உள்ளடக்கத்துக்குச் செல்

மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்
Malaya and British Borneo Dollar
மலாயா
பிரித்தானிய போர்னியோ டாலர்
(1959)
அலகு
குறியீடு$
மதிப்பு
துணை அலகு
1100செண்டு
வங்கித்தாள்1, 5, 10, 50, 100, 1000, 10000 டாலர்கள்
Coins1, 5, 10, 20, 50 செண்டுகள்
மக்கள்தொகையியல்
பயனர்(கள்)மலாயா, சிங்கப்பூர், புரூணை, வடக்கு போர்னியோ, சரவாக்
வெளியீடு
நடுவண் வங்கிமலாயா மற்றும் பிரித்தானியா போர்னியோ நாணய ஆணையர்கள் வாரியம்
மலேசிய நடுவண் வங்கி

மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் (ஆங்கிலம்: Malaya British Borneo Dollar; மலாய் மொழி: Dolar Malaya British Borneo சாவி رڠڬيت); என்பது மலாயா, சிங்கப்பூர், பிரித்தானிய சரவாக் முடியாட்சி, பிரித்தானிய வடக்கு போர்னியோ முடியாட்சி, புரூணை மற்றும் ரியாவு தீவுக்கூட்டம் பகுதிகளில் 1953-ஆம் ஆண்டில் இருந்து 1967-ஆம் ஆண்டு வரை பயன்படுத்தப்பட்ட பணத் தாள் (Currency) ஆகும்.

இது மலாயா டாலர் மற்றும் சரவாக் டாலர் ஆகியவற்றுக்குப் பதிலாக புழக்கத்திற்கு வந்தது. மலாயா மற்றும் பிரித்தானியா போர்னியோ நாணய வாரியத்தால் வெளியிடப்பட்டது. 1952-க்கு முன்னர், இந்த வாரியம் மலாயா நாணய ஆணையர்களின் வாரியம் என்று அறியப்பட்டது.[1]

மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் 1957-ஆம் ஆண்டுக்குப் பிறகு மலாயாவிலும்; 1963-இல் மலேசியா கூட்டமைப்பு உருவான பிறகு 1965-இல் மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் பயன்படுத்தப்பட்டது. 1965-ஆம் ஆண்டுக்குப் பின்னர் சிங்கப்பூரிலும் சிறிது காலம் பயன்படுத்தப்பட்டது.

பொது

[தொகு]

1967-க்குப் பிறகு, மலேசியா, சிங்கப்பூர், புரூணை ஆகிய மூன்று நாடுகளும்; மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்திக் கொண்டு, தங்களின் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின.

இருப்பினும், மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர்கள் 16 சனவரி 1969 வரை சட்டப்பூர்வமான நானயமாகத் தொடர்ந்து புழக்கத்தில் இருந்தன. 1963-ஆம் ஆண்டுக்கு முன்னர் இந்தோனேசியாவின் ரியாவு தீவுக்கூட்ட பகுதிகளிலும் இந்த நாணயம் பயன்படுத்தப்பட்டது.[2]

பயன்பாட்டு முடிவு

[தொகு]

12 சூன் 1967-இல், மலாயா பிரித்தானிய போர்னியோ டாலரின் பயன்பாடு ஒரு முடிவுக்கு வந்தது. மலேசியா, சிங்கப்பூர், புரூணை ஆகிய நாடுகள்; அவை ஒவ்வொன்றும் தங்கள் சொந்த நாணயங்களை வெளியிடத் தொடங்கின:

1973 மே 8-ஆம் தேதி, மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் பயன்பாட்டை நிறுத்த மலேசிய அரசாங்கம் முடிவு செய்யும் வரையில், மூன்று நாடுகளின் நாணயங்களும், பரிமாற்ற ஒப்பந்தத்தின் கீழ் சம மதிப்பில் மாற்றக் கூடியவையாக இருந்தன. இந்த ஒப்பந்தம் புரூணை மற்றும் சிங்கப்பூர் நாடுகள் இடையே இன்று வரை தொடர்கிறது.[1]

மலாயா பிரித்தானிய போர்னியோ டாலர் ஆணையர்கள் வாரியம் 30 நவம்பர் 1979-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Board of Commissioners of Currency, Malaya and British Borneo was established on 1 January 1952 as the sole currency issuing authority for the Federation of Malaya, Singapore, Brunei, British North Borneo and Sarawak. With the accession of Queen Elizabeth II to the throne, all currency notes and coins issued by this Board bore her portrait. These notes bore the year-date 21 March 1953". web.archive.org. 2 February 2010. Archived from the original on 2 பிப்ரவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unfit URL (link)
  2. "BFrom 1946 to 1952, notes and coins issued by the Board of Commissioners of Currency Malaya were used. These notes and coins carried the portraits of King George VI. On January 1, 1952, the Board of Commissioners of Currency Malaya and British Borneo came into existence. Notes and coins bearing the portraits of Queen Elizabeth II were issued. The Federation of Malaya became an independent nation on August 31, 1". web.archive.org. 4 March 2012. Archived from the original on 4 மார்ச் 2012. பார்க்கப்பட்ட நாள் 25 February 2023. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

‎ ‎