உள்ளடக்கத்துக்குச் செல்

ஜொகூர் சுல்தான் அபு பக்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜொகூர் சுல்தான் அபு பக்கர்
Sultan Abu Bakar Daeng Ibrahim
Sultan Abu Bakar of Johor
سلطان عزلن محب الدين شاه‎
ஜொகூர் சுல்தான் அபு பக்கர்
ஜொகூர் சுல்தான்
ஆட்சிக்காலம்13 பிப்ரவரி 1886 - 4 சூன் 1895
மலேசியா29 சூலை 1886
முன்னையவர்ஜொகூர் சுல்தான் அலி இசுகந்தர் சா
(Sultan Ali Iskandar Shah)
பின்னையவர்ஜொகூர் சுல்தான் இப்ராகிம்
(Sultan Ibrahim of Johor)
ஜொகூர் மகாராஜா
ஆட்சிக்காலம்30 சூன் 1868 - 12 பிப்ரவரி 1886
முன்னையவர்தெமாங்கோங் டாயாங் இப்ராகிம்
(Temenggong Daeng Ibrahim)
பின்னையவர்ஜொகூர் சுல்தான்
ஜொகூர் தெமாங்கோங்
ஆட்சிக்காலம்2 பிப்ரவரி 1862 - 29 சூன் 1868
முன்னையவர்தெமாங்கோங் டாயிங் இப்ராகிம்
பின்னையவர்ஜொகூர் மகாராஜா (Maharaja of Johor)
பிறப்பு(1833-02-03)3 பெப்ரவரி 1833
இசுதானா லாமா, தெலுக் பெலாங்கா, சிங்கப்பூர், நீரிணை குடியேற்றங்கள்
இறப்பு4 சூன் 1895(1895-06-04) (அகவை 62)
பெய்லி விடுதி, தெற்கு கென்சிங்டன், இலண்டன், ஐக்கிய இராச்சியம்
புதைத்த இடம்7 செப்டம்பர் 1895
அரச கல்லறை, ஜொகூர் பாரு, ஜொகூர்
துணைவர்
 • வான் சிக் பிந்தி முகம்மது தாகிர்
 • சுபைதா பிந்தி அப்துல்லா (சிசிலியா கத்தரினா லாங்கே)
 • பாத்திமா பிந்தி அப்துல்லா (வோங் ஆ கியூ)
 • கதீஜா கானும்
குழந்தைகளின்
பெயர்கள்
 • ஜொகூர் சுல்தான் இபராகிம்
 • துங்கு மரியம் (பகாங் தெங்கு அம்புவான்)
 • துங்கு பெசார் புத்ரி
 • துங்கு அசிசா
 • துங்கு பாத்திமா
பெயர்கள்
வான் அபு பக்கர் இப்னி தெமாங்கோங் செரி மகாராஜா துன் டாயாங் இப்ராகிம்
பட்டப் பெயர்
சுல்தான் சர் அபு பக்கர் தெமாங்கோங் செரி மகாராஜா துன் டாயாங் இப்ராகிம்
மரபுதெமாங்கோங்
தந்தைதெமாங்கோங் டாயாங் இப்ராகிம்
தாய்சிக் நகா
மதம்இசுலாம்


சுல்தான் அபு பக்கர் அல்லது ஜொகூர் சுல்தான் அபு பக்கர்; (ஆங்கிலம்: Abu Bakar of Johor அல்லது Sultan Sir Abu Bakar Al-Khalil Ibrahim Shah; மலாய்: Sultan Sir Abu Bakar Al-Khalil Ibrahim Shah ibni Almarhum Temenggong Seri Maharaja Tun Daeng Ibrahim Al-Aydarus); (பிறப்பு: 3 பிப்ரவரி 1833; இறப்பு: 4 சூன் 1895) என்பவர் ஜொகூர் மாநிலத்தின் ஜொகூர் தெமாங்கோங் ஆவார். இவர் நவீன ஜொகூரின் 1-ஆவது சுல்தான்; ஜொகூர் மாநிலத்தின் 21-ஆவது சுல்தான்; மற்றும் தெமாங்கோங் வம்சாவளியில் ஜொகூர் மாநிலத்தின் முதல் மகாராஜா ஆவார்.[1][2]

