பினாங்கு தீவு
பினாங்கு தீவு புலாவ் பினாங் Penang Island | |
---|---|
தீவு | |
அடைபெயர்(கள்): முத்து தீவு [1] | |
பினாங்கு இல் பினாங்கு தீவு (சிவப்பு) (இடது) மற்றும் மலேசியத் தீபகற்பம் (வலது) | |
ஆள்கூறுகள்: 5°24′52.2″N 100°19′45.12″E / 5.414500°N 100.3292000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
பிரித்தானியப் பேரரசு | 17 ஜூலை1786 - 31 ஆகஸ்ட் 1957 |
சப்பானியப் பேரரசு | 19 டிசம்பர் 1941 - 3 செப்டம்பர் 1945 |
மலேசியா | 31 ஆகஸ்ட் 1957- இப்போது |
பினாங்கு தீவு மாநகராட்சி | 2015 |
தலைநகரம் | ஜோர்ஜ் டவுன் |
அரசு | |
• பினாங்கு தீவு மாநகராட்சி மேயர் | ஆஜாபாட்டாயா ஸ்ம்மாய்யீள் |
பரப்பளவு | |
• தீவு | 305 km2 (118 sq mi) |
• மாநகரம் | 27,48,000 km2 (10,61,000 sq mi) |
மக்கள்தொகை (2010) | |
• தீவு | 7,40,200 |
• அடர்த்தி | 4,500/km2 (12,000/sq mi) |
• பெருநகர் | 22,50,000 |
நேர வலயம் | ஒசநே+8 (MST) |
இணையதளம் | mbpp |
பினாங்கு தீவு (Penang Island) (மலாய்: Pulau Pinang, புலாவ் பினாங்) மலேசியாவி்ல் அதிக மக்கள் தொகை கொண்ட பெரிய தீவு இத்த தீவு பினாங்கு மாநிலத்தின் ஒரு பகுதியாகும். மலாக்கா நீரிணையில் உள்ள 305சதுர கிமீ பரப்பளவுள்ள தீவு, மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இங்குதான் உள்ளது.
வரலாறு
[தொகு]பினாங்கு தீவு பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனியின் ஒரு வியாபாரியான பிரான்சிஸ் லைட்டால் 17 ஜூலை1786 ல் நிறுவப்பட்டது.
புவியியல்
[தொகு]புவியியல் ரீதியாக பினாங்கு தீவு இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது:
வடகிழக்கு பினாங்கு தீவு மாவட்டம்
[தொகு]மாநிலத்தின் தலைநகர் ஜோர்ஜ் டவுன் இந்த மாவட்டத்தில் உள்ளது.
தென்மேற்கு பினாங்கு தீவு மாவட்டம்
[தொகு]இது தெற்கு மற்றும் மேற்கு பினாங்கு தீவுகளை உள்ளடக்கியது, பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் இங்குதான் உள்ளது.
அரசாங்கமும் அரசியலும்
[தொகு]1965 ஆம் ஆண்டு மலேசியா இந்தோனேசிய மோதல் விளைவாக உள்ளூர் தேர்தல்கள் நிறுத்தப்பட்டது.1966 ஆம் ஆண்டு மாநகர சபை செயல்பாடுகளைப் பினாங்கு முதலமைச்சர் கீழ் மாற்றப்பட்டது. 1974 ஆம் ஆண்டில், ஒரு உள்ளூராட்சி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட்டு 1976 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு நகராட்சியின் கீழ் வந்தது. 2015 ல் பினாங்கு தீவு, பினாங்கு தீவு மாநகராட்சியின் கீழ் வந்தது.
நாடாளுமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்
நாடாளுமன்றம் | தொகுதி | நாடாளுமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|
பி.048 | கொடி மலை | சய்ரீல் ஜோகாரி | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | தஞ்ஞோங் | ங் வேய் ஆய்க் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | ஜெலுத்தோங் | ஒய் சுவான் ஆன் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | புக்கிட் குளுகோர் | ராம் கர்பால் சிங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.052 | புக்கிட் குளுகோர் | ராம் கர்பால் சிங் | ஜனநாயக செயல் கட்சி |
சட்டமன்றத்தில் உள்ள பினாங்கு தீவு பிரதிநிதிகள் பட்டியல்
Parliament | சட்டமன்றம் | தொகுதி | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி |
---|---|---|---|---|
பி.048 | என்.22 | தஞ்சோங் புங்ஙா | தே ஈ சியாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்.23 | தண்ணீர் மலை | லிம் குவான் எங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.048 | என்24 | கெபுன் புங்ஙா | சியா கா பெங் | மக்கள் நீதிக் கட்சி |
பி.048 | என்.25 | பூலாவ் தீகுஸ் | யாப் சூ ஹ்யூ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.26 | படாங் கோதா | சோவ் கோன் யாவ் | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.27 | பங்களான் கோதா | லாவ் கெங் ஈ | ஜனநாயக செயல் கட்சி |
பி.049 | என்.28 | கொம்டார் | தே லாய் ஹெங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.29 | டத்தோ கிராமாட் | ஜக்டீப் சிங் டியோ | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.30 | சுங்கை பினாங் | லிம் சியு கிம் | ஜனநாயக செயல் கட்சி |
பி.050 | என்.31 | பத்து லன்சாங் | லாவ் ஹெங் கியாங் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.32 | சிரி டெலிமா | நேதாஜி ராயர் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.33 | ஆயர் ஈதாம் | வோங் அன் வாய் | ஜனநாயக செயல் கட்சி |
பி.051 | என்.34 | பாயா தெருபோங் | யோ சுன் இன் | ஜனநாயக செயல் கட்சி |
போக்குவரத்து
[தொகு]எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள்
[தொகு]கடந்த காலத்தில், இங்கு எலக்ட்ரிக் டிராம்கள் மற்றும் இரட்டை அடுக்கு பேருந்துகள் இருந்தன.பின்னர் அவை 1970 ல் நிறுத்தப்பட்டன.
