உள்ளடக்கத்துக்குச் செல்

பினாங்கு டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பினாங்கு டாலர்
Penang Dollar
Dolar Penang
அலகு
குறியீடு$
மதிப்பு
துணை அலகு
1100செண்டு
வங்கித்தாள்5, 10, 20, 25, 50 செண்டுகள், 1, 5, 10, 25, 50, 100, 1000 டாலர்கள்
Coins14, 12, 1, 5, 10, 20, 50 செண்டுகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்) பினாங்கு
வெளியீடு
நடுவண் வங்கிபிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்

பினாங்கு டாலர் (ஆங்கிலம்: Penang Dollar; மலாய் மொழி: Dolar Penang); என்பது 1786-ஆம் ஆண்டில் இருந்து 1826-ஆம் ஆண்டு வரை தீபகற்ப மலேசியாவின் பினாங்கு தீவில் பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.[1]

1786-ஆம் ஆண்டில் பினாங்கு தீவை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் (East India Company) கையகப்படுத்திய பிறகு பினாங்கு டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது. பினாங்கு டாலர் 100 சென்டுகளாகப் பிரிக்கப்பட்டு; ஒரு செண்டு என்பது ஒரு பைசா (Pice) என்று அழைக்கப்பட்டது. மேலும் ஒரு பினாங்கு டாலர் ஓர் எசுப்பானிய டாலருக்கு (Spanish Dollar) சமமாக இருந்தது.

பொது

[தொகு]

1826-ஆம் ஆண்டு, பினாங்கு டாலர் புழக்கத்தில் இருந்து நிறுத்தப்பட்டு இந்திய ரூபாய் (Indian Rupee) அறிமுகம் செய்யப்பட்டது. 1786 மற்றும் 1788-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் 110; 12; மற்றும் 1 செண்டு (தாமிரம்), 110; 14; ஆகிய மதிப்புகளில் நாணயங்கள் வெளியிடப்பட்டன.

மற்றும் 12 பினாங்கு டாலர் (வெள்ளி); ஈயத்திலான 1 பினாங்கு செண்டு நாணயங்கள் 1800 - 1809-ஆம் ஆண்டுகளுக்கு இடையில் வெளியிடப்பட்டன.

இந்திய ரூபாய்

[தொகு]

அதைத் தொடர்ந்து 1810-இல் 12 செம்பு நாணயம்; மற்றும் 1826-இல் 1 செண்டு செம்பு நாணயம்; 12 செண்டு செம்பு நாணயம்; மற்றும் 2 செண்டு செம்பு நாணயங்கள் வெளியிடப்பட்டன. 1828-இல், பினாங்கு டாலருக்குப் பதிலாக இந்திய ரூபாய்க்கு மாற்றப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Linzmayer, Owen (2013). "Straits Settlements". The Banknote Book. San Francisco, CA: www.BanknoteNews.com.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

‎ ‎

"https://ta.wikipedia.org/w/index.php?title=பினாங்கு_டாலர்&oldid=3667296" இலிருந்து மீள்விக்கப்பட்டது