உள்ளடக்கத்துக்குச் செல்

நிபோங் திபால் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(நிபோங் திபால் மக்களவை தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
நிபோங் திபால் (P047)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Nibong Tebal (P047)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
நிபோங் திபால் மக்களவைத் தொகுதி

மாவட்டம்தென் செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிநிபோங் திபால் தொகுதி
முக்கிய நகரங்கள்நிபோங் திபால்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1974
கட்சி பாக்காத்தான்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்பட்லினா சிடேக்
(Fadhlina Sidek)
வாக்காளர்கள் எண்ணிக்கை100,062[1]
தொகுதி பரப்பளவு178 ச.கி.மீ[2]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் நிபோங் திபால் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (46.7%)
  சீனர் (34.8%)
  இதர இனத்தவர் (0.7%)

நிபோங் திபால் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Nibong Tebal; ஆங்கிலம்: Nibong Tebal Federal Constituency; சீனம்: 高渊国会议席) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், தென் செபராங் பிறை மாவட்டத்தில் (Central Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P047) ஆகும்.[3]

நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1974-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1974-ஆம் ஆண்டில் இருந்து நிபோங் திபால் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[4]

பொது

[தொகு]

நிபோங் திபால் நகரம்

[தொகு]

நிபோங் திபால் (Nibong Tebal) நகரம், பினாங்கு மாநிலத்தில் மிகத் துரிதமாக வளர்ச்சி பெற்றுவரும் ஒரு நகரமாக அறியப்படுகிறது. இந்த நகரத்திற்கு அருகாமையில் பத்து காவான் நகரம்; பேராக் மாநிலத்தின் பாரிட் புந்தார் நகரம்; கெடா மாநிலத்தின் செர்டாங் நகரம் ஆகிய நகரங்கள் உள்ளன.

இந்த நகரம் ஓர் அமைதியான நகரம். இந்த நகரத்தைச் சுற்றிலும் செம்பனைத் தோட்டங்கள் உள்ளன. முன்பு இந்தத் தோட்டங்கள் ரப்பர் தோட்டங்களாக இருந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் அந்தத் தோட்டங்களில் வேலை செய்தனர்.

நிபோங் திபால் தமிழர்கள்

[தொகு]

நில மேம்பாட்டுத் திட்டங்களின் காரணமாக, அங்கு வேலை செய்த தமிழர்கள், வேறு இடங்களுக்கு மாறிச் சென்று விட்டனர். தோட்டப்புறங்களில் பிறந்து வளர்ந்த இளைய தலைமுறையினர், உயர்க்கல்வி பெற்றதும் நகர்ப் புறங்களுக்கு மாறிச் சென்றனர். சிலர் நிபோங் திபால் நகருக்கு அருகாமையில் உள்ள தொழில்பேட்டைகளில் வேலை செய்கின்றனர். இங்கு அதிகமாகச் சீனர்கள் வாழ்கின்றனர்.

நிபோங் திபால் நகரின் அருகில் கிரியான் ஆறு செல்கிறது. இந்த ஆறு மலாக்கா நீரிணையில் கலக்கிறது. ஆற்றின் முகத்துவாரத்தில் பல மீன்பிடி கிராமங்கள் உள்ளன. அங்கு பெரும்பாலும் மலாய்க்காரர்களும் சீனர்களும் வாழ்கின்றனர்.

நிபோங் திபால் வாக்குச் சாவடிகள்

[தொகு]

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), நிபோங் திபால் மக்களவைத் தொகுதி 25 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டு உள்ளது. கீழ்க்காணும் வாக்குச் சாவடிகளில், வாக்காளர்களின் இருப்பிடத்திற்கு அருகில் உள்ள வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து வாக்குகளைச் செலுத்தலாம்.[5]

