மக்கள் நீதிக் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மக்கள் நீதிக் கட்சி
தலைவர்டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராகீம்
பொதுச் செயலாளர்சைபுடின் நசுத்தியோன் இஸ்மாயில்
துணைத் தலைவர்ராபிஸி ராம்லி
உதவித் தலைவர்(கள்)அமிருதீன் சாரி
நிக் நஸ்மி நிக் அகமத்
சாங் லி காங்
அமினுதீன் ஹாருன்
நூருல் இசா அன்வர்
சரஸ்வதி கந்தசாமி
அவாங் உசைனி சகாரி
தொடக்கம்ஏப்ரல் 1, 2008
தலைமையகம்கோலாலம்பூர், மலேசியா
செய்தி ஏடுநீதி குரல்
இளைஞர் அமைப்புபிகேஆர் இளைஞர் பிரிவு
கொள்கைசமூக தாராளவாதம்
தேசியக் கூட்டணிமாற்று பாரிசான் (1999–2004)
பாக்காத்தான் ராக்யாட் (2008–2014)
பாக்காத்தான் ஹரப்பான் (2014–present)
நிறங்கள்வெள்ளை, சிவப்பு, நீலம்
மக்களவை தொகுதிகள்
4 / 70
சட்டமன்றத் தொகுதிகள்
31 / 222
மாநில சட்டமன்றம்:
53 / 607
முதலமைச்சர்கள்
2 / 13
தேர்தல் சின்னம்
கட்சிக்கொடி
இணையதளம்
www.keadilanrakyat.org
www.keadilandaily.com

மக்கள் நீதிக் கட்சி என்பது மலேசியாவில் உள்ள ஓர் அரசியல் கட்சியாகும்.[1] மலேசிய நீதிக் கட்சி அல்லது மக்கள் நீதிக் கட்சி (மலாய்: Parti Keadilan Rakyat, ஆங்கில மொழி: People's Justice Party,) எனும் மலாய் மொழிச் சொல்தொடரின் உருவாக்கமே கெடிலான் என்பதாகும். கெடிலான் எனும் சொல்லின் மற்றோர் அழைப்புச் சுருக்கம் பி.கே.ஆர். பி என்றால் (Parti தமிழ் : கட்சி); கே என்றால் (Keadilan தமிழ் : நீதி); ஆர் என்றால் (Rakyat தமிழ் : மக்கள்). 2015ஆம் ஆண்டில் அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யும், ஜனநாயக செயல் கட்சியும், மக்கள் நீதிக் கட்சியும் ஒன்றிணைந்து, பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியை உருவாக்கின.[2][3]


பின்னணி[தொகு]

1999ஆம் ஆண்டு மலேசியாவின் துணைப் பிரதமராக இருந்த அன்வர் இப்ராகீம் ஊழல், ஒழுக்கக் கேடு காரணமாகக் கைது செய்யப்பட்டார்.[4] அவர் மீது குற்றங்கள் பதிவு செய்யப்பட்டு, ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையையும் பெற்றார்.

அந்தக் காலகட்டத்தில் அவருடைய மனைவி டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அசீசா வான் இஸ்மாயில், மக்கள் நீதிக் கட்சியைத் தோற்றுவித்தார்.[5] அந்த இயக்கத்தை ஓர் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய அப்போதைய அரசாங்கம் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது.

வரலாற்றுச் சாதனை[தொகு]

ஒரு நாட்டின் துணைப்பிரதமராக இருந்த ஒருவர், அரசியல் காரணங்களுக்காகச் சிறைவாசம் அனுபவிப்பதை விரும்பாத பொதுமக்களில் பலர், கணிசமான அளவிற்கு மக்கள் நீதிக் கட்சியில் சேர்ந்தனர். 2003ஆம் ஆண்டில் மக்கள் நீதிக் கட்சியும், மலேசிய மக்கள் கட்சியும் ஒன்றிணைந்து, கெடிலான் கூட்டணியை உருவாக்கின.[6]

அந்த ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஒரே ஒரு நாடாளுமன்ற இடத்தைப் பிடித்த கெடிலான் எனும்மக்கள் நீதிக் கட்சி, 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 31 இடங்களைப் பிடித்தது.[7] அது ஒரு வரலாற்றுச் சாதனையாகும். மலேசியாவில் இண்ட்ராப் எனும் மலேசிய இந்திய சமூக அமைப்பு ஏற்படுத்திய அரசியல் நிலைத் தடுமாற்றத்தில், ஆளும் பாரிசான் நேசனல் கூட்டணி மூன்றில் இரண்டு நாடாளுமன்றப் பெரும்பான்மையை இழந்தது.

பெர்மாத்தாங் பாவ் இடைத் தேர்தல்[தொகு]

2004ஆம் ஆண்டு, டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். ஆனால், அவர் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் ஈடுபடக்கூடாது என்று மலேசிய அரசாங்கம் தடை விதித்தது. அந்தத் தடை 14 ஏப்ரல் 2008இல் நீக்கப்பட்டது. அதற்குள் 2008ஆம் ஆண்டு பொதுத் தேர்தலும் நடந்து முடிந்தது.

அந்தக் கட்டத்தில் அவருடைய மனைவி வான் அசீசா வான் இஸ்மாயில், மலேசிய நாடாளுமன்றத்தின் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் மக்களவை உறுப்பினராக இருந்தார். அன்வார் இப்ராஹிம் விடுதலையானதும் பெர்மாத்தாங் பாவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த வான் அசீசா வான் இஸ்மாயில், அதாவது அன்வார் இப்ராஹிமின் மனைவி, தன் நாடாளுமன்றப் பதவியை ராஜிநாமா செய்தார்.

