உள்ளடக்கத்துக்குச் செல்

தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாசேக் குளுகோர் (P042)
மலேசிய மக்களவைத் தொகுதி
பினாங்கு
Tasek Gelugor (P042)
Federal Constituency in Penang
பினாங்கு மாநிலத்தில்
தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி
மாவட்டம்வட செபராங் பிறை மாவட்டம்; பினாங்கு
வாக்காளர் தொகுதிதாசேக் குளுகோர் தொகுதி
முக்கிய நகரங்கள்கெப்பாலா பத்தாஸ், லூனாஸ், தாசேக் குளுகோர், புக்கிட் மெர்தாஜாம்
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1984
கட்சி பெரிக்காத்தான் நேசனல்
இதற்கு முன்னர்
நடப்பில் இருந்த தொகுதி
2022
மக்களவை உறுப்பினர்வான் சைபுல் வான் சான்
(Wan Saiful Wan Jan)
வாக்காளர்கள் எண்ணிக்கை80,868
தொகுதி பரப்பளவு109 ச.கி.மீ[1]
இறுதி தேர்தல்பொதுத் தேர்தல் 2022




2022-இல் தாசேக் குளுகோர் தொகுதியின் வாக்காளர்களின் இனப் பிரிவுகள்

  மலாயர் (78.6%)
  சீனர் (15.1%)
  இதர இனத்தவர் (0.3%)

தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tasek Gelugor; ஆங்கிலம்: Tasek Gelugor Federal Constituency; சீனம்: 打色牛汝莪联邦选区) என்பது மலேசியா, பினாங்கு மாநிலத்தில், வட செபராங் பிறை மாவட்டத்தில் (North Seberang Perai District); அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P042) ஆகும்.[2]

தாசேக் குளுகோர் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதல் தேர்தல் 1986-ஆம் ஆண்டில் நடைபெற்றது. அத்துடன் அதே 1986-ஆம் ஆண்டில் இருந்து தாசேக் குளுகோர் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது.

2022 அக்டோபர் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட மலேசியக் கூட்டரசு அரசிதழின் படி (Federal Gazette issued on 31 October 2022), தாசேக் குளுகோர் தொகுதி 29 தேர்தல் வட்டாரங்களாக (Polling Districts) பிரிக்கப்பட்டது.[3]

பொது

[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம்

[தொகு]

வட செபராங் பிறை மாவட்டம் (North Seberang Perai District) பினாங்கு மாநிலத்தின் ஐந்து மாவட்டங்களில் ஒரு மாவட்டம்; 267 சதுர கி. மீ. பரப்பளவைக் கொண்டுள்ளது.

இந்த மாவட்டத்தின் வடக்கில் மூடா ஆறு செல்கிறது. இந்த ஆறு கெடா மாநிலத்தில் உள்ள கோலா மூடா மாவட்டம்; வட செபராங் பிறை மாவட்டம் ஆகிய இரு மாவட்டங்களையும் பிரிக்கின்றது.

தாசேக் குளுகோர்

[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைநகரம் கெப்பாலா பத்தாஸ். மாவட்டத்தின் மிகப்பெரிய நகரம் பட்டர்வொர்த். வடக்கு செபராங் பிறையில் அமைந்துள்ள பிற இடங்கள்: பெனாகா, பினாங்கு துங்கல், பெர்டா, தாசேக் குளுகோர், தெலுக் ஆயர் தாவார் மற்றும் மாக் மண்டின்.

பினாங்கு மாநிலத்தின் செபராங் பிறை பகுதியில் உள்ள மூன்று நிர்வாக மாவட்டங்களில் இந்த மாவட்டமும் ஒன்றாகும். இந்த வட செபராங் பிறை மாவட்டத்தில் பெரும்பாலும் நெல் பயிரிடப் படுகிறது. இந்த மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் நெல் வயல்களைக் கொண்டவை ஆகும்.

