ஆங்கிலோ-இடச்சு உடன்படிக்கை, 1824

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆங்கிலோ டச்சு உடன்படிக்கை, 1824
Anglo-Dutch Treaty of 1824
ஒப்பந்த வகைஇருதரப்பு உடன்படிக்கை
கையெழுத்திட்டது17 மார்ச்சு 1824; 200 ஆண்டுகள் முன்னர் (1824-03-17)
இடம்இலண்டன்
கையெழுத்திட்டோர்
முழு உரை
Anglo-Dutch Treaty of 1824 விக்கிமூலத்தில் முழு உரை

ஆங்கிலோ டச்சு உடன்படிக்கை, 1824 (ஆங்கிலம்: Anglo-Dutch Treaty of 1824) அல்லது இலண்டன் உடன்படிக்கை என்பது ஐக்கிய இராச்சியம் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுக்கு இடையே 17 மார்ச் 1824-இல் இலண்டனில் கையெழுத்திடப்பட்ட ஓர் உடன்படிக்கையாகும். ஏற்கனவே 1814-ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்தில் ஏற்பட்ட சர்ச்சைகளுக்குத் தீர்வு காணும் பொருட்டு இந்த புதிய உடன்படிக்கை செய்து கொள்ளப்பட்டது.

இந்த உடன்படிக்கையில் நெதர்லாந்து சார்பில் என்ட்ரிக் பேகல் மற்றும் அன்டன் ரெய்ன்ஹார்ட் பால்க் கையெழுத்திட்டனர்; ஐக்கிய இராச்சியத்தின் சார்பில் ஜார்ஜ் கேனிங் மற்றும் சார்லஸ் வில்லியம்ஸ் கையெழுத்திட்டனர்.[1]

வரலாறு[தொகு]

1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தத்திற்கு முன்னும் பின்னும் ஜொகூர் சுல்தானகம்

ஐக்கிய இராச்சியத்தின் கட்டுப்பாடில்:

டச்சு பேரரசு கட்டுப்பாடில்:
  இந்திரகிரி சுல்தானகம்


நெப்போலியப் போர்களுக்கு பின்னர் தென்கிழக்கு ஆசியாவில் பிரித்தானியர் ஆக்கிரமிப்பு செய்த டச்சு காலனித்துவ உடைமைகளை மீட்டு எடுப்பதில் ஏற்பட்ட சிக்கல்களைத் தீர்க்க இந்த 1824-ஆம் ஆண்டு ஆங்கிலோ-டச்சு ஒப்பந்தம் கையெழுத்தானது.

வாசனைப் பொருட்களின் தீவுகள் என்று அழைக்கப்படும் சுமத்திரா, ஜாவா, போர்னியோ, பிலிப்பைன்சு தீவுகளில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக பிரித்தானியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் இடையே வர்த்தக உரிமைப் பிரச்சினைகள் இருந்து வந்தன. அந்தப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் இந்த 1824--ஆம் ஆண்டு ஆங்கிலோ டச்சு உடன்படிக்கை தீர்வு கண்டது.[2]

இரு நாடுகளின் சர்ச்சைகள்[தொகு]

1819-இல் மலாயா தீபகற்பத்தின் சிங்கப்பூர் தீவில் இசுடாம்போர்டு இராபிள்சு (Sir Thomas Stamford Raffles) என்பவரின் தலையீட்டினால் ஐக்கிய இராச்சியம்; டச்சு பேரரசு ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான பதட்டத்தை மேலும் அதிகப் படுத்தியது.

இசுடாம்போர்டு ராபிள்சுக்கும் மற்றும் ஜொகூர் சுல்தானுக்கும் இடையே கையெழுத்தான ஒப்பந்தம் செல்லாது என்றும்; ஜொகூர் சுல்தானகம் என்பது டச்சுக்காரர்களின் செல்வாக்கு மண்டலத்தின் கீழ் இருந்தது என்றும் டச்சுக்காரர்கள் வாதாடினர்.

பிரித்தானிய இந்தியாவில் இருந்த டச்சு உடைமைகள் மற்றும் டச்சு வர்த்தக உரிமைகளின் மீதான பிரச்சினைகளினால் கல்கத்தாவிற்கும் பத்தேவியாவிற்கும் இடையே சர்ச்சைகள் ஏற்பட்டன. 1820-ஆம் ஆண்டில், தூர கிழக்கில் முதலீடுகள் செய்த பிரித்தானிய வணிகர்களின் அழுத்தத்தின் கீழ், தென்கிழக்கு ஆசியாவின் நிலைமை குறித்து பேச்சுவார்த்தைகள் தொடங்கின.[3]

சிங்கப்பூரில் பிரித்தானியரின் உரிமை[தொகு]

பேச்சுவார்த்தைகள் 20 ஜூலை 1820-இல் தொடங்கின. சிங்கப்பூரை பிரித்தானியர் கைவிட வேண்டும் என்று டச்சுக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர். இருப்பினும் பிரித்தானியர்கள் சிங்கப்பூரை விட்டுக் கொடுக்கவில்லை. 1820 ஆகஸ்டு 5-இல் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.

1823-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டன. டச்சுக்காரர்கள், மலாக்கா நீரிணைக்கு வடக்கே இருந்த தங்களின் உரிமைகளை கைவிட்டனர். இறுதி ஒப்பந்தம் 1824 மார்ச் 17-இல் கையெழுத்தானது.

மேற்கோள்கள்[தொகு]

  1. H.R.C. Wright, "The Anglo-Dutch Dispute in the East, 1814-1824." Economic History Review 3.2 (1950): 229-239 online.
  2. Peter Turner; Hugh Finlay (1996). Malaysia, Singapore and Brunei. Lonely Planet Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-86442-393-1. https://books.google.com/books?id=tXGoCJaIk7cC. 
  3. James Robert Rush (2018). Southeast Asia: A Very Short Introduction. Oxford University Press. பக். 58. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780190248765. https://www.google.com.sg/books/edition/Southeast_Asia/SU5WDwAAQBAJ. 

மேலும் காண்க[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]