வரலாற்றுக்கு முந்திய மலேசியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மலேசியாவில் உள்ள பெராக்கின் ஈப்போவில் உள்ள 2,000 ஆண்டுகள் பழமையான தம்புன் குகையோவியங்கள்.

வரலாற்றுக்கு முந்திய மலேசியா என்பது, மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையிலான மனிதன் தோன்றியதற்கும் பதிவு செய்யப்பட்ட வரலாற்றுத் தொடக்கத்துக்கும் இடைப்பட்ட காலப்பகுதியைப் பற்றியது ஆகும். மலேசியாவில் உடற்கூற்றியல் அடிப்படையிலான நவீன மனிதரின் மிகப் பழைய எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றுள் பெராக் ஆண் 11,000 ஆண்டுகளுக்கும், பெராக் பெண் 8,000 ஆண்டுகளுக்கும் முந்தி வாழ்ந்தவர்கள். இவ்விருவரது எச்சங்களும் லெங்கொங் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டவை. இக்களத்தில் சம்மட்டிக் கற்களைக்கொண்டு கற்கருவிகள் தயாரிக்கும் இடம் ஒன்றும் குலைவடையாத நிலையில் உள்ளது. தம்புன் குகையோவியங்களும் பெராக்கிலேயே உள்ளன. கிழக்கு மலேசியாவைச் சேர்ந்த சரவாக்கின் நியா குகைகளில் 40,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

காலவரிசை[தொகு]

35,000+ ஆண்டுகளுக்கு முன் - தொடக்கக் கற்காலம்[தொகு]

சரவாக்கில் உள்ள நியா குகைகள் முக்கியமான வரலாற்றுக்கு முந்தியகாலக் களம் ஆகும். இங்கே 40,000 ஆண்டுகள் பழமையான மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.[1] சாபாவில் லகாட் தாத்துவுக்கு அண்மையில் உள்ள மன்சூலி பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் இதைவிடப் பழமையானவை எனத் தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். ஆனாலும் துல்லியமான காலக்கணிப்புப் பகுப்பாய்வுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.[2]

மேற்கோள்கள்[தொகு]