உள்ளடக்கத்துக்குச் செல்

டோபி காட்

ஆள்கூறுகள்: 5°26′04.9″N 100°18′30.0″E / 5.434694°N 100.308333°E / 5.434694; 100.308333
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டோபி காட்
Dhoby Ghaut
நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்
நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்
டோபி காட் is located in மலேசியா
டோபி காட்
டோபி காட்
      டோபி காட்
ஆள்கூறுகள்: 5°26′04.9″N 100°18′30.0″E / 5.434694°N 100.308333°E / 5.434694; 100.308333
நாடு மலேசியா
மாநிலம் பினாங்கு
மாவட்டம்வட கிழக்கு பினாங்கு தீவு
அமைவு19-ஆம் நூற்றாண்டு
அரசு
 • உள்ளாட்சி மன்றம்பினாங்கு தீவு மாநகராட்சி
 • பினாங்கு தீவு மேயர்இயூ துங் சியாங்
(Yew Tung Seang)
நேர வலயம்ஒசநே+8 (மலேசிய நேரம்)
 • கோடை (பசேநே)பயன்பாடு இல்லை

டோபி காட் (ஆங்கிலம்: Dhoby Ghaut அல்லது Dhobī Ghāṭ; மலாய் மொழி: Dhoby Ghaut; இந்தி: धोबी घाट; பஞ்சாபி: ਧੋਬੀ ਘਾਟ;) என்பது மலேசியா, பினாங்கு, ஜார்ஜ் டவுன் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஒரு கிராமப் பகுதி ஆகும்.

உள்ளூர் இந்தியச் சமூகத்தவர் வண்ணன் துறைத் திடல் (Vannan Thora Tedal) அல்லது "சலவை மாவட்டம்" என்று அழைக்கின்றனர். இன்றும் இப்பகுதியில் வாழும் இந்தியர்கள் சிலர் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். [1]

அமைவு

[தொகு]

ஆயர் ஈத்தாம் சாலை (Jalan Air Hitam) மற்றும் யார்க் சாலைக்கு (York Road) இடையில் டோபி காட் எனும் வண்ணன் துறை அமைந்துள்ளது. அத்துடன் ஆயர் ஈத்தாம் ஆறு (Sungai Air Itam); ஆயர் தெர்ஜுன் ஆறு (Sungai Air Terjun) ஆகிய இரு ஆறுகளின் சங்கமத்தில் உள்ளது. இங்கு இருந்து தான் பினாங்கு ஆறும் (Sungai Pinang) பிரிந்து செல்கிறது.

மலைகளுக்கு இடையில் நீர்ச்சரிவுகள் உள்ள இடத்தில் அமைந்து இருக்கும் வழியை (Ghat) என்று அழைக்கிறார்கள். அந்த வகையில் பினாங்கு டோபி காட் (Dhoby Gaut) எனும் இடத்தில் இரு ஆறுகள் மலையில் இருந்து சரிந்து வந்து சங்கமிக்கின்றன.

அந்த இடத்தில் தான் டோபி காட் சலவைத் தொழில் கிராமம் அமைந்து உள்ளது. இங்கு இன்றும் சில சலவை நிலையங்கள் இயங்குகின்றன. பரம்பரை பரம்பரையாகப் பாரம்பரிய இந்தியச் சலவைச் சேவையாளர்கள் பலர் அங்கு இன்னும் வசித்து வருகின்றனர்.

ஆலயங்கள்

[தொகு]

இங்கு இரு ஆலயங்கள் உள்ளன. அந்த ஆலயங்கள். 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அங்கு வாழ்ந்த இந்தியச் சலவைச் சேவையாளர்களால் கட்டப் பட்டதாகும்.[2]

நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்

[தொகு]

இங்குள்ள ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம்; நடுதுறை ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம் (Naduthurai Sri Devi Karumariamman) எனவும்; டோபி கவுட் ஆலயம் எனவும்; அழைக்கப் படுகிறது. ஸ்ரீ தேவி கருமாரியம்மன் ஆலயம், இந்தப் பகுதியில் உள்ள சலவைத் தொழிலாளர்களால் கட்டப்பட்டதாகும்.[3]

ஆற்றங்கரை ஓரத்தில் ஆலயம்

[தொகு]

டோபி கவுட் ஆலயம் ஆற்றங்கரை ஓரத்தில் கட்டப்பட்டுள்ளது. இன்றும் இப்பகுதியில் வாழும் இந்தியர்கள் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த ஆலயம் அமைந்துள்ள இடத்தைச் சுற்றிலும் இந்திய வம்சாவழியினரே வாழ்ந்து வருகின்றனர்.

ஸ்ரீ இராமர் ஆலயம்

[தொகு]

ஸ்ரீ இராமர் ஆலயம் (Sri Rama Temple) ஆயர் தெர்ஜுன் ஆற்றுக்கு (Sungai Air Terjun) எதிர்க் கரையில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Khoo, Salma Nasution (2007). Streets of George Town, Penang. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789839886009. Archived from the original on 2022-01-14. பார்க்கப்பட்ட நாள் 2021-01-23.
  2. "Naduthurai Sri Devi Karumariamman Temple, is one of three Hindu temples within the Vannan Thora Tedal laundry district, between Jalan Ayer Itam and York Road". Penang Travel Tips (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 4 November 2022.
  3. "அருள்மிகு தேவி கருமாரியம்மன் ஆலயம், பெனாங் - NRI - உலக தமிழர் செய்திகள் - NRI updated news- NRI tamil news". www.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 4 November 2022.
  • Su Nin, Khoo (2012). Streets of George Town, An Illustrated Guide to Penangs City Streets and Historic Attractions.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோபி_காட்&oldid=3598221" இலிருந்து மீள்விக்கப்பட்டது