துன் டாக்டர் லிம் சொங் யூ நெடுஞ்சாலை
[தொகு]இது நகரத்தையும் பினாங்கு சர்வதேச விமான நிலையதையும் இணைக்கிறது. இந்த நெடுஞ்சாலை மூலம், விமான நிலையதை 30 நிமிடங்களிள் அடையளாம்.
பினாங்கு பாலம்
[தொகு]பினாங்கு பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பிறை மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக செப்டம்பர் 14, 1985 அன்று போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. பாலத்தின் மொத்த நீளம் 13.5 கி.மீ. (8.4 மைல்) ஆகும்.
பினாங்கு இரண்டாவது பாலம்
[தொகு]பினாங்கு இரண்டாவது பாலம் நிலப்பகுதியில் இருக்கும் பத்து காவான் மற்றும் கடலைத் தாண்டி இருக்கும் பினாங்கு தீவை இணைக்கிறது.இப்பாலம் மலேசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் நீண்ட பாலம் ஆகும். பாலத்தின் மொத்த நீளம் 24 கி.மீ. இப்பாலம் அதிகாரப்பூர்வமாக மார்ச் 1, 2014 அன்று திறக்கப்பட்டது.
பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம்
[தொகு]பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஐஏடிஏ: PEN, ஐசிஏஓ: WMKP), முன்பு பாயான் லெப்பாஸ் பன்னாட்டு வானூர்தி நிலையம் என்று அழைக்கப்பட்டது. பினாங்கின் தலைநகரான ஜோர்ஜ் டவுனிலிருந்து 14கிமீ (8.7மை) தொலைவில் இந்த வானூர்தி நிலையம் அமைந்துள்ளது. பினாங்கு பன்னாட்டு வானூர்தி நிலையம் 1935ல் திறக்கப்பட்டது. நாட்டின் பழைய வானூர்தி நிலையங்களில் ஒன்றாகும்.
ராபிட் பினாங்
[தொகு]ராபிட் பினாங் இது நகர பேருந்து நிறுவனம் ஆகும். ஜோர்ஜ் டவுன் கப்பல் துறை மற்றும் கொம்டார் கோபுரம் இதன் முக்கிய பேருந்து மையமாகும். இது ஜோர்ஜ் டவுன் மாநகரை பினாங்கு தீவுடன் இணைக்கிறது. ராபிட் பினாங் இலவச பஸ் சேவை உள்ளது. இந்த பஸ் சேவை ஜோர்ஜ் டவுன் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளத்துக்குள் மட்டுமே.
எக்ஸ்பிரஸ் பேருந்துகள்
[தொகு]சுங்கை நிபோங் பேருந்து நிலையம், இங்கு 24 மணி நேரம் செயல்படும் பல எக்ஸ்பிரஸ் பஸ் நிறுவனங்கள் உள்ளன, இது பினாங்கு தீவை மலேசியாவின் முக்கிய நகரங்களுடன் பொதுவாக கோலாலம்பூர், அலோர் ஸ்டார், ஈப்போ, குவாந்தான், ஜொகூர் பாரு, மற்றும் சிங்கப்பூர்ருடன் இணைக்கிறது.
பினாங்கு படகு சேவை
[தொகு]1920 ஆம் ஆண்டு தொடங்க பட்ட பினாங்கு படகு சேவை தலைநகர் ஜோர்ஜ் டவுன் நகரை பட்டர்வொர்த்துடன் இனைக்கிறது. இதில் பயணிகள், கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் பயணம் செய்யளாம்.
வானளாவிகள்
[தொகு]கொம்டார் கோபுரம்
[தொகு]கொம்டார் கோபுரம் இது ஜோர்ஜ் டவுன் மாநகர முக்கியப் பகுதியில் அமைந்துள்ள இக்கோபுரம் மலேசியாவின் ஆறாவது மிக உயரமான கட்டடம் ஆகும். கொம்டார் கோபுரம் சில்லறை விற்பனை நிலையங்கள், போக்குவரத்து மையம் பினாங்கு மாநில அரசு நிர்வாக அலுவலகங்கள் அடங்கிய ஒரு பல்நோக்கு கட்டிடமாக உள்ளது.
