பாயா தெருபோங்
பாயா தெருபோங் | |
---|---|
புறநகர் ஜார்ஜ் டவுன் | |
Paya Terubong | |
ஆள்கூறுகள்: 5°22′22″N 100°16′47″E / 5.37278°N 100.27972°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட கிழக்கு பினாங்கு தீவு |
மாநகரம் | ஜார்ஜ் டவுன் |
அரசு | |
• உள்ளாட்சி மன்றம் | பினாங்கு தீவு மாநகராட்சி |
• புக்கிட் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி | ராம் கர்ப்பால் சிங் (Ramkarpal Singh) (ஜ.செ.க) |
• பாயா தெருபோங் சட்டமன்றத் தொகுதி | இயோ சூன் கின் (Yeoh Soon Hin) (ஜ.செ.க) |
• பினாங்கு தீவு மேயர் | இயூ துங் சியாங் (Yew Tung Seang) |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | பயன்பாடு இல்லை |
மலேசிய அஞ்சல் குறியீடு | 11060 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +6-09 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்கள் | P |
இணையதளம் | mbpp |
பாயா தெருபோங் (ஆங்கிலம்: Paya Terubong; மலாய் மொழி: Paya Terubong; சீனம்: 垄尾; ஜாவி: ڤايا تروبوڠ) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு புறநகர் குடியிருப்புப் பகுதி ஆகும்.
இந்தப் பாயா தெருபோங் புறநகர் குடியிருப்புப் பகுதி, பினாங்கு தீவின் (Penang Island) தென்மேற்குப் பகுதியில் ஆயர் ஈத்தாம் (Air Itam) நகர்ப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ளது. அதே வேளையில் ஜார்ஜ் டவுன் நகர மையத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. (4.3 மைல்) தென்மேற்கில் உள்ளது.
பினாங்கு தீவில் மிகவும் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் பாயா தெருபோங் புறநகர்ப் பகுதியும் ஒன்றாகும்.[1]
பொது
[தொகு]பாயா தெருபோங் நகர்ப்பகுதி 1970-ஆம் ஆண்டுகள் வரை ஒரு வேளாண் கிராமமாக இருந்தது. இருப்பினும் இங்கு பல பத்தாண்டுகளாக நகரமயமாக்கல் நடைபெற்று வருகிறது. அதனால் இந்தப் பகுதியில் உயரமான கட்டடங்கள் அதிகமாய்த் தோன்றி உள்ளன.
1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட்; பினாங்கு தீவை நிறுவிய காலத்திலேயே பாயா தெருபோங் கிராமமும் நிறுவப்பட்டு விட்டது. முன்பு இருந்தே பல காலமாக இப்பகுதியில் மக்கள் வசித்து வருகின்றனர்.
சொல் பிறப்பியல்
[தொகு]மலாய் மொழியில் தெருபோங் (Terubong) என்று அழைக்கப்படும் ஒரு வகை புல்லின் பெயரால், இந்த இடத்திற்குப் பாயா தெருபோங் என்று பெயரிடப்பட்டது. புல்லின் அறிவியல் பெயர் கிரைத்தோகொக்கும் ஆக்சிபைலம் (Cyrtococcum Oxyphyllum).[2]
வரலாறு
[தொகு]முன்பு காலத்தில் பாயா தெருபோங் ஒரு வேளாண் கிராமமாக இருந்தது. இதற்கு அருகில் ஆயர் ஈத்தாம் (Air Itam) கிராமம் இருந்தது. அங்கும் விவசாய பண்ணைகள் உருவாக்கப்பட்டன.
பாயா தெருபோங்கில் இருக்கும் பாயா தெருபோங் சாலை (Paya Terubong Road) ஒரு மலைப்பாதையாக இருந்தது. அந்தச் சாலைகள் வழியாகத்தான் வேளாண் பொருள்கள் கொண்டு செல்லப் பட்டன.
நறுமணப் பொருள்கள்
[தொகு]இன்றைய காலத்தில், பினாங்கில் உள்ள காய்கறிச் சந்தைகளுக்கு பாயா தெருபோங்கில் விளைவிக்கப்படும் நறுமணப் பொருள்கள் மற்றும் காய்கறிப் பொருள்கள் ஏற்றுமதி செய்யப் படுகின்றன.
1980-களில் பினாங்கு தீவில் குடியிருப்புப் பகுதிகளுக்கு நிலப் பற்றாக்குறை ஏற்பட்டது. அதைக் களைவதற்கு அங்கு உயரமான கட்டிடங்கள் கட்டப்பட்டன. அதற்காக மலைச் சரிவுகள் அழிக்கப்பட்டு உயரமான கட்டடங்கள் கட்டப்பட்டன.
பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலம்
[தொகு]தொடக்கக் காலத்தில், பெரும்பாலான பாயா தெருபோங் குடியிருப்பாளர்கள் பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலத்தில் (Bayan Lepas Free Industrial Zone) பணிபுரிந்தவர்கள்.
பாயா தெருபோங் நகர்ப் பகுதிக்கும் பாயான் லெப்பாஸ் தொழில்துறை மண்டலத்திற்கும் பாயா தெருபோங் சாலை ஒரே முக்கிய சாலையாக இருந்தது. அந்தச் சாலையைப் பலரும் பயன்படுத்தி வந்தார்கள்.
பாயா தெருபோங்கில் அண்மைய காலங்களில் மலைக்காடுகள் அழிக்கப்படுவது ஒரு பிரச்சினையாக உள்ளது. பினாங்கு மாநில அரசாங்கம் தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மற்றும் போக்குவரத்து நெரிசல்களும் இங்குள்ள குடியிருப்பாளர்களுக்குப் பெரும் பிரச்சனையாக உள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Yeoh Soon Hin: Paya Terubong state constituency needs realignment as voters exceed 40,000". Malaysian Chinese News.
- ↑ "Rising with the times But there's much traffic congestion, lament residents – Community The Star Online". www.thestar.com.my. பார்க்கப்பட்ட நாள் 2017-05-20.
- ↑ "Extensive clearings scar Paya Terubong hills - anilnetto.com" (in en-GB). anilnetto.com. 2016-08-06. http://anilnetto.com/environmentclimate-change/extensive-clearing-scarring-mars-paya-terubong-hills/.