19-ஆம் நூற்றாண்டில், ஜொகூர் மாநிலத்தின் வளர்ச்சிக்கு, சுல்தான் அபு பக்கரின் தலைமைத்துவம் சிறப்பான அங்கீகாரம் வழங்கியதால், சுல்தான் அபு பக்கர் நவீன ஜொகூரின் தந்தை (The Father of Modern Johor) என்று அழைக்கப்படுகிறார். ஜொகூர் மாநிலத்தின் வேளாண் துறையில் வளர்ச்சியைக் கொண்டு வரும் நோக்கத்தில், சீன இனத் தொழில்முனைவோருக்கு உதவிகளை வழங்கினார். சீன மக்கள் 1840-களில் தென்நடு சீனாவிலிருந்து ஜொகூருக்கு வந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேளாண் துறைகளில் ஈடுபட்டனர்.

ஜொகூர் மாநிலத்தின் உள்கட்டமைப்பு, நிர்வாக அமைப்பு, இராணுவம் மற்றும் பொதுச் சேவை ஆகியவற்றின் மேம்பாட்டிற்கும், சுல்தான் அபு பக்கர் சிறப்பான பங்களிப்புகளை வழங்கியுள்ளார். ஜொகூர் மாநிலத்தில் தோற்றுவிக்கப்பட்ட அனைத்துக் கட்டமைப்புகளும் மேற்கத்திய பாணியில் வடிவமைக்கப்பட்டன.[3]

பொது

[தொகு]

சுல்தான் அபு பக்கர் அவரின் அரசதந்திர திறமைகளுக்காக, மலேசிய வரலாற்றில் அறியப்பட்டவர். பிரித்தானிய ஆட்சியாளர்களும்; மற்றும் மலாய் ஆட்சியாளர்களும் முக்கியமான முடிவுகளை எடுப்பதற்கு முன்னர், இவரின் அறிவுரைகளுக்காக அவரை நாடுவது வழக்கமாக இருந்தது.

இவர் ஒரு தீவிரப் பயணியாகவும் இருந்தார். இவர்தான் ஐரோப்பாவிற்கு பயணம் செய்த முதல் மலாய் ஆட்சியாளர் ஆவார். 1866-ஆம் ஆண்டில் அவரின் முதல் இங்கிலாந்து பயணம் அமைந்தது. சுல்தான் அபு பக்கர், விக்டோரியா மகாராணியின் வாழ்நாள் நண்பரானார். விக்டோரியா மகாராணியுடன் அபு பக்கரின் நட்பு, பிரித்தானியப் பேரரசுடன் ஜொகூரின் அரச உறவுகளை வடிவமைப்பதில் முக்கியப் பங்கு வகித்தது.

ஐரோப்பிய பழக்கவழக்கங்கள்

[தொகு]

19-ஆம் நூற்றாண்டில் தீபகற்ப மலாயாவில் தன்னாட்சி உரிமை பெற்ற ஒரே மாநிலமாக ஜொகூர் மட்டுமே இருந்தது. அந்தக் கட்டத்தில் பிரித்தானிய காலனித்துவ அரசாங்கம், மலாயா கூட்டமைப்பு மாநிலங்களில் மீது அதிக அளவில் கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு பிரித்தானிய ஆளுநர் நிர்வாகப் பொறுப்புகளில் நியமிக்கப்பட்டார்.

ஆனால், ஜொகூர் மாநிலத்தில் மட்டும் பிரித்தானிய ஆளுநர் முறைமை உடனடியாக அமல்படுத்தப்படவில்லை. அங்கே ஆளுநர் முறைமை அமல்படுத்தப் படுவதற்கு நீண்ட காலம் பிடித்தது.[4]

சுல்தான் அபு பக்கரின் தனிப்பட்ட பழக்கவழக்கங்கள், பெரும்பாலும் ஐரோப்பிய பாணிகளில் சார்ந்து இருந்தன. அத்துடன் அவரின் தனிப்பட்ட விருப்பங்கள், பெரும்பாலும் ஐரோப்பிய பாரம்பரிய நாகரிகக் கலவைகளைச் சார்ந்து இருந்தன.

