பின்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மூன்றேமுக்கால்-இதில் முக்கால் என்பது பின்னம்

பின்னம் என்பது முழு எண் ஒன்றின் பகுதியை குறிக்கும். ஒன்றை நான்காக வகுத்தால், அதில் 3 பகுதிகளைக் குறிக்க 3/4 எனக் குறிப்பது பின்னம். இதனை பிள்வம், பிள்ளம் என்றும் குறிக்கலாம். தமிழில் இதற்கு கீழ்வாய் எண்கள் என்பது பெயர்.

தமிழில் கீழ்வாய் எண்களின் (பின்னங்களின்) பெயர்கள் பின்வருமாறு;

 • 15/16 = 0.9375 = முக்காலே மூன்று வீசம்
 • 3/4 = 0.75 = முக்கால்
 • 1/2 = 0.5 = அரை
 • 1/4 = 0.25 = கால்
 • 1/5 = 0.2 = நால்மா/நான்மா
 • 3/16 = 0.1875 = மூன்று வீசம்
 • 3/20 = 0.15 = மூன்றுமா
 • 1/8 = 0.125 = அரைக்கால்
 • 1/10 = 0.1 = இருமா
 • 1/16 = 0.0625 = வீசம்
 • 1/20 = 0.05 = மா
 • 3/64 = 0.046875 = முக்கால் வீசம்
 • 3/80 = 0.0375 = முக்காணி
 • 1/32 = 0.03125 = அரை வீசம்
 • 1/40 = 0.025 = அரை மா
 • 1/64 = 0.015625 = கால் வீசம்
 • 1/80 = 0.0125 = காணி
 • 3/320 = 0.009375 = அரைக்காணி முந்திரி
 • 1/160 = 0.00625 = அரைக் காணி
 • 1/320 = 0.003125 = முந்திரி
 • 3/1280 = 0.00234375 = கீழ் முக்கால்
 • 1/640 = 0.0015625 = கீழ் அரை
 • 1/1280 = 0.00078125 = கீழ்க் கால்
 • 1/1600 = 0.000625 = கீழ் நால்மா
 • 3/5020 = 0.000597609 = கீழ் மூன்று வீசம்
 • 1/2560 =0.000390625 = கீழ் அரைக்கால்
 • 1/3200 = 0.0003125 = கீழ் இருமா
 • 1/5120 = 0.000195312= கீழ் மாகாணி
 • 1/6400 = 0.00015625 = கீழ் மா
 • 3/25600 = 0.000117187 = கீழ் முக்காணி
 • 1/12800 = 0.000078125 = கீழ் அரைமா
 • 1/25600 = 0.000039062 = கீழ்க்காணி
 • 1/51200 = 0.000019531 = கீழ் அரைக்காணி
 • 1/102400 = 0.000009765 = கீழ் முந்திரி}

பின்னங்கள் ( Fractions )

1= ஒன்று ( onRu ) 3/4= முக்கால் ( mukkaal ) 1/2= அரை ( arai ) 1/4= கால் ( kaal ) 1/5= நாலுமா ( naalumaa ) 3/16= மூன்று வீசம் ( moonRu veesam ) 3/20= மூன்றுமா ( moonRumaa ) 1/8= அரைக்கால் ( araikkaal ) 1/10= இருமா ( irumaa ) 1/16= மாகாணி , வீசம் ( maakaaNi , veesam ) 1/20= ஒருமா ( orumaa ) 3/64= முக்கால் வீசம் ( mukkaal veesam ) 3/80= முக்காண் ( mukkaaN ) 1/32= அரைவீசம் ( araiveesam ) 1/40 = அரைமா ( araimaa ) 1/64= கால் வீசம் ( kaal veesam ) 1/80= காணி ( kaaNi ) 3/320= அரைக்காணி முந்திரி ( araikkaaNi munthiri ) 1/160= அரைக்காணி ( araikkaaNi ) 1/320= முந்திரி ( munthiri ) 1/102,400= கீழ் முந்திரி ( keezh munthiri ) 1/2,150,400= இம்மி ( immi ) 1/23,654,400= மும்மி ( mummi ) 1/165,580,800= அணு ( aNu ) 1/1,490,227,200= குணம் ( kuNam ) 1/7,451,136,000= பந்தம் ( pantham ) 1/44,706,816,000= பாகம் ( paagam ) 1/312,947,712,000= விந்தம் ( vintham ) 1/5,320,111,104,000= நாகவிந்தம் ( naagavintham ) 1/74,481,555,456,000= சிந்தை ( sinthai ) 1/1,489,631,109,120,000= கதிர்முனை ( kathirmunai ) 1/59,585,244,364,800,000= குரல்வளைப்பிடி ( kuralvaLaippidi ) 1/3,575,114,661,888,000,000= வெள்ளம் ( veLLam ) 1/357,511,466,188,800,000,000= நுண்மணி ( nuNNmaNl ) 1/2,323,824,530,227,200,000,000= தேர்த்துகள் ( thaertthugaL )

மேலும் விவரங்களுக்கு[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பின்னம்&oldid=1964983" இருந்து மீள்விக்கப்பட்டது