திக்குஸ் தீவு

ஆள்கூறுகள்: 5°28′32.5776″N 100°17′50.2146″E / 5.475716000°N 100.297281833°E / 5.475716000; 100.297281833
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

(இந்தக் கட்டுரை மலேசியா, பினாங்கு, வட கிழக்கு பினாங்கு தீவு மாவட்டத்தின் திக்குஸ் தீவு பற்றியதாகும். பினாங்கு மாநிலத்தின் திக்குஸ் எனும் பெயரில் உள்ள இடத்திற்கு புலாவ் திக்குஸ் என்பதைப் பார்க்கவும்.)

திக்குஸ் தீவு
பினாங்கு மிதக்கும் பள்ளிவாசலில் இருந்து திக்குஸ் தீவு
திக்குஸ் தீவு is located in மலேசியா
திக்குஸ் தீவு
      திக்குஸ் தீவு
புவியியல்
அமைவிடம்தென்கிழக்காசியா
ஆள்கூறுகள்5°28′32.5776″N 100°17′50.2146″E / 5.475716000°N 100.297281833°E / 5.475716000; 100.297281833
அருகிலுள்ள நீர்ப்பகுதிமலாக்கா நீரிணை
தஞ்சோங் பூங்காவில் இருந்து திக்குஸ் தீவு

திக்குஸ் தீவு (ஆங்கிலம்: Tikus Island அல்லது Rat Island; மலாய் மொழி: Pulau Tikus) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தின் வட கிழக்கு மாவட்டத்தின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஒரு தீவு ஆகும்.[1]

ஜார்ஜ் டவுன் நகரத்தின் புறநகர்ப் பகுதியான தஞ்சோங் பூங்காவில் (Tanjung Bungah) இருந்து ஏறக்குறைய 770 மீ. (0.48 மைல்) இந்தத் தீவு அமைந்துள்ளது.

இந்தத் தீவில் மக்கள் குடியேறவில்லை. இந்தத் தீவில் உள்ள கலங்கரை விளக்கம் சூரிய சக்தியால் இயங்குகிறது.[2][3]

பொது[தொகு]

இந்தத் தீவில் ஓர் உள்ளூர் முசுலீம் துறவியின் கல்லறையும் உள்ளது.[1][2][3] இந்தக் கல்லறைக்குப் பல்வேறு மதங்களைச் சேர்ந்த உள்ளூர் மக்கள் இன்றும் வருகை தருகிறார்கள்.[1]

அவர்கள் தங்களின் சமய நம்பிக்கைகளைப் பொருட்படுத்தாமல் ஆசீர்வாதங்களைப் பெற்றுச் செல்கிறார்கள்.[2]

சொற்பிறப்பியல்[தொகு]

இந்தத் தீவு அதன் பெயரை ஜார்ஜ் டவுன் நகரத்தின் மற்றொரு புறநகர்ப் பகுதியான புலாவ் திக்குஸ் எனும் இடத்தின் பெயரில் இருந்து பெற்றுள்ளது. இந்தப் புலாவ் திக்குஸ் தீவில் 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் யூரேசிய அகதிகளால் ஒரு குடியேற்றம் உருவானது.

1786-ஆம் ஆண்டில் பிரித்தானிய கடல்படைத் தளபதி பிரான்சிஸ் லைட்; பினாங்கு தீவை நிறுவிய காலத்திலேயே புலாவ் திக்குஸ் கிராமமும் நிறுவப்பட்டு விட்டது.

1780-ஆம் ஆண்டுகளில் சயாமில் நடந்த இன அழிப்பில் இருந்து தப்பி ஓடிய யூரேசியர்களால் புலாவ் திக்குஸ் பகுதியில் முதல் யூரேசியக் குடியேற்றம் நடைபெற்றது.[4] பெரும்பாலோர் கத்தோலிக்கர்கள் ஆவர். அதன் பின்னர் 1811-ஆம் ஆண்டில் மற்றொருக் குடியேற்றம் நடைபெற்றது.[5]

எலி தீவு[தொகு]

இவர்கள் முன்னதாக புலாவ் திக்குஸ் கடற்கரை கிராமத்தில் தரை இறங்கினர். இந்தப் புலாவ் திக்குஸ் புறநகர்ப் பகுதி, யூரேசியர்கள் (Eurasians), தாய்லாந்து மக்கள் (Thais) மற்றும் பர்மிய (Burmese) போன்ற சிறுபான்மையினரின் இருப்பிடமாகவும் விளங்குகிறது.[6]

தஞ்சோங் பூங்கா (Tanjung Bungah) புறநகர்ப் பகுதியில் இருந்து 770 மீ (0.48 மைல்) தொலைவில் உள்ள இந்தப் பாறைத் தீவின் (Rat Island) பெயரால் புலாவ் திக்குஸ் கிராமத்திற்கும் பெயரிடப்பட்டது. மலாய் மொழியில் 'எலி தீவு' (Pulau Tikus)என்று பொருள்படும்.

கடலில் குறைந்த அளவில் அலைகள் இருந்த போது எலிகளைப் போல் தீவின் பாறைகள் காணப் பட்டதால் ’எலிகளின் தீவு’ எனப் பெயர் பெறப் பட்டதாகக் கூறப் படுகிறது.[7]

போக்குவரத்து[தொகு]

திக்குஸ் தீவிற்குப் படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். அந்தத் தீவிற்குச் செல்ல தஞ்சோங் பூங்காவில் உள்ள பினாங்கு நீர் விளையாட்டு மையத்தில் (Penang Water Sports Centre) கடற் படகுகள் கிடைக்கும். அதே வேளையில், கரடுமுரடான கடல் நீரோட்டம் சூழ்ந்த காலங்களில் தீவைச் நோக்கிச் செல்வது சிரமமாக இருக்கும்.[8]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திக்குஸ்_தீவு&oldid=3609244" இருந்து மீள்விக்கப்பட்டது