மகாராஜா அபு பக்கர்

[தொகு]

1862-இல் சுல்தான் அபு பக்கரின் தந்தை தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் இறந்த பின்னர், அபு பக்கர் ஜொகூரின் ஆட்சியாளரானார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சட்டப்பூர்வ தெமாங்கோங் பட்டத்தை மகாராஜா என்று மாற்றினார். 1885-ஆம் ஆண்டில், அபுபக்கர் தன் மகாராஜா பட்டத்தை சுல்தான் என்று மாற்றினார். பின்னர் அவர் 1886-இல் ஜொகூர் சுல்தானாக அறிவிக்கப்பட்டார். அபு பக்கரின் ஆட்சி 32 ஆண்டுகள் நீடித்தது. அவர் 1895-இல் இறந்தார்.[5]

பிறப்பு வளர்ப்பு

[தொகு]
மகாராஜா அபுபக்கர்

சுல்தான் அபு பக்கரின் இயற்பெயர் வான் அபு பக்கர். 1833-ஆம் ஆண்டு பிப்ரவரி 3-ஆம் தேதி சிங்கப்பூரில் உள்ள தெலுக் பெலாங்கா இசுதானா லாமா அரண்மனையில் பிறந்தார். இவர் தெமாங்கோங் டாயாங் இப்ராகிமின் மூத்த மகன் ஆவார். அபு பக்கர் தன் குழந்தைப் பருவத்தை சிங்கப்பூரில் உள்ள தன் தந்தையின் கிராமத்தில் கழித்தார். சிறு வயதிலேயே உள்ளூர் ஆசிரியர்களால் இசுலாம் மற்றும் அடாட் எனும் மலாய் சமூகப் பழக்கவழக்களைப் பற்றி பயிற்றுவிக்கப்பட்டார்.

தெலுக் பெலாங்கா மலாய் பள்ளிக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவர் ஒரு கிறித்துவ ச்மயப் பள்ளிக்கு அனுப்பப்பட்டார். அந்தச் சமயப் பள்ளி ஒரு சமயப் போதகரால் நடத்தப்பட்டது. அவர் பெயர் அருள்திரு பெஞ்சமின் பீச் கீசுபெர்ரி. சமய ஆசிரியர்களின் வழிகாட்டுதலின் கீழ், அபு பக்கருக்கு ஆங்கிலேயரின் பழக்க வழக்கங்கள் கற்பிக்கப்பட்டன. அவர் சரளமாக ஆங்கிலம் மொழியில் பேசக் கற்றுக் கொண்டார்.[6]

திருமணம்

[தொகு]

அவரின் தந்தைக்கு வயதாகத் தொடங்கியதும், ஜொகூர் மாநில நிர்வாகப் பொறுப்புகளில் அபு பக்கர் படிப்படியாக நியமிக்கப்பட்டார். இந்த காலக்கட்டத்தில், பல பிரித்தானிய அதிகாரிகள் அபு பக்கரின் சிறந்த அரசதந்திரத் திறமைகளைப் பாராட்டினர்.[7] அபு பக்கர் 1860-இல் பகாங் சுல்தான் துன் முதாகிரின் மகளை மணந்தார்.[8]

இதற்கிடையில், அபு பக்கரின் தந்தை தெமாங்கோங் டாயாங் இப்ராகிம் நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். கடுமையான காய்ச்சலுக்குப் பிறகு அவர் 1862 ஜனவரி 31 அன்று இறந்தார்.[9]

நிர்வாகம்

[தொகு]
உதுமானியப் பேரரசைச் சேர்ந்த அபு பக்கரின் நான்காவது மனைவி கதீஜா கானுன்.

