உள்ளடக்கத்துக்குச் செல்

வட செபராங் பிறை மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வட செபராங் பிறை மாவட்டம்
North Seberang Perai District
பினாங்கு
Location of வட செபராங் பிறை மாவட்டம்
Map
வட செபராங் பிறை மாவட்டம் is located in மலேசியா
வட செபராங் பிறை மாவட்டம்
      வட செபராங் பிறை மாவட்டம்
ஆள்கூறுகள்: 5°28′N 100°26′E / 5.467°N 100.433°E / 5.467; 100.433
நாடு மலேசியா
மாநிலம் கெடா
மாவட்டம்வட செபராங் பிறை
நாடாளுமன்றம்தாசெக் குளுகோர்
கெப்பாலா பத்தாஸ்
பாகன்
பெரிய நகரம்பட்டர்வொர்த்
உள்ளூராட்சிசெபராங் பிறை நகராண்மைக் கழகம்
அரசு
  மாவட்ட அதிகாரிமார்லியா பெலியா[1]
பரப்பளவு
  மொத்தம்267 km2 (103 sq mi)
மக்கள்தொகை
 (2020)
  மொத்தம்3,39,095
  மதிப்பீடு 
(2025)
3,10,700
  அடர்த்தி4,161.5/km2 (10,778/sq mi)
நேர வலயம்மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00
மலேசிய அஞ்சல் குறியீடு
12000 - 13800
மலேசியத் தொலைபேசி எண்கள்+6-043
மலேசியப் போக்குவரத்துப் பதிவெண்P

வட செபராங் பிறை மாவட்டம் (ஆங்கிலம்: North Seberang Perai District; மலாய்: Daerah Seberang Perai Utara (SPU); சீனம்: '威北县); ஜாவி: دسبرڠ ڤراي اوتارا ) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும்.

இந்த மாவட்டம் 267 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ளது. 2010-ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 286,323 மக்கள் தொகையைக் கொண்டு இருந்தது.

பொது

[தொகு]

இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாவட்டத்தில் உள்ள கோலா மூடா மாவட்டத்தையும்; வட செபராங் பிறை மாவட்டத்தையும் எல்லையாகக் கொண்டு, இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது

இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசெக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.

மாவட்ட எல்லைகள்

[தொகு]
  1. மூடா ஆறு - (வடக்கில்)
  2. பாடாங் செராய் - (கிழக்கில்)
  3. பிறை ஆறு - (தெற்கில்)
  4. மலாக்கா நீரிணை - (மேற்கில்)

மக்கள் தொகையியல்

[தொகு]

கீழ்க்காணும் புள்ளிவிவரங்கள், 2010-ஆம் ஆண்டு, மலேசியாவின் புள்ளியியல் துறையால் நடத்தப்பட்ட தேசிய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் வழங்கப் படுகிறது.[2]

இனக்குழுக்கள்
இனம்மக்கள் தொகைவிழுக்காடு
மலாய்க்காரர்கள்173,64760.6%
சீனர்கள்88,96831.1%
இந்தியர்கள்22,9738.0%
மற்றவர்கள்7350.3%
மொத்தம்286,323100%

நாடாளுமன்றத் தொகுதிகள்

[தொகு]


மலேசிய நாடாளுமன்றத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்ட பிரதிநிதிகளின் பட்டியல் மலேசிய மக்களவை

நாடாளுமன்றம்தொகுதியின் பெயர்நாடாளுமன்ற உறுப்பினர்கட்சி
P41 கெப்பாலா பத்தாஸ்ரீசல் மெரிக்கன் நைனா மெரிக்கன்பாரிசான் நேசனல் (அம்னோ)
P42 தாசெக் குளுகோர்சாபுதீன் யகாயாதேசிய கூட்டணி (பெர்சத்து)
P43 பாகன்லிம் குவான் எங்பாக்காத்தான் அரப்பான் (ஜ.செ.க)

சட்டமன்றத் தொகுதிகள்

[தொகு]

