கிலம்: Batu Kawan Federal Constituency; சீனம்: 峇都交湾联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P046) ஆகும்.[3]

பத்து காவான் மக்களவைத் தொகுதி 2003-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 2004-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 2004-ஆம் ஆண்டில் இருந்து பத்து காவான் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பத்து காவான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது

[தொகு]

பத்து காவான் நகரம்

[தொகு]

பத்து காவான் நகரம் (Batu Kawan) பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். துரிதமாக வளர்ச்சி பெற்றுவருகிறது.

இந்த நகரத்தை பினாங்கு மாநிலத்தின் பாயான் லெப்பாஸ் மற்றும் பிறை தொழில்துறை நகரத்தைப் போல மாற்றம் செய்வதற்கு 1990-ஆம் ஆண்டில், பினாங்கு மாநில அரசு முடிவு செய்தது. அதன் விளைவாக 2000-ஆம் ஆண்டில், பினாங்கு மாநிலத்தின் விளையாட்டு அரங்கம் (Penang State Stadium) இங்கு கட்டப்பட்டது.[5]

மேலும் ஜோர்ஜ் டவுன் தலைநகர் சார்ந்த புறநகர்ப் பகுதிகளில் மக்கள் தொகை அதிகரிப்பால் பத்து காவான் நகரத்தை, ஜோர்ஜ் டவுன் மாநகரத்தின் துணைநகரமாக மாற்றுவதற்கு பினாங்கு மாநில அரசு செயலாக்கத்தில் ஈடுபட்டு உள்ளது.

கஸ்தூரி பட்டு

[தொகு]

கஸ்தூரி பட்டு, (Kasthuriraani Patto), மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவைக்கு, எதிர்க்கட்சி அணியில் தேர்வு செய்யப் பட்ட முதல் தமிழ்ப் பெண் ஆவார். 2018-ஆம் ஆண்டு நடைபெற்ற மலேசியாவின் 14-வது பொதுத் தேர்தலில், பினாங்கு, பத்து காவான் மக்களவைத் தொகுதியில் 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.[6]

கஸ்தூரி ராணிக்கு அந்த 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 42,683 வாக்குகள் (78.02%) கிடைத்தன. அவரை எதிர்த்து போட்டியிட்ட பாரிசான் நேசனல் வேட்பாளர் ஜெயந்தி தேவி பாலகுரு (Jayanthi Devi Balaguru) என்பவருக்கு 9,130 வாக்குகள் (16.69%) கிடைத்தன.

சீனர்கள் மிகுதியாக வாழும் பத்து காவான் தொகுதியில், ஓர் இளம் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாக அறியப்படுகிறது. அந்தத் தேர்தலில் அவர் ஜனநாயக செயல் கட்சியின் சார்பில் போட்டியிட்டார். இந்தத் தொகுதியில் 2018-ஆம் ஆண்டு பதிவுபெற்ற வாக்காளர்கள் 55,479 பேர். அவர்களில் சீனர்கள் ஏறக்குறைய 62 விழுக்காட்டினர்.

பத்து காவான் வாக்குச் சாவடிகள்

[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), பத்து காவான் மக்களவைத் தொகுதி 24 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[7]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
பிறை
(Perai)
(N16)
Taman Indrawasih 046/16/01 SMK Taman Inderawasih
Taman Chai Leng 046/16/02 SJK (C) Chung Hwa 3
Perai 046/16/03 SJK (T) Perai
Taman Perai 046/16/04 SK Khir Johari
Taman Supreme 046/16/05 SMK Prai
Taman Kimsar 046/16/06 SJK (C) Chung Hwa 3
புக்கிட் தெங்கா
(Bukit Tengah)
(N17)
Kampong Jawa 046/17/01 SJK (T) Ladang Prye
Jalan Pengkalan 046/17/02 SJK (C) Peng Bin
Kebun Sireh 046/17/03 SK Kebun Sireh
Bukit Tengah 046/17/04 SJK (C) Peng Bin
Kuala Juru 046/17/05
  • SK Juru
  • SJK (T) Juru
Juru 046/17/06 SJK (C) True Light
Taman Perwira 046/17/07 SMK Taman Perwira
Taman Sejati 046/17/08 SJK (C) Peng Bin
Taman Sentul Jaya 046/17/09 SMK Permai Indah
புக்கிட் தம்பூன்
(Bukit Tambun)
(N18)
Pulau Aman 046/18/01 SK Pulau Aman
Batu Kawan 046/18/02 SMK Batu Kawan
Bukit Tambun 046/18/03 SK Bkt Tambun
Taman Merak 046/18/04 SK Taman Merak
Kampong Baharu 046/18/05 SMK Simpang Empat
Ladang Valdor 046/18/06 SJK (T) Ladang Valdor
Perkampungan Valdor 046/18/07 SMK Valdor
Badak Mati 046/18/08 SJK (C) Chong Kuang
Rumah Murah Valdor 046/18/09 SJK (C) Kampung Valdor