அபு பக்கர் தன் தந்தை மறைந்த மூன்று நாட்களில் ஜொகூர் தெமாங்கோங் பதவியேற்றார்; மற்றும் அவரின் இல்லத்தை சிங்கப்பூரில் உள்ள டைர்சால் எனும் இடத்திற்கு மாற்றினார். தற்போது இந்த இடம் டைர்சால் பார்க் என்று அழைக்கப்படுகிறது.[10]

அபு பக்கர் பதவிக்கு வந்த நேரத்தில், முன்னர் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் சுல்தான் மகமூத் முசாபர் சா என்பவரிடமிருந்து அரசியல் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டார். ஜொகூர் மற்றும் பகாங் மீது சுல்தான் மகமூத் முசாபர் சா, தன் இறையாண்மை உரிமைகோரலைத் தொடர்ந்தார். அத்துடன் சயாம் நாட்டு ஆதரவுடன் திராங்கானு சுல்தானைப் பதவியில் இருந்து அகற்றுவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தார். [11]

சீனர்களின் கஞ்சு முறை

[தொகு]

இப்படிப்பட்ட பற்பல உள்நாட்டுப் பிரச்சினைகளை அபு பக்கர் மிகச் சாதுர்யமாக கையாண்டார். அவரது ஆட்சியின் முதல் இரண்டு ஆண்டுகளில், அவரின் தந்தையார் டாயாங் இப்ராகிம் கொண்டு வந்த கஞ்சு முறையை (Kangchu System) விரிவுபடுத்தினார். கஞ்சு முறை என்றால் 19-ஆம் நூற்றாண்டில் ஜொகூர் மாநிலத்தில் சீனர்களால் உருவாக்கப்பட்ட ஒரு சமூக-பொருளாதார அமைப்பு ஆகும்.[12]

ஜொகூர், பொந்தியான் ஆற்றங்கரை பகுதிகளில் தோட்டங்களை நிறுவிய காப்பித்தான் சீனா தலைவர்களுக்கு மேற்கத்திய பாணியிலான ஒப்பந்தங்களை வழங்கினார். பொதுவாகவே இவரின் ஆட்சிக் காலத்தில் ஜொகூர் மாநிலம் ஒரு செழிப்பான நிலையை அடைந்தது.

ஜொகூரில் இருந்த காப்பித்தான் சீனா தலைவர்களுக்கும்; சிங்கப்பூரில் இருந்த சீனத் தலைவர்களுக்கும்; சிங்கப்பூரை ஆட்சி செய்த பிரித்தானியர்களுக்கும் இடையே அடிக்கடி மனக்ச் ச்கசப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை சுல்தான் அபு பக்கர் நல்ல முறையில் தீர்வு கண்டார்.[13] இவரின் ஆட்சி, ஜொகூர் மாநிலத்தின் வரலாற்றில் ஒரு வரலாற்றுத் தடத்தைப் பதித்துச் செல்கிறது.[14]

ஜொகூர் விருதுகள்

[தொகு]

பன்னாட்டு விருதுகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்

[தொகு]
 1. Winstedt, A History of Johore (1365–1941), pg 136
 2. [https://web.archive.org/web/20090227103303/http://www.irda.com.my/pdf/cdp/16._Chapter13_-_Johor_Bahru_City_Centre.pdf பரணிடப்பட்டது 27 பெப்பிரவரி 2009 at the வந்தவழி இயந்திரம், ISKANDAR MALAYSIA, pg 6
 3. Winstedt, A History of Johore (1365–1941), pg 117, 121
 4. Ismail, Fauziah, He is a ‘Datuk’... but it’s not ‘Sir Shahrukh’, 14 December 2008, New Straits Times, JohorBuzz
 5. Milner, The Invention of Politics in Colonial Malaya, pg 208
 6. Jessy, History of Malaya (1400–1959): 1400–1959, pg 225
 7. Winstedt, A History of Johore (1365–1941), pg 107
 8. Nadarajah, Johore and the Origins of British Control, pg 20
 9. Turnbull, The Straits Settlements, 1826–67: Indian Presidency to Crown Colony, pg 286
 10. Tregonning, A History of Modern Malaya, pg 153
 11. Winstedt, A History of Johore (1365–1941), pg 117, 121
 12. Lim, Wong Ah Fook: Immigrant, Builder and Entrepreneur, pg 46–7
 13. Lim, Wong Ah Fook: Immigrant, Builder and Entrepreneur, pg 81–2
 14. Lim, Wong Ah Fook: Immigrant, Builder and Entrepreneur, pg 61

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]