சதவீத முனைப்புள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சதவீத முனைப்புள்ளி அல்லது சதவீதப் புள்ளி (Percentage point or 'pp') என்பது இரண்டு சதவீதங்களின் கணித வேறுபாட்டிற்கான அலகு ஆகும். எடுத்துக்காட்டாக, 40% இலிருந்து 44% வரை நகர்வதால் ஏற்படும் அதிகரிப்பானது சதவீதப் புள்ளியில் 4 (44% - 40%) ஆகும். ஆனால் உண்மையான அதிகரிப்பு 10% ஆகும் ().

கணிதத்தில், சதவீத முனைப்புள்ளி அலகானது வழக்கமாக ஆங்கிலத்தில் pp அல்லது p.p என சுருக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. தொடர்ந்து பயன்படுத்துகையில் முதல் அறிமுக நிகழ்வுக்குப் பிறகு, சில கணித அறிஞர்கள் "புள்ளி" அல்லது "புள்ளிகள்" என சதவீத முனைப்புள்ளியை  சுருக்கிப் பயன்படுத்திகிறார்கள்.[1][2]

எடுத்துக்காட்டு[தொகு]

பின்வரும் எடுத்துக்காட்டில் 1980 ஆம் ஆண்டில், 50% மக்கள் புகைபிடித்தனர், 1990 இல் 40% புகைபிடித்தனர் எனில், 1980 முதல் 1990 வரை புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைந்துள்ள அளவு:

  • 10 சதவீதப்புள்ளிகள் (50 -40)
  • சதவீதத்தில்
.

புகைபிடிப்போரின் எண்ணிக்கை குறைந்ததன் அளவு, சதவீதப்புள்ளிகளில் 10 என்றாலும் உண்மையில் 20 சதவீதம் குறைந்து உள்ளது.

சதவீத முனைப்புள்ளி வேறுபாடு விளக்கம்[தொகு]

சதவீத  முனைப்புள்ளி வேறுபாடுகள் நிகழ்தகவினை அல்லது எதிர்பார்ப்பினை வெளிப்படுத்த உதவும் ஒரு அலகாகும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நோயை மருந்துகளால் 70 சதவீதம் அந்நோயால் பாதிக்கப்பட்டவர்களைக் குணப்படுத்தலாம்; அதே நேரத்தில் மருந்து இல்லாமல் 50 சதவீதம் நோயாளிகள் குணமடையும் வாய்ப்புள்ளது எனில் மருந்தின் மூலம் 20 சதவீதமுனைப்புள்ளி அளவுக்கு நோயின் முழுமையான அபாயம் குறைக்கப்படுகிறது என அறியலாம்.

இந்த நிகழ்வில், சதவீத முனைப்புள்ளி வேறுபாட்டின் தலைகீழ் மாற்றம்:

1 / (20%) = 1 / 0.20 = 5

இதனால் 5 நோயாளிகள் மருந்துடன் சிகிச்சையளிக்கப்பட்டால், மருந்து இல்லாத நிலையில் குணமடையும் நபர்களை விட மருந்துடன் குணமடையும் நபர்களின் எண்ணிக்கை ஒன்று அதிகமாக இருக்குமென எதிர்பார்க்கலாம்.

சதவீத முனைப்புள்ளிக்கும் சதவீதத்திற்கும் உள்ள வேறுபாடு[தொகு]

வளர்ச்சி, மகசூல், உமிழ்வு பின்னம் போன்றவற்றை சதவீதத்தால் கணக்கிடப்படுகிறது. திட்ட விலக்கமானது, சதவீதத்தை அலகாகக் கொண்டிருக்கும். திட்ட விலக்கத்திற்கான அலகு சதவிகிதத்தில் தவறாகப் பயன்படுத்துவதால் குழப்பம் நிலவுகிறது, ஏனென்றால் ஒப்புமைத் திட்ட விலக்கத்திற்கான ஒரு அலகாக சதவீதம் பயன்படுத்தப்படுகிறது, அதாவது திட்ட விலக்கத்தை சராசரி மதிப்பால் வகுக்கப்பட்டு சதவீதத்தால் பெருக்கக்கிடைப்பது மாறுபாடுகளின் குணகம் என அழைக்கப்படுகிறது.

சார்ந்த அலகுகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Brechner, Robert (2008). Contemporary Mathematics for Business and Consumers, Brief Edition. Cengage Learning. p. 190. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015.
  2. Wickham, Kathleen (2003). Math Tools for Journalists. Cengage Learning. p. 30. பார்க்கப்பட்ட நாள் 7 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதவீத_முனைப்புள்ளி&oldid=2748930" இலிருந்து மீள்விக்கப்பட்டது