பத்து காவான் மக்களவைத் தொகுதி

[தொகு]
பத்து காவான் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (2004 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
பாகான் (Bagan); புக்கிட் மெர்தாஜாம் (Bukit Mertajam); நிபோங் திபால் (Nibong Tebal)
தொகுதிகளில் இருந்து உருவாக்கப்பட்டது
11-ஆவது மக்களவை 2004–2008 உவான் செங் குவான்
(Huan Cheng Guan)
பாரிசான் (கெராக்கான்)
12-ஆவது மக்களவை 2008–2013 இராமசாமி பழனிச்சாமி
(Ramasamy Palanisamy)
பாக்காத்தான் ஜசெக
13-ஆவது மக்களவை 2013–2018 கஸ்தூரி பட்டு
(Kasthuriraani Patto)
14-ஆவது மக்களவை 2018–2022 பாக்காத்தான் (ஜசெக)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் சோவ் கோன் இயோவ்
(Chow Kon Yeow)

பத்து காவான் தேர்தல் முடிவுகள்

[தொகு]
பத்து காவான்; பத்து மூசாங் படகுத் துறையில் மலேசிய மக்களவை உறுப்பினர் கஸ்தூரி ராணியின் அறிவிப்பு பதாகை. கஸ்தூரி ராணி, இரு தவணைகள் (ஏறக்குறைய பத்து ஆண்டுகள்) பத்து காவான் மக்களவை உறுப்பினராகச் சேவை செய்துள்ளார்.
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
88,812 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
69,759 78.5%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
68,831 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
89 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
839 -
பெரும்பான்மை
(Majority)
40,400 58.69%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

பத்து காவான் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
சோவ் கோன் இயோவ்
(Chow Kon Yeow)
பாக்காத்தான் 50,744 73.72% -4.30
ஓங் சியா சென்
(Wong Chia Zen)
பெரிக்காத்தான் 10,344 15.03% +15.03 Increase
டான் லீ உவாட்
(Tan Lee Huat)
பாரிசான் 7,145 10.38% -6.31
ஓங் சின் வென்
(Ong Chin Wen)
சபா வாரிசான் 450 0.65% +0.65 Increase
லீ ஆ லியாங்
(Lee Ah Liang)
மக்கள் கட்சி 148 022% +0.22 Increase

பத்து காவான் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P046
பத்து காவான்
புக்கிட் தம்பூன்
புக்கிட் தெங்கா
பிறை

பத்து காவான் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N16 பிறை
(Perai)
இராமசாமி பழனிச்சாமி பாக்காத்தான் (ஜசெக)
N17 புக்கிட் தெங்கா
(Bukit Tengah)
கூய் சியோ லியூங்
(Gooi Hsiao Leung)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N18 புக்கிட் தம்பூன்
(Bukit Tambun)
கோ சூன் ஆயிக்
(Goh Choon Aik)

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "Three things we learned from: Batu Kawan and the Second Penang Bridge". 2014-03-01. http://www.themalaymailonline.com/malaysia/article/three-things-we-learned-from-batu-kawan-and-the-second-penang-bridge. 
  6. Kasthuri Patto the new MP for Batu Kawan.
  7. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 14 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

[தொகு]