பிறை ஆறு

ஆள்கூறுகள்: 5°23′00″N 100°22′00″E / 5.38333°N 100.36667°E / 5.38333; 100.36667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிறை ஆறு
Perai River
அமைவு
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுகூலிம் காடு, கெடா
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
மலாக்கா நீரிணை
 ⁃ ஆள்கூறுகள்
5°23′00″N 100°22′00″E / 5.38333°N 100.36667°E / 5.38333; 100.36667
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்60.5 km (37.6 mi)
வடிநில அளவு447 km2 (173 sq mi)
வடிநில சிறப்புக்கூறுகள்
துணை ஆறுகள் 
 ⁃ இடதுகூலிம் ஆறு; ஜாராக் ஆறு; காரே ஆறு
 ⁃ வலதுபெர்த்தாமா ஆறு; மாக்லோம் ஆறு

பிறை ஆறு (மலாய்: Sungai Perai; ஆங்கிலம்: Perai River சீனம்: 北賴河) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில் ஒரு முக்கியமான ஆறாகும். பட்டர்வொர்த் நகரின் தாய் ஆறு என்று சொல்லப்படும் இந்த ஆறு, பிறை நகரத்தையும் செபராங் ஜெயா புறநகர்ப் பகுதியையும் பிரிக்கின்றது.[1]

பினாங்கின் மிக நீளமான ஆறு. அதே வேளையில் மிகப்பெரிய நீர் பிடிப்பு பகுதியும் ஆகும். பினாங்கு மாநிலத்தின் வளர்ந்து வரும் நீர் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்கும்; பட்டர்வொர்த் நகர்ப்புறத்தை மீள் உருவாக்கம் செய்வதற்கும் ஒரு நீர் ஆதாரமாக இந்த ஆறு அடையாளம் காணப்பட்டு உள்ளது.[1]

வரலாறு[தொகு]

1798-ஆம் ஆண்டில் வெல்லஸ்லி மாநிலத்தை (இப்போதைய செபராங் பிறை) பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் (British East India Company) ஒப்படைக்கும் போது ஓர் உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது. அப்போது, இந்தப் பிறை ஆறு தான், தெற்கில் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்த வெல்லஸ்லி மாநிலத்தையும் வடக்கே இருந்த கெடா மாநிலத்தையும் பிரிக்கும் ஓர் எல்லையாக இருந்தது.[2]

பிறை என்பது ஒரு தாய்லாந்து மொழிச் சொல். முன்பு காலத்தில் சயாமியர்கள், இந்த ஆற்றுக்கு பிளை (Plai) என்று பெயர் வைத்தார்கள். பிளை (தாய் ปลาย) என்றால் "முடிவு" என்று பொருள். பின்னர் வந்த ஆங்கிலேயர்களும் "பிறை" (Prye) எனும் சொல்லையே தொடர்ந்து பயன்படுத்தினார்கள்.[2]

பின்னர்க் காலத்தில், கெடா மாநிலத்தை வெல்லஸ்லி மாநிலத்தில் இருந்து பிரிக்கும் போது எல்லை வரையறுக்கப்பட்டது. அப்போது கெடா பகுதியில் இருந்த ஆற்றுக்கு மூடா ஆறு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. வெல்லஸ்லி பகுதியில் இருந்த இந்த ஆற்றின் பெயரை மட்டும் மாற்றம் செய்யவில்லை. பிறை ஆறு என்று அப்படியே விட்டுவிட்டார்கள். அந்தப் பெயரே இன்று வரை நிலைத்தும் விட்டது.[2]

மாக் மண்டின் தொழில் பேட்டை[தொகு]

இந்த ஆற்றின் படுகையில் 150-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள்; 125 பறவை இனங்கள் மற்றும் 35 மீன் இனங்கள் உள்ளன. பல ஆண்டுகளாக, கப்பல் பழுது பார்ப்பதற்கும்; நிலக்கரி கொண்டு செல்லப் படுவதற்கும்; கப்பல்துறை கட்டப் படுவதற்கும்; இந்த ஆறு முக்கிய பங்கு வகித்து உள்ளது.

அரிசி மற்றும் சர்க்கரை ஆலைகள் போன்ற தொடக்கக் காலத் தொழிற்சாலைகள் கூட இந்த ஆற்றின் கரையில் தான் கட்டப்பட்டன. 1960-களில் பிறை ஆற்றின் அருகே மாக் மண்டின் தொழில் பேட்டை (Mak Mandin Industrial Estate) நிறுவப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஆற்றின் தெற்குக் கரையில் பல தொழிற்சாலைகள் கட்டப்பட்டன.[2]

ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்பு[தொகு]

நகர மயமாக்கல் மற்றும் தொழில் மயமாக்கல் ஆகியவற்றினால், இந்த ஆற்றின் இயற்கையான சதுப்பு நிலங்கள் அழிக்கப்பட்டன. அதனால் ஆற்றின் சுற்றுச்சூழல் அமைப்பு பாதிப்பு அடைந்து உள்ளது.

பிறை ஆற்றின் நீர்த் தரம் மூன்றாம் வகுப்பாக வகைப்படுத்தப்பட்டு உள்ளது, அதாவது ஆற்றின் நீர்த் தரம் மாசுபட்டது; அதனால் சுத்திகரிப்பு தேவை என பொருள்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மலேசிய ஆறுகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிறை_ஆறு&oldid=3590188" இருந்து மீள்விக்கப்பட்டது