சட்டமன்ற தொகுதி தேர்தல் வட்டாரம் குறியீடு வாக்குச் சாவடி
ஜாவி
(Jawi)
(N19)
Changkat 047/19/01 SK Keledang Jaya
Perkampungan Jawi 047/19/02 SJK (C) Kampung Jawi
Taman Desa Jawi 047/19/03
  • SMK Jawi
  • SJK (T) Ladang Hawi
Ladang Caledonia 047/19/04 SJK (C) Pai Teik
Ladang Byram 047/19/05 SJK (T) Ldg Byram
Ladang Victoria 047/19/06 SMK Seri Nibong
Taman Sentosa 047/19/07 SK Nibong Tebal
Nibong Tebal 047/19/08 SMK Methodist
Jalan Bukit Panchor 047/19/09 Kolej Vokesional Nibong Tebal
Taman Helang Jaya 047/19/10 SMK Tunku Abdul Rahman
சுங்கை பாக்காப்
(Sungai Bakap)
(N20)
Padang Lalang 047/20/01 SMK Tasek
Puteri Gunong 047/20/02
  • SMK Bandar Tasek Mutiara
  • SK Bandar Tasek Mutiara
Tasek Junjong 047/20/03 SK Seri Tasek
Sungai Duri 047/20/04 SK Sungai Duri
Sungai Bakap 047/20/05
  • SMK Tun Syed Sheh Barakbah
  • SK Sungai Bakap
Ladang Sempah 047/20/06 SK Jawi
Sungai Kechil 047/20/07 SK Sungai Kechil
Kampung Besar 047/20/08 SK Sungai Kechil
சுங்கை அச்சே
(Sungai Acheh)
(N21)
Sungai Udang 047/21/01 Madrasah Al-Irsyadiah Sungai Acheh
Sungai Setar 047/21/02 SK Sungai Setar
Sungai Acheh 047/21/03 SK Sungai Acheh
Sungai Bakau 047/21/04 SK Sungai Bakau
Tanjong Berembang 047/21/05 SMK Sungai Acheh
Permatang To' Mahat 047/21/06
  • SK Permatang Tok Mahat
  • SMA Syeikh Abdullah Fahim
Taman Transkrian 047/21/07 SMK Saujana Indah

நிபோங் திபால் மக்களவைத் தொகுதி

[தொகு]
நிபோங் திபால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1974 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செபராங் செலாத்தான் (Seberang Selatan) தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
4-ஆவது மக்களவை 1974–1978 கோ செங் தெயிக்
(Goh Cheng Teik)
பாரிசான்
(கெராக்கான்)
5-ஆவது மக்களவை 1978–1982
6-ஆவது மக்களவை 1982–1986
7-ஆவது மக்களவை 1986–1990
8-ஆவது மக்களவை 1990–1995 டொமினிக் ஜோசப் புதுச்சேரி
(Dominic Joseph Puthucheary)
9-ஆவது மக்களவை 1995–1999 கோ செங் தெயிக்
(Goh Cheng Teik)
10-ஆவது மக்களவை 1999–2004 கோ கெங் உவாட்
(Goh Kheng Huat')
ஜசெக
11-ஆவது மக்களவை 2004–2008 சைனல் அபிடின் ஒசுமான்
(Zainal Abidin Osman)
பாரிசான்
(அம்னோ)
12-ஆவது மக்களவை 2008–2010 தான் தி பெங்
(Tan Tee Beng)
பி.கே.ஆர்
2010–2013 சுயேச்சை
13-ஆவது மக்களவை 2013–2018 மன்சூர் ஒசுமான்
(Mansor Othman)
பி.கே.ஆர்
14-ஆவது மக்களவை 2018–2020 பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
2020–2022 பெரிக்காத்தான்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் பட்லினா சிடேக்‌
(Fadhlina Sidek)
பாக்காத்தான்
(பி.கே.ஆர்)

நிபோங் திபால் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022 (நிபோங் திபால் தொகுதி)
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
100,062 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
80,477 80.4%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
79,308 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
148 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
1,021 -
பெரும்பான்மை
(Majority)
16,293 20.55%
வெற்றி பெற்ற கட்சி பாக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Penang

நிபோங் திபால் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
பட்லினா சிடேக்‌
(Fadhlina Sidek)
பாக்காத்தான் 42,188 53.20% -3.72
மன்சூர் ஒசுமான்
(Mansor Othman)
பெரிக்காத்தான் 25,895 32.65% +32.65 Increase
ஆர். எஸ். தனேந்திரன்
(Thanenthiran Ramankutty)
பாரிசான் 10,660 13.44% -18.05
கோ கெங் உவாட்
(Goh Kheng Huat)
சுயேச்சை 565 0.71% +0.71 Increase

நிபோங் திபால் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்ற தொகுதி சட்டமன்ற தொகுதிகள்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P047
நிபோங் திபால்
(Nibong Tebal)
புக்கிட் தம்பூன்
ஜாவி
சுங்கை அச்சே
சுங்கை பாக்காப்

நிபோங் திபால் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
# சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N19 ஜாவி
(Jawi)
இங் மூய் லாய்
(H’ng Mooi Lye)
பாக்காத்தான் (ஜசெக)
N20 சுங்கை பாக்காப்
(Sungai Bakap)
அமார் பிரிட்பால் அப்துலா
(Amar Pritpal Abdullah)
பாக்காத்தான் (பி.கே.ஆர்)
N21 சுங்கை அச்சே
(Sungai Acheh)
காலி

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 2018-04-16. p. 10. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  5. "Federal Government Gazette, Notice Under Subregulation 11 (5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 16 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

[தொகு]