தாசேக் குளுகோர் மக்களவைத் தொகுதி

[தொகு]
தாசேக் குளுகோர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1986 - 2023)
நாடாளுமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கெப்பாலா பெத்தாஸ் தொகுதியில் இருந்து உருவாக்கப்பட்டது
7-ஆவது மக்களவை 1986–1990 முகமது யூசுப் அப்துல் லத்தீப்
(Mohammed Yusoff Abdul Latib)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
8-ஆவது மக்களவை 1990–1995 முகமது சரீப் உமர்
(Mohd Shariff Omar)
9-ஆவது மக்களவை 1995–1999 இப்ராகிம் சாத்
(Ibrahim Saad)
10-ஆவது மக்களவை 1999–2004 முகமது சரீப் உமர்
(Mohd. Shariff Omar)
11-ஆவது மக்களவை 2004–2008
12-ஆவது மக்களவை 2008–2013 நூர் முகமது யாக்கோப்
(Nor Mohamed Yakcop)
13-ஆவது மக்களவை 2013–2018 சாபுடின் யகாயா
(Shabudin Yahaya)
14-ஆவது மக்களவை 2018
2018–2019 சுயேச்சை
2019–2020 பாக்காத்தான் அரப்பான்
(பெர்சத்து)
2020–2022 பெரிக்காத்தான் நேசனல்
(பெர்சத்து)
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில் வான் சைபுல் வான் சான்
(Wan Saiful Wan Jan)

       பாரிசான்        சுயேச்சை        பாக்காத்தான்        பெரிக்காத்தான்

தாசேக் குளுகோர் தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
பொது வாக்குகள் %
பதிவு பெற்ற வாக்காளர்கள்
(Registered Electors)
80,868 -
வாக்களித்தவர்கள்
(Turnout)
67,790 82.99%
செல்லுபடி வாக்குகள்
(Total Valid Votes)
67,112 100.00%
கிடைக்காத அஞ்சல் வாக்குகள்
(Unreturned Ballots)
136 -
செல்லாத வாக்குகள்
(Rejected Ballots)
542 -
பெரும்பான்மை
(Majority)
12,252 18.25%
வெற்றி பெற்ற கட்சி பெரிக்காத்தான்
Source: Results of Parliamentary Constituencies of Kedah

தாசேக் குளுகோர் வேட்பாளர் விவரங்கள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர் கட்சி வாக்குப்பதிவு % ∆%
வான் சைபுல்ருதீன் வான் சான்
(Wan Saifulruddin Wan Jan)
பெரிக்காத்தான் 31,116 46.36% +46.36 Increase
முகமது யூசுப் முகமது நூர்
(Muhamad Yusoff Mohd Noor)
பாரிசான் 18,864 28.11% -7.62
நிக் அப்துல் ரசாக் ரிசுவான்
(Nik Abdul Razak Nik Md Ridzuan)
பாக்காத்தான் 16,547 24.66% -10.92
அப்துல் அலிம் சிர்சுங்
(Abdul Halim Sirjung)
உள்நாட்டு போராளிகள் கட்சி 406 0.60% +0.60 Increase
முகமது அக்மால் அசார்
(Mohd Akmal Azhar)
சபா பாரம்பரிய கட்சி 179 0.27% +0.27 Increase

தாசேக் குளுகோர் சட்டமன்ற தொகுதிகள்

[தொகு]
நாடாளுமன்றம் சட்டமன்றம்
1955–59* 1959–1974 1974–1986 1986–1995 1995–2004 2004–2018 2018–தற்போது
P042
தாசேக் குளுகோர்
அரா ரெண்டாங்
பெர்மாத்தாங் பெரங்கான்
சுங்கை டுவா
தெலுக் ஆயர் தாவார்

தாசேக் குளுகோர் சட்டமன்ற உறுப்பினர்கள் (2022)

[தொகு]
எண் தொகுதி உறுப்பினர் கூட்டணி (கட்சி)
N4 பெர்மாத்தாங் பெரங்கான்
(Permatang Berangan)
அபிசா ஒசுமான்
(Nor Hafizah Othman)
பாரிசான் (அம்னோ)
N5 சுங்கை டுவா
(Sungai Dua)
முகமது யூசோப் நூர்
(Muhamad Yusoff Mohd Noor)
N6 தெலுக் ஆயர் தாவார்
(Telok Ayer Tawar)
முசுதபா கமால் அகமது
(Mustafa Kamal Ahmad)
பாக்காத்தான் (பிகேஆர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  2. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 9 ஜூன் 2023. {{cite web}}: Check date values in: |access-date= (help)

மேலும் காண்க

[தொகு]