இரிமாவ் தீவு

ஆள்கூறுகள்: 05°14′51″N 100°16′21″E / 5.24750°N 100.27250°E / 5.24750; 100.27250
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரீமாவ் தீவு
ரீமாவ் தீவு is located in மலேசியா மேற்கு
ரீமாவ் தீவு
ரீமாவ் தீவு
Rimau Islands
புவியியல்
அமைவிடம்பினாங்கு
ஆள்கூறுகள்05°14′51″N 100°16′21″E / 5.24750°N 100.27250°E / 5.24750; 100.27250
தீவுக்கூட்டம்தீபகற்ப மலேசியா
அருகிலுள்ள நீர்ப்பகுதிமலாக்கா நீரிணை
நிர்வாகம்
பினாங்கு மாநிலம்

ரீமாவ் தீவு (மலாய்: Pulau Rimau; ஆங்கிலம்:Rimau Island) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் உள்ள பினாங்கு தீவின் தெற்கு கடற்கரையில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.

பினாங்கு தீவின் தென்கிழக்கு முனையில் இருந்து ஏறக்குறைய 0.832 கி.மீ (0.517 மைல்) தொலைவில் ரீமாவ் தீவு அமைந்துள்ளது. மக்கள்தொகை இல்லாத இத்தீவில் தற்போது கலங்கரை விளக்கம் செயல்படுகிறது. இந்தக் கலங்கரை விளக்கம் 1885-ஆம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்டது.[1][2]

இந்தக் கலங்கரை விளக்கம், விளக்கு மற்றும் காட்சிக் கூடத்துடன் கூடிய 17 மீ (56 அடி) உருளை வடிவ வார்ப்பிரும்பு கோபுரமும், காப்பாளருக்கான ஒரு மாடி வீடும் கொண்டு, தெற்கில் இருந்து பினாங்கு நீரிணைக்குள் நுழையும் கப்பல்களுக்கு கலங்கரை விளக்கமாகச் செயல்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிமாவ்_தீவு&oldid=3421163" இருந்து மீள்விக்கப்பட்டது