தாசேக் குளுகோர்
தாசேக் குளுகோர் | |
---|---|
Tasek Gelugor | |
பினாங்கு | |
ஆள்கூறுகள்: 5°29′0″N 100°30′0″E / 5.48333°N 100.50000°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | பினாங்கு |
மாவட்டம் | வட செபராங் பிறை மாவட்டம் |
அரசு | |
• உள்ளூராட்சி | செபராங் பிறை நகராண்மைக் கழகம் |
• தாசேக் குளுகோர் நாடாளுமன்றத் தொகுதி | சகாபுடின் யகயா பெர்சத்து |
நேர வலயம் | ஒசநே+8 (மலேசிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+8 (பயன்பாட்டில் இல்லை) |
மலேசிய அஞ்சல் குறியீடு | 13300 |
மலேசியத் தொலைபேசி எண்கள் | +604 |
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண் | P |
இணையதளம் | http://www.mbsp.gov.my |
தாசேக் குளுகோர் (ஆங்கிலம்: Tasek Gelugor; (மலாய் Tasek Gelugor; சீனம்: 打昔汝莪 ; ஜாவி: تاسيق ڬلوڬور) என்பது மலேசியா, பினாங்கு, வட செபராங் பிறை மாவட்டத்தில்; அமைந்துள்ள நகரம்.[1]
இந்த நகரம் வடக்கு-தெற்கு விரைவுச்சாலைக்கு அருகில் உள்ளது. பாடாங் செராய் நகருடன் இணைக்கும் சாலைகளும் உள்ளன
பினாங்கு, ஜார்ஜ் டவுன் நகரில் இருந்து 41 கி.மீ. தொலைவில்; பட்டர்வொர்த் நகரில் இருந்து சுங்கை பட்டாணிக்குச் செல்லும் வழியியில் அமைந்துள்ளது. தவிர கெடா மாநிலத்தின் எல்லையில் அமைந்து உள்ளது.
பொது
[தொகு]முன்பு காலத்தில், தாசேக் குளுகோர் நகரத்திற்கு அருகில் இருந்த ஆறு அடிக்கடி நிரம்பியதால் ஓர் ஏரி (Tasik Gelugor) உருவாக்கப்பட்டது. அந்த ஏரியின் நினைவாக இந்த இடம் பெயரிடப்பட்டதாகக் கூறப் படுகிறது.[2]
தாசேக் குளுகோர் நகருக்கு அருகாமையில் உள்ள நகரங்கள் கெப்பாலா பத்தாஸ், பெனாகா, லூனாஸ் மற்றும் புக்கிட் மெர்தாஜாம். இந்த நகர்ப் பகுதியில் இருக்கும் தாசேக் குளுகோர் தொடருந்து நிலையம் (Tasek Gelugor Railway Station), இங்கு வசிக்கும் மக்களுக்கு, தெற்கு நோக்கி பயணிக்க மற்றொரு மாற்று வழியாக விளங்குகிறது.
குறிப்பிடத்தக்க நபர்கள்
[தொகு]- முகமது சாபு (Mohamad Sabu) - அமாணா (தேசிய நம்பிக்கை கட்சி)யின் தலைவர்; 1999 முதல் 2004 வரை கெடா மாநிலத்தில் உள்ள கோலா கெடா நாடாளுமன்றத் தொகுதியின் உறுப்பினராக இருந்தவர். 2018-ஆம் ஆண்டில் மலேசியாவின் தற்காப்பு அமைச்சராகப் பதவி வகித்தவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gazetir Negeri Pulau Pinang Pulau Muntiara". mygeoname.mygeoportal.gov.my. Jawatankuasa Nama Geografi Kebangsaan Malaysia.
- ↑ "Tasik Gelugor, the place is said to have been named after a lake that was created from the overflooding of the nearby river. Gelugor, or asam gelugor, is a type of tree with edible fruits known scientifically as Garcinia atroviridis. The township of Tasek Gelugor is located roughly to the south-east of Kepala Batas". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 9 August 2022.
மேலும் காண்க
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- பொதுவகத்தில் தாசேக் குளுகோர் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.