உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு எஸ்பிளனேட்

ஆள்கூறுகள்: 5°25′19.92″N 100°20′30.948″E / 5.4222000°N 100.34193000°E / 5.4222000; 100.34193000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
எஸ்பிளனேட்
Esplanade
Padang Kota Lama
Map
அமைவிடம் பினாங்கு
 மலேசியா
அண்மைய நகரம்ஜார்ஜ் டவுன்
ஆள்கூறு5°25′19.92″N 100°20′30.948″E / 5.4222000°N 100.34193000°E / 5.4222000; 100.34193000
இயக்குபவர்பினாங்கு தீவு மாநகராட்சி
முதலாம் உலகப் போரின்போது உயிர் நீத்த நேச நாட்டுப் படையினரை நினைவுகூரும் வகையில் கட்டப்பட்ட நினைவுச்சின்னம்.

எஸ்பிளனேட் அல்லது பினாங்கு எஸ்பிளனேட் ஆங்கிலம்: Esplanade) என்பது மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில் ஜார்ஜ் டவுன் மாநகர் மையத்தில் அமைந்துள்ள கடற்கரை நகரச் சதுக்கமாகும்.

பாடாங் (Padang) என்று அழைக்கப்படும் கார்ன்வாலிஸ் கோட்டையை (Fort Cornwallis) ஒட்டியுள்ள பகுதியையும்; கடலோர நடைப் பாதையும் இந்தக் கடற்கரை நகரச் சதுக்கம் உள்ளடக்கியது. பினாங்கு மாநகர் மண்டபம் (City Hall) கார்ன்வாலிஸ் கோட்டையை எதிர்கொள்கிறது.

பொது

[தொகு]
எஸ்ப்ளேனேட்டில் இருந்து பினாங்கு துறைமுகத்தின் காட்சி

பினாங்கு வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நிகழ்வின் தளமாக பினாங்கு எஸ்பிளனேட் அமைகிறது. இங்குதான் ஜார்ஜ் டவுனின் நிறுவனர் கேப்டன் பிரான்சிஸ் லைட் 1786 ஜூலை 17 அன்று முதன்முதலில் காலடி வைத்தார்.

கேப்டன் பிரான்சிஸ் லைட், பினாங்குத் தீவை கைப்பற்றிய பிறகு, எஸ்ப்ளேனேட் பகுதியில் உள்ள காடுகளை அழித்து முதல் குடியிருப்பை உருவாக்கினார். அதே காலக் கட்டத்தில், கார்ன்வாலிஸ் கோட்டையும் எஸ்ப்ளேனேட் பகுதியின் கிழக்கே கட்டப்பட்டது.

வரலாறு.

[தொகு]

பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகரான கேப்டன் பிரான்சிஸ் லைட் 1786 சூலை 17 அன்று முதன்முதலில் பினாங்கு தீவில் தரையிறங்கிய இடத்தில்தான் எஸ்ப்ளேனேட் உள்ளது. பிரித்தானிய பேரரசின் சார்பாக, பினாங்குத் தீவைப் பெற்ற பிறகு, அந்தத் தீவின் காடுகளை அழித்துச் சீர் செய்வதற்கு கேப்டன் பிரான்சிஸ் லைட் ஒரு திட்டம் வகுத்தார்.

காடுகளை அழிக்கும் திட்டத்தில், அங்கிருந்த புலம்பெயர் மக்களைக் கவர்ந்திழுக்க, காட்டுப் பகுதிக்குள் வெள்ளி நாணயங்களை வீசும்படி தன் கப்பல் சிப்பந்திகளுக்கு. பிரான்சிஸ் லைட் கட்டளையிட்டார். வெள்ளி நாணயங்களைத் தேடிச் சென்ற மக்கள் காடுகளையும் புதர்களையும் அழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. வனப்பகுதி ஓரளவிற்குச் சுத்தமான பிறகு கார்ன்வாலிஸ் கோட்டையும் கட்டப்பட்டது.

இப்போது பாடாங் என்று அழைக்கப்படும் இந்த இடம்தான், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தால் பினாங்கிற்கு அனுப்பப்பட்ட இந்தியச் சிப்பாய்கள் முதன்முதலாகத் தரை இறங்கிய இடமாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Langdon, Marcus. A Guide to George Town's Historic Commercial and Civic Precincts. Penang: George Town World Heritage Incorporated.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_எஸ்பிளனேட்&oldid=4108681" இலிருந்து மீள்விக்கப்பட்டது