சில்லறை விற்பனை நிலையங்கள்
[தொகு]- கர்னீ பிளாசா
- கர்னீ பாராகான்
- குவின்ஸ்பே மால்
- அய்ளன் பிளாசா
- பீராங்கின் மால்
- 1வது அவென்யூ
- பார்க்சன் கிராண்ட்
- பினாங்கு டைம்ஸ் சதுக்கம்
- மிட்லாண்ட்ஸ் பார்க் மையம்
- டெஸ்கோ ஜெலுத்தோங்
- டெஸ்கோ தஞ்சோங் பீனாங்
விளையாட்டு
[தொகு]- மாநகர விளையாட்டு அரங்கம்
மருத்துவ வசதி
[தொகு]- பினாங்கு தீவு பெரிய மருத்துவமனை
- தீவு சிறப்பு மருத்துவமனை
- Pantai Mutiara சிறப்புமருத்துவமனை
- லோஹ் குவான் சிறப்பு மருத்துவமனை
- லாம் வாஹ் ஈ சிறப்பு மருத்துவமனை
- அட்வெண்டிஸ்டான் சிறப்பு மருத்துவமனை
- தஞ்சோங் சிறப்பு மருத்துவமனை
- மவுண்ட் மிரியம் சிறப்பு மருத்துவமனை
- டிராபிகானா சிறப்பு மருத்துவமனை
கல்வி
[தொகு]ஆங்கில பள்ளிகள்
[தொகு]- பினாங்கு பிறி பள்ளி, நாட்டின் மிக பழமையான ஆங்கிலம் பள்ளி
- செயின்ட் சேவியர் பள்ளி, தென் கிழக்கு ஆசியாவில் மிக பழமையான கத்தோலிக்க பள்ளி
- மெத்தடிஸ்ட் பாய்ஸ் 'பள்ளி
- கான்வென்ட் கிரின் லேன்
- கான்வென்ட் ஜோர்ஜ் டவுன்
- செயின்ட் ஜோர்ஜ் பெண்கள் பள்ளி
- கான்வென்ட் பூலாவ் தீகுஸ் பள்ளி
தமிழ் பள்ளிகள்
[தொகு]கல்லூரிகள்
[தொகு]- பினாங்கு மருத்துவ கல்லூரி
- KDU கல்லூரி [4]
- SEGi கல்லூரி [5]
- சென்டிரல் கல்லூரி
- ஒலிம்பியா கல்லூரி
- INTI சர்வதேச கல்லூரி
- ஹான் சியாங் கல்லூரி
- PTPL கல்லூரி
லிட்டில் இந்தியா
[தொகு]லிட்டில் இந்தியா, இது மாநகரின் ராணி வீதி, சூலியா வீதி, மற்றும் சந்தை வீதியில் அமைந்திருக்கும் தமிழர் வனிகப்பகுதியாகும்.மலேசியாவின் பழமையான இந்து கோவிலான அருள்மிகு பினாங்கு ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் இங்கு அமைந்துள்ளது.
திருவிழாக்கள்
[தொகு]பினாங்கு தைப்பூசம்
[தொகு]ஜோர்ஜ் டவுன் அருகில் உள்ள தண்ணீர் மலை கோவிலில் பினாங்கு தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. தண்ணீர் மலை கோவில் இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிகவும் பெரியதாகும். தமிழர்கள் மட்டுமின்றி சீனர்களும் தைப்பூசத்தை மிக விமரிசையாகக் கொண்டாடுகிரார்கள். இத்தைப்பூசத் திருநாள் மூன்று நாட்கள் நடைபெறும். தைப்பூசத் திருநாள் அன்று பினாங்கிள் பொது விடுமுறை ஆகும்.
சித்ரா பவுர்ணமி
[தொகு]1970 களின் தொடக்கத்திலிருந்து இந்த திருவிழா மூன்று நாட்கள் கொண்டாடப்படுகிறது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூழ ரதத்தில் முருகப் பெருமானின் ஊர்வலம் நடைபெறும்.
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mike Aquino (30 August 2012). "Exploring Georgetown, Penang". Asian Correspondent. Archived from the original on 1 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 1 January 2016.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ SJKT Ramakrishna. Facebook. Retrieved on 2013-09-27.
- ↑ Tamil school data – Penang |. Mynadi.wordpress.com. Retrieved on 2013-09-27.
- ↑ KDU College Malaysia, Penang Campus பரணிடப்பட்டது 2014-05-28 at the வந்தவழி இயந்திரம். Kdupg.edu.my (2013-06-05). Retrieved on 2013-09-27.
- ↑ SEGi College Penang | SEGi University. Segi.edu.my. Retrieved on 2013-09-27.
வெளி இணைப்புகள்
[தொகு]- யுனெஸ்கோ
- பினாங்கு மாநில அரசு
- சுற்றுலாத்தளம் பரணிடப்பட்டது 2020-02-26 at the வந்தவழி இயந்திரம்
- பினாங்கு சுற்றுலாத்தளம் பரணிடப்பட்டது 2009-02-21 at the வந்தவழி இயந்திரம்