சுங்கை ஜாவி
சுங்கை ஜாவி | |
---|---|
Sungai Jawi | |
மலேசியாவில் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 5°11′51″N 100°29′01″E / 5.19750°N 100.48361°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | தென் செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• நகராண்மைக் கழகத் தலைவர் | ரொசாலி முகமட் |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13200 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my |
சுங்கை ஜாவி அல்லது ஜாவி (ஆங்கிலம்: Sungai Jawi; (மலாய் Sungai Jawi; சீனம்: 甲抛峇底; ஜாவி: سوڠاي جاوي) என்பது மலேசியா, பினாங்கு, தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்துள்ள நகரம். இந்த நகரம் தென் செபராங் பிறை மாவட்டத்தின் நடு மையப் பகுதியில்; வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் அமைந்துள்ளது.
சுங்கை ஜாவி நிலப் பகுதியில் ஓடும் சுங்கை ஜாவி நதியின் பெயரால் இந்த நகரத்திற்கும் சுங்கை ஜாவி என்று பெயர் வந்தது. சுங்கை ஜாவி எனும் பெயர் நிபோங் திபால் நகருக்கு வடகிழக்கில் அமைந்துள்ள ஒரு சிறுநகரம் அல்லது ஒரு கிராம மையத்தைக் குறிக்கிறது.[1]
அருகாமையில் உள்ள நகரங்கள்
[தொகு]இந்த நகரத்திற்கு அருகில் உள்ள இதர நகரங்கள்:
பொது
[தொகு]சுங்கை ஜாவி நகரத்திற்கு வடக்கில் வால்டோர் கிராமப்புறப் பகுதி உள்ளது. தெற்கில் நிபோங் திபால் பகுதி உள்ளது. கெடா மாநில எல்லையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் இந்த நகரம் அமைந்து உள்ளது.[1]
பினாங்கின் பழைமையான நகரங்கில் இந்தச் சுங்கை ஜாவி நகரமும் ஒன்றாகும். மலாயாவுக்கு முதன்முதலில் அழைத்து வரப்பட்ட தமிழர்கள் இந்தச் சுங்கை ஜாவி பகுதிகளில் தான் குடியேறினார்கள்.
1900-ஆம் ஆண்டுகளில் நிறைய ரப்பர் தோட்டங்கள் உருவாக்கப் பட்டன. அந்தத் தோட்டங்களில் வேலை செய்வதற்காகத் தமிழர்கள் அழைத்து வரப் பட்டார்கள். கரும்புத் தோட்டங்களும் காபித் தோட்டங்களும் இருந்தன. சுற்று வட்டாரங்களில் சில தமிழ்ப்பள்ளிகளும் இருந்தன.
நில மேம்பாட்டுத் திட்டங்கள்
[தொகு]1990-ஆம் ஆண்டுகளில், நில மேம்பாட்டுத் திட்டங்களினால் பல தோட்டங்கள் அழிக்கப் பட்டன. அங்கு இருந்த தமிழ்ப்பள்ளிகளும் மறைந்து போயின. இப்போது இந்தப் பகுதியில் ஒரே ஒரு தமிழ்ப்பள்ளிதான் உள்ளது.
பெரும்பாலான பழைய கிராம வீடுகள், நவீன வணிக இரட்டை மாடி கடைகளாக மாற்றப்பட்டு உள்ளன. நகரத்தின் முக்கிய வணிக மையம் ’எக்கான்சேவ் ஜாவி’ (Econsave Jawi) எனும் பெயரில் இயங்கி வருகிறது.[1]
சுங்கை ஜாவி தமிழ்ப்பள்ளி
[தொகு]பினாங்கு மாநிலத்தின் தென் செபராங் பிறை மாவட்டத்தில் அமைந்து உள்ள சுங்கை ஜாவியில் ஒரு தமிழ்ப்பள்ளி உள்ளது. அதன் பெயர் சுங்கை ஜாவி தமிழ்ப்பள்ளி. அந்தப் பள்ளியில் 162 மாணவர்கள் பயில்கிறார்கள். 22 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.
பள்ளி எண் |
இடம் | பள்ளியின் பெயர் மலாய் |
பள்ளியின் பெயர் தமிழ் |
அஞ்சல் குறியீடு | வட்டாரம் | மாணவர்கள் | ஆசிரியர்கள் |
---|---|---|---|---|---|---|---|
PBD4026 | சுங்கை ஜாவி | SJK(T) Ladang Jawi[2] | சுங்கை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி | 14200 | சுங்கை பாக்காப் | 162 | 22 |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "Jawi is a township in Seberang Perai Selatan. Also known as Sungai Jawi, it takes its name after the river that runs through the area, Sungai Jawi. The name Sungai Jawi refers to the pekan or village centre, located to the northeast of Nibong Tebal". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
- ↑ "சுங்கை ஜாவி தோட்டத் தமிழ்ப்பள்ளி". www.facebook.com. பார்க்கப்பட்ட நாள் 24 April 2022.
வெளி இணைப்புகள்
[தொகு]