பினாங்கு மாநில சட்டமன்றத்தில் வடக்கு செபராங் பிறை மாவட்டப் பிரதிநிதிகளின் பட்டியல்

நாடாளுமன்றம்தொகுதிஇடம்உறுப்பினர்கட்சி
P41 N1பெனாகாமுகமது யூஸ்னி பின் மத் பியாதேசிய கூட்டணி (பாஸ்)
P41 N2பெர்த்தாம்காலிக் மெதாப் பின் முகமது இசாக்தேசிய கூட்டணி (PPBM)
P41 N3பினாங்கு துங்கால்அகமத் சகியுதீன் பின் அப்த் ரகுமான்பாக்காத்தான் ஹராப்பான் (பிகேஆர்)
P42 N4பெர்மாத்தாங் பெராங்கான்நோர் அபிஸா பிந்தி ஓத்மான்பாரிசான் நேசனல் (UMNO)
P42 N5சுங்கை துவாமுகம்மது யூசுப் பின் முகமது நூர்பாரிசான் நேசனல் (UMNO)
P42 N6தெலுக் ஆயர் தாவார்முசுதபா கமால் பின் அகமத்பாக்காத்தான் ஹராப்பான் (பிகேஆர்)
P43 N7பூயு ஆறுபி பூன் போபாக்காத்தான் ஹராப்பான் (ஜ.செ.க)
P43 N8பாகான் செர்மால்சூன் லிப் சீபாக்காத்தான் ஹராப்பான் (ஜ.செ.க)
P43 N9பாகான் டாலாம்சதீஸ் முனியாண்டிபாக்காத்தான் ஹரப்பான் (ஜ.செ.க)

வட செபராங் பிறை மாவட்டத்தின் தமிழ்ப்பள்ளிகள்

[தொகு]

மலேசியா; பினாங்கு; வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); 5 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. அவற்றில் 1,046 மாணவர்கள் பயில்கிறார்கள். 99 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள். மலேசியக் கல்வியமைச்சு 2020 ஜனவரி மாதம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள்.[3]

பள்ளி
எண்
இடம் பள்ளியின்
பெயர்
மலாய்
பள்ளியின்
பெயர்
தமிழ்
அஞ்சல் குறியீடு வட்டாரம் மாணவர்கள் ஆசிரியர்கள்
PBD2048 தாசேக் குளுகோர் SJK(T) Ldg Malakoff மலாக்கோப் தோட்டத் தமிழ்ப்பள்ளி 13300 தாசேக் குளுகோர் 91 11
PBD2049 கம்போங் பெசார் SJK(T) Ldg Mayfield மேபீல்டு தோட்டத் தமிழ்ப்பள்ளி 13300 தாசேக் குளுகோர் 88 15
PBD2050 கெப்பாலா பத்தாஸ் SJK(T) Palaniandy பழனியாண்டி தமிழ்ப்பள்ளி 13200 கெப்பாலா பத்தாஸ் 145 18
PBD2076 மாக் மண்டின் SJK(T) Mak Mandin மாக் மண்டின் தமிழ்ப்பள்ளி 13400 பட்டர்வொர்த் 720 55

பினாங்கு மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

[தொகு]

புள்ளி விவரங்கள்

[தொகு]
  • "Population Distribution and Basic Demographic Characteristics, 2010" (PDF). Department of Statistics, Malaysia. Archived from the original (PDF) on 22 May 2014.
  • "2017 Q2 statistics" (PDF). Penang Institute. Archived from the original (PDF) on 2017-12-01.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Webmaster, SPU. "Senarai Pegawai Daerah PDTSPU". spu.penang.gov.my. Archived from the original on 2021-01-19. Retrieved 2022-04-22.
  2. "Department of Statistics Malaysia Official Portal". www.dosm.gov.my.
  3. "Senarai Sekolah Rendah dan Menengah Jan 2020". www.moe.gov.my. Retrieved 2021-05-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
North Seberang Perai District'
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_செபராங்_பிறை_மாவட்டம்&oldid=3735374" இலிருந்து மீள்விக்கப்பட்டது