அன்வார் இப்ராஹிம்[தொகு]

அன்வர் என்று அழைக்கப்படும் இவர் மலேசியத் தமிழர் மத்தியில் மிகப் பிரபலம் ஆன அரசியல்வாதி ஆவார். இவர் மலேசிய முன்னாள் துணைப் பிரதமராகவும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவராக பொறுப்பு வகித்தார். அன்வர் தற்போது அவரது குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு உறுதிபடுத்தப்பட்ட பின்னர் ஐந்து ஆண்டு சிறை தண்டனையிள் உள்ளார்.[8] [9] [10]

நாடாளுமன்றத்தில் மக்கள் நீதிக் கட்சி உறுப்பினர்கள்[தொகு]

மலேசிய 13வது பாராளுமன்றத்தில் பிகேஆர் உறுப்பினர்கள் தற்போது 29பேர் உள்ளனர் இதில் நான்கு பேர் தமிழர்கள் ஆவர்.

  • சிலாங்கூர்
    • பி97 - செலாயாங் - வில்லியம் லியோங் ஜீ கீன்
    • பி98 - கோம்பாக் - அஸ்மீன் அலி
    • பி99 - அம்பாங் - சூராய்டா கமாருடீண்
    • பி100 - பண்டாண் - ராபிஸி ராம்லி
    • பி104 - கெலானா ஜெயா - வோங் சென்
    • பி105 - தென் பீஜே - ஹீ லோய் சியன்
    • பி107 - சுபாங் - சிவராசா ராசையா
    • பி109 - காப்பார் - ஜி மணிவண்ணன்
    • பி112 - கோலா லங்கட் - அப்துல்லா சனி
  • கூட்டரசு பிரதேசம்
    • பி115 - பத்து - தியான் சுவா
    • பி116 - வங்சா மாஜூ - தான் கீ கோங்
    • பி121 - லெம்பா பன்தாய் - நூருள் இசா அன்வார்
    • பி124 - பண்டார் துன் ரசாக் - அப்துல் காலித் இப்ராஹிம்
  • நெகிரி செம்பிலான்
    • பி132 - தெலுக் கெமாங் - கமருல் பக்ரின்
  • மலாக்கா
    • பி137 - புக்கிட் கட்டில் - சம்சுல் இஸ்கந்தர்
  • ஜொகூர்
    • பி150 - பத்து பகாத் - முகமட் இட்ரிஸ்
  • சபா
    • பி174 - பெனம்பாங் - இக்னேசியஸ்
  • சரவாக்
    • பி219 - மீறி - மைக்கேல் தியொ

கொள்கைப்பாடு[தொகு]

ஒரு நியாயமான, ஓர் ஐக்கியமான, வளர்ச்சி பெறும் ஜனநாயக சமூகத்தை உருவாக்கும் நோக்கமே கெடிலான் அரசியல் கூட்டணியின் தலையாயக் கொள்கைப்பாடாக அமைந்து உள்ளது. இருப்பினும், தன் செயல்பாட்டில் சமூகப் பொருளாதார நீதிகளைப் பேணிக் காப்பதிலும்; அரசியல் லஞ்ச ஊழல்களைத் துடைத்தொழிப்பதிலும்; மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் தீவிரம் காட்டி வருகிறது.[11]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Parti Keadilan Rakyat (PKR)". Archived from the original on 3 மார்ச்சு 2016. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2014.
  2. "Malaysia's opposition band together under new Pakatan Harapan alliance - Channel NewsAsia". Archived from the original on 23 திசம்பர் 2016. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2015.
  3. "Pakatan Harapan is new opposition pact, supports Anwar for PM - The Malaysian Insider". Archived from the original on 2 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 3 அக்டோபர் 2015.
  4. Anwar Ibrahim’s integrity while in office, that the authorities have not been able to level any charges of monetary corruption against him after more than a year of sacking as Deputy Prime Minister and Finance Minister, although the authorities must have gone through his records with a fine-tooth comb.
  5. The Birth of Parti Keadilan Nasional: As Good As It Gets.
  6. "Parti Keadilan Rakyat was officially founded on August 3, 2003". Archived from the original on ஜூன் 28, 2014. பார்க்கப்பட்ட நாள் மார்ச் 3, 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  7. "Keadilan won 31 seats in Parliament, with DAP and Pas making substantial gains as well with 28 seats and 23 seats respectively". Archived from the original on 28 சூன் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 மார்ச்சு 2014.
  8. Farezza Hanum Rashid (10 February 2015). "Anwar’s arrives at Sungai Buloh prison". New Straits Times. http://www.nst.com.my/node/72464. பார்த்த நாள்: 10 February 2015. 
  9. http://www.nst.com.my/node/49012?m=1
  10. "Malaysia's Anwar jailed for five years after losing appeal in sodomy trial". Reuters. 10 February 2015 இம் மூலத்தில் இருந்து 10 பிப்ரவரி 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150210031657/http://www.reuters.com/article/2015/02/10/us-malaysia-anwar-idUSKBN0LD2F520150210. பார்த்த நாள்: 10 February 2015. 
  11. Constitutional changes for PKR.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_நீதிக்_கட்சி&oldid=3619895" இலிருந்து மீள்விக்கப்பட்டது