விகிதமுறா எண்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணிதத்தில் இரண்டு முழுஎண்களின் விகிதமாக எழுதப்பட இயலாத எல்லா எண்களும் விகிதமுறா எண்கள் எனப்படும். கணித வரலாற்றில் விகிதமுறா எண்களின் அறிமுகம் ஒரு முக்கியாமான திருப்பம். பை, e, பொன் விகிதம் ஆகியவை முக்கிய நன்கு அறியப்பட்ட விகிதமுறா எண்கள் ஆகும்.

விகிதமுறா எண்களை அடையாளங்காணல்[தொகு]

மெய்யெண் தொகுப்பில் விகிதமுறு எண்களைத் தவிர்த்த எண்கள் விகிதமுறா எண்கள் எனலாம்.அதாவது விகிதமுறு எண்கள் அமைப்பில் எழுத இயலாத எண்களாக விகிதமுறா எண்கள் அமைகின்றன. எடுத்துக்காட்டாக,1. 0.4326...; 2. 7.234... மேற்கண்ட எடுத்துக்காட்டிலிருந்து விகிதமுறா எண்கள் ஒரு முழுக்களாகவோ(5;-8;0) அல்லது பின்ன எண்ணாகவோ(2/3; 77/33;0) அல்லது முடிவுறு தசம எண்ணாகவோ(3.456; 0.7854) அல்லது தசமஎண் சுழல் எண் (3.444..; 0.389389...) கொண்டதாகவோ அமையாது.

∏ விகிதமுறு எண்ணா? விகிதமுறா எண்ணா?[தொகு]

∏ ஒரு விகிதமுறா எண்ணே ஆகும். ஏனெனில் ∏ ஆனது 22/7 என்று எழுதுவது உண்டு. ஆனால் அது தோராய மதிப்பே தவிர சரியான மதிப்பு அன்று. பகா எண்களின் வர்க்கமூலம் அனைத்தும் விகிதமுறா எண்களாக அமைகின்றன.

விகிதமுறா எண்களின் வரலாறு[தொகு]

விதமுறா எண் என்னும் எண்ணக்கரு மணவா(கி.மு 750 - கி.மு 690) என்னும் இந்திய கணிதவியலாளரினால் 2, 61 போன்ற எண்களுக்கான வர்க்கமூலங்கள் திருத்தமாக துல்லியமான பெறுமானங்களுக்கு கணிக்க முடியது என்ற கருத்தை முன்வைக்கும் போதே 7ம் நூற்றாண்டளவில் ஏனைய இந்திய கணிதவியளாலர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக கருதப்படுகிறது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=விகிதமுறா_எண்&oldid=2362778" இருந்து மீள்விக